அரச ஆதரவுடன் ஆள்கடத்தல்

இலங்கையில் இடம்பெறுகின்ற ஆட்கடத்தல்கள் அனைத்தும் அரசாங்கத்தின் அனுசரணையிலேயே இடம்பெறுவதாக ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரசார செயலருமான விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தில் அங்கத்துவராக உள்ள டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான மட்டக்களப்பில் ஈ பி டி பியினால் கடத்திச்செல்லப்பட்ட ஒருவர் பின்னர் காவல்துறையினரால் சடமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் கொழும்பிலும் அரசாங்கத்தின் ஆதரவிலேயே கடத்தல்களும் கொலைகளும் இடம்பெறுவதை உறுதிப்படுத்தவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகரி;த்து வரும் கடத்தல்களும் கொலைகளும் இலங்கையின் ஜனநாயகத்தை கொலை செய்வதற்கு சமன் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் இன்று கடத்தல்கள் காரணமாக பயந்த சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இன்று தமிழர்கள் பெருமளவாக வாழும் இடங்களில் வெள்ளை வேன் கலாசாரம் அதிகரி;த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.