அரச செலவில் ஒப்பனை

இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு ஆர். பிரமதாஸா விளையாட்டரங்கில் நடைபெறும் இராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்ளவிருந்த ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நேற்று முன்தினம் பிற்பகல் 4.30 முதல் 5.30 வரை அலரி மாளிகையிலிருந்து பிரேமதாஸ விளையாட்டரங்கு அமைந்துள்ள அருகிலுள்ள வீதிகள் மூடப்பட்டதால் அலுவலகப் பணி முடிவடைந்து வீடு செல்லும் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
சுமார் 5 நிமிடங்கள் மாத்திரமே வீதியை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் சிரந்தி ராஜபக்ஷவின் ஒப்பனை நடவடிக்கைகளுக்கு அதிக காலம் சென்றதால் இந்தத் தாமதம் ஏற்பட்டதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீதித் தடை காரணமாக தொடருந்தில் பயணிக்கும் பலர் தமது நேரத்திற்குரிய தொடரூந்துகளை தவறவிட்டு, நள்ளிரவு வரை கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் காத்திருந்துள்ளனர்.
-லங்கானியூஸ்வெப்