அரச உளவாளி கே.பியின் அரச ஆதரவுப் பிரசாரம் – காணொளி

இலங்கை அரசு பதினைந்தாயிரம் கைதிகளை எங்கு வைக்கப்படிருகிறார்கள் என்று தெரியாமலே சிறைக்கூடங்களில் அடைத்துவைத்திருக்கிறது. அவசரகாலச் சட்டம் மீதான வாக்கெடுப்பின் போது இலங்கைப் பிரதமர் கைதிகளை விடுதலை செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார். அவர்களை விடுதலை செய்வது ஆபத்தானது என கருத்துத் தெரிவித்த அவர் முகாம்களிலேயே பல விடுதலைப் புலிகள் பதுங்கியிருப்பதாகக் கூறுகிறார்.
இவ்வாறு இனச்சுத்திகரிப்பு ஒன்றைத் திட்டமிட்டு நடத்தி வரும் இலங்கை சோவனிச அரசு தனது பாசிச முகத்தை மறைப்பதற்காக அணிந்து கொள்ளும் முகமூடி தான் சில காட்சிக் கூடங்கள். அவ்வாறான காட்சிக் கூடங்களில் குறித்த் தொகைக் கைதிகளை மறுவாழ்வு வழங்குவது போல் பராமரிக்கின்றனர். ஊடகங்களில் வெளியிடவும், உரிமை அமைப்புகளுக்குக் காண்பிக்கவும் அவ்வாறான நிலையங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களை காட்சிப்படுத்திக்கொண்டு ஏனையோரை அழிக்கும் இலங்கை அரச பாசிசம் தொங்குதசைகளை இங்கு காணலாம்.
கே.பி என்ற இலங்கை அரச உளவாளிகளோடு அவரின் எடுபிடிகளான சார்ள்ஸ் அன்டனிதாஸ், விமலதாஸ்,  பேரின்பநாயகம் உட்பட ஏனையோர் இலங்கை அரசின் ஊதுகுழல்களாகத் தொழிற்படுவதைக் காணலாம்.

இதில் ஒரு படி மேலே சென்று  அரசாங்கம்  கைதிகளை அடைத்து வைத்திருப்பதை நியாயப்படுத்தி  இனப்படுகொலை நிகழ்த்திய மகிந்தவிற்கு நன்றி கூறுகிறார்.   கைதிகள் எங்கே தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்  என்ற குறைந்த பட்ச விபரங்களைக் கூட வெளியிட மறுக்கும் இலங்கை அரசிடமிருந்து  அவற்றைப் பெற்றுக்கொள்கின்ற அளவிற்க்குக் கூடப் பேச மறுக்கும் இந்தத் தொங்குதசைகள்  தமிழ்ப் பேசும்  மக்களின்  சாபக்கேடு.

4 thoughts on “அரச உளவாளி கே.பியின் அரச ஆதரவுப் பிரசாரம் – காணொளி”

  1. relaxed Positive mind generation.  Look at the LTTE boys and girls face, how they look peacefully. No killing anger or impatience. God bless them. KP also looks relaxed and fresh healthier. All for good. LTTE took them away from school . SL Government put them back to school.

  2. முகங்கள எல்லாம் அட துரோகி உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணீ எங்கள இந்த பன்றீக் கூட்டத்துக்கு மத்தியில வாழுற வாழ்க்கைக்கு உள்ளாக்கி விட்டாயே, நீ இப்படி ஒரு நரியா? என்றூதான் வாசிக்க தோன்றூகிறது.நாங்களூம் இத்தனையும் கடந்துதான் அக்தியாக வந்து சேர்ந்தோம்.சும்மா பேய்க்கத கதையாதே கே.பி உன்னை தன்ர அண்ணனாய்த்தானே அந்த மதிவ்தனித் தங்கைச்சி நினைத்திருக்கும் அந்த பாலச்சந்திரன் என்ற பையனையும் கொலைக்களம் அனுப்பி வைத்த பாவியே என்றே உண்மையில் என் மனது நினைத்தது ஆனால் யார் குற்றீயும் அரிசி ஆனால் சரி எனும் தமிழர் நல்ம் முன்னே வ்ந்து நிற்கும் போது கே,பியும் பேரின்பநாய்கமும் பிறரும் பேசுவதைக் கவ்னிக்கிறது,

  3. கற்பனையில் கரடி விடும் ஊட் கங்களீல் சில் கே.பி சித்திரவதை செய்ய்ப்படுவதாய் எழுதின,உருத்திர குமாரனும் அவரைக் கைதி என்றூ காது குத்துகிறார் ஆனால் கே.பியோ வெறீகாரன் மாதிரிக் கதைக்கிறார்.வை.எம்.சி யில் வம்பளக்கிறவர்கள் போல் உல்லாசமாக் இருக்கிறார்கள், இன்னும் எங்கள என்ன கேணப்பய்ல்கள் என்றா நினைத்து விட்டார்கள் என் மனசு துடிக்குது ஆனால் வார்த்தைகள் உதட்டுக்குள் மட்டுமே இருக்கிறது.என்ன செய்வது அரசியல் ஈரமற்ற் நெருப்பு இங் கே பாசங்கள் கூட வேசங்கள்தான்.பேய்க்காட்டுபவர்க்ளே பிழைத்துக் கொள்கிறார்க்ள். அதுவெல்லாம் இருக்க எங்கள் நண்பர் அதிர்வு எங்.கே அவ்ர் தமிழைப் படித்து நாளாகிறது,தோட்டா வையும் காண்வில்லை.ஜேம்ஸ் எங்கே சார் காணோம்,வாங்க் சார் ப்ழகலாம்,பகிர்ந்துண்ணலாம்.

Comments are closed.