அரசு இராணுவத் துருப்புகளுக்கு பதிலாக தனியார் இராணுவம் என்ற புதிய கருத் துருவாக்கம்!

12.10.2008.

இராக் போரினால் உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக அமெரிக்காவில் இந்த யுத்தத்திற்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றன. எனி னும் அங்கு கொட்டிக் கிடக்கும் எண்ணெய் வளமும், மறு கட்டமைப்பிற்கான ஒப்பந்தங் கள் மூலம் கிடைக்கும் பணமும் இராக்கி லிருந்து நகரவிடாமல் செய்து வருகின்றன, உள் நாட்டில் எதிர்ப்பையும் சமாளித்து இந்த கொள்ளையையும் தொடர இருக்கவே இருக்கிறது. ‘அவுட்-சோர்சிங்’. எனவே அரசு இராணுவத் துருப்புகளுக்கு பதிலாக தனியார் இராணுவம் என்ற புதிய கருத் துருவாக்கம் பிரபலமாகி வருகிறது.

இந்த தனியார் இராணுவ நிறுவனங்கள் ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளி லிருந்து பல்லாயிரக்கணக்கான முன்னாள் இராணுவ வீரர்களை வேலைக்கு எடுக்கின் றன. பெரு, சிலி, ஃபிஜி மற்றும் நேபாளம் போன்ற வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் நிறைந்த நாடுகளிலிருந்தே அதிக அளவில் ஆட்கள் வேலைக்கு எடுக் கப்படுகின்றனர். இவர்களது மாத சம்பளம் 1000 முதல் 3000 அமெரிக்க டாலர்கள் வரை உள்ளது. இதுவே ஒரு அமெரிக்க வீரருக்கு ஒரு நாளைக்கு 1000 அமெரிக்க டாலர்கள் வரை கிடைக்கிறது. நாடு ஏழையாக இருக்க இருக்க சம்பளமும் குறைவு.

இதில் அமெரிக்க அரசாங்கத்திற்கு இரண்டு நோக்கங்கள் நிறைவேறும். ஒன்று வீரர்கள் எவ்வளவு பேர் இறந்தாலும் அவர் களுக்கு கவலையில்லை. இரண்டாவது ஏகா திபத்தியத்தின் ஒரே நோக்கமான லாபத்தை குவிக்க இதைவிட சிறந்த வழி அவர்களுக்க வேறொன்று இல்லை. அரசாங்கம் மக்களுக்கு அவர்களின் பிள்ளைகள் இறந்ததற்காக பதில் சொல்லவேண்டிய கடமை இல்லை. இந்த தனியார் இராணுவ நிறுவனங்கள் அமெ ரிக்க மக்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். தங்கள் பிள்ளைகள் பிணமாகத் திரும்புவதை மக்கள் எதிர்த்ததால்தான் இவர்களுக்கு இந்த லாபம் கொழிக்கும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

இந்த தனியார் இராணுவ நிறுவனங்கள் வீரர்களின் உயிர்களைக் குப்பைகள் போல் மதிக்கின்றன. இவர்களைக் கட்டுப்படுத்த எந்த சட்டதிட்டமும் இல்லாத நிலையில் காயம் ஏற்பட்டால் உரிய மருத்துவ சிகிச் சையோ இறந்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட நஷ்ட ஈடோ வழங்கப்படுவதில்லை. இது ஒருபுறமிருக்க இந்த வீரர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பியதும் பெரும்பாலா னோர் அங்கு மனித உரிமைகளை மீறிய அடாவடித்தனமான செயல்களில் ஈடுபடு கின்றனர்.

இது வேலையில் உள்ளபோது அங்குள்ள அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத் தும் தாக்குதல்கள் மற்றும் அட்டூழியங்களின் தொடர்ச்சியே. இதனால் தங்கள் சொந்த நாட்டிலேயே ஒரு விஷச் சூழல் உருவாகக் காரணமாகின்றனர். இதற்கு சிலி ஒரு உதாரணம். அங்கிருந்துதான் அதிக அளவில் இந்த தனியார் இராணுவ நிறுவனங்களுக்கு ஆட்கள் வேலைக்குச் செல்கின்றனர்.

இத்தொழிலில் வருடத்திற்கு சுமார் ரூ.4.5 லட்சம் கோடி பணம் புழங்குகிறது. அமெரிக் காவின் வரி வருமானத்தில் 40 சதவிகிதம் இராணுவத்திற்கே செலவிடப்படுகிறது. இதில் இராக்கில் மட்டும் ஒரு வாரத்திற்கு ரூ.9000 கோடி செலவிடப்படுகிறது.

எந்தவொரு நாகரீகமடைந்த நாட்டிற்கும் தன் இராணுவ பலத்தை மோதல்களைத் தவிர்க்கவும், கூடுமானவரை குறைக்கவும் பயன்படுத்துவது என்பதே நோக்கமாக இருக்க முடியும். ஆனால் இங்கோ இது ஒரு லாபம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது.

பாதுகாப்பின்மையின் தீவிரத் தன்மை வளர வளர லாபம் அதிகரிக்கும் என்பதால் இந்த அச்சுறுத்தல் குறைவதை ஏகாதிபத்தி யம் விரும்பாது. எந்த அச்சுறுத்தலும் இல்லை யென்றாலும் அவர்கள் தங்கள் லாபத்திற்காக அப்படி ஒன்றை உருவாக்கவும் தயங்க மாட்டார்கள். அதுவே முதலாளித்துவத்தின் குணாம்சமாகும்.

அரிந்தம் சவுதரி ‘சண்டே இந்தியனில்’ எழுதியதன் தமிழாக்கம்:சோபனா சேலம்
.