அரசு தரப்பினரோடு விருந்துண்ணும் கே.பி : ரனில்

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது, வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளை படையினர் சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்திய கே பி எனப்படும் குமரன் பத்மநாதனை விசும்பாயவில் வைத்துள்ளதாகவும், அவருடன் அரசதரப்பினர் ஒன்றாக இருந்து மது அருந்தி விருந்துண்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்களை படையினர் சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தியுள்ள குமரன் பத்மநாதன் மீது அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது எனவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

படைத்தரப்பு காவலில் உள்ள கே பி தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.