அரச துணைக் குழுவிலிருந்து தேசிய அரசிலுக்கு : ஈ.பி.டி.பி யின் திரிசங்கு நிலை

அவசரகால நீடிப்புப் பிரேரணை தொடர்பான விவாதங்களிற்காக பாராளுமன்றம் வியாழக்கிழமை கூடியபோது, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார் அதனை எதிர்த்து உரையாற்றிய போதும் அவசராகலச் சட்டத்திற்கான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கவில்லை.

பாராளுமன்றத்தில் பேசிய எம். சந்திரகுமார் ‘நாம் உணர்வு பூர்வமாககவும் அறிவுபூர்வமாகவும் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறோம்.

ஆனால், நடைமுறை நிலைமையில் இது தவிர்க்க முடியாத தேiவாயகவும் இருக்கிறது என்பதை வருத்தத்துடன் இங்கே கூறிவைக்கின்றேன்” எனப் பேசியிருக்கிறார்.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறைகள் குறையாமல் மேலும் வலுப்பெற்று வரும் நிலையை அடுத்து ஈ.பி.டி.பி உறுப்பினர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.புலிகளை அழித்த பின்னர் அரசிற்கு எதிராகப் போர்க் குரல் எழுப்புவதாகக் கூறிய ஈ.பி.டி.பி தலைமை  மீதான நம்பிக்கை கேள்விகுரிதாகியுள்ளதாக  தகவல்கள் வெளியாகின்றன. ஆயினும் அவர்கள் அரசுடன் இணைந்து செயற்பட்டு வாழும் வாழ்வினை கைவிடத் தயாரில்லை.

தகவல்  : விஜய்

One thought on “அரச துணைக் குழுவிலிருந்து தேசிய அரசிலுக்கு : ஈ.பி.டி.பி யின் திரிசங்கு நிலை”

  1. ம் எதிர்த்து வாக்களித்தால் உங்கள் தலைவனே வெள்ளை வான் அனுப்பி உங்களை அன்புடன் கவனித்திருப்பார்.  ஏதோ கிடைக்கும் எலும்புத் துண்டங்களுக்கு குறைவில்லாது செஞ்சோற்றுக் கடன் தீர்த்து விட்டீர்கள்.  புலலரிக்கின்றது. உங்கள் சேவையைப் பார்த்து.தூ..!

Comments are closed.