அரசியல் வாதிகளுக்கு பயிறிசியளிக்க தனியான நிறுவனம் அமைக்கப்படும். ?!!!

அரசியல் வாதிகளுக்கு பயிற்சி அளிக்க தனியான நிறுவனமொன்றினை அமைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதாக ஆங்கில தினசரியில் செய்தி வெளியாகியிருக்கிறது. கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், பல அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அரசியல் வாதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக நிறுவனங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டதுடன் இலங்கையில் அத்தகைய நிறுவனமொன்றுக்கான தேவை இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.