அரசாங்கம் 6 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளதாக பொய்ப் பிரசாரம் : ஜே.வி.பி.

மெனிக்பார்ம் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் 6 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளதாக அரசாங்கம் உலகம் முழுவதும் பொய்ப் பிரசாரம் செய்துவருவதாக இடம்பெயர்ந்த முகாம்களிலுள்ள மக்களின் சிரமங்களை ஆராயும் மத்திய நிலையத்தின் இணைப்பாளரும் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களின் எல்லைக்கிராமங்களில் 2000 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ள அரசாங்கம், 40 ஆயிரம் பேரை யாழ்ப்பாணம் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
மேலும், வவுனியாவில் குறிப்பிட்ட சில முகாம்களிலுள்ள 70,000 பேருக்கு 200 மலசல கூடங்கள் மாத்திரமே இருப்பதாகவும் இவர்களில் ஒருவருக்கு இரண்டு நாளைக்கு அனைத்துத் தேவைகளுக்கும் 15 லீட்டர் நீர் மாத்திரமே வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.