அயோத்தி தீர்ர்பிற்கு எதிராக திருமாவளவன் அறிக்கை

காங்கிரஸ்கட்சியோடு தேர்தல் கூட்டு வைத்துக்கொண்ட திருமாவளவன் அயோத்திப் பிரச்சனை குறித்த நீதிமன்றத் தீர்ர்பு ஒருதலைப்பட்சமானது என அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.

450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949இல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும், 1992இல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள்.

ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும், ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும். இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது. மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.

அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது. பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப்பெரும் மோடியாகும். ஏற்கனவே நம்பிக்கை இழந்து விரக்தியில் வாழும் இ‌ஸ்லாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.

இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது சனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகின்றது. பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிர‌ஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற சனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது.

7 thoughts on “அயோத்தி தீர்ர்பிற்கு எதிராக திருமாவளவன் அறிக்கை”

  1. அரசியல் ட்ராமா ஆடுகிற அண்ணன் திருமாவுக்கு அறீக்கைகள் அவசியம் ஆனால் அக்பர் காலத்தில் கட்டப்பட்ட மசூதி ஒரு ஆக்கிரமிப்பு எனும் உண்மை மட்டும் ஏன் புரிய மறூக்கிறது? பண்பாடு, நம்பிக்கைகளூக்கு எல்லாம் ஆதாரம் காண்பிக்க முடியாது.உயிர் நரம்பை உலுக்கும் செயலை நீதிமன்றம் செய்திருக்குமானால் இந்தியா தீப்பற்றீ இருக்கும் எனும் அடிப்படை அறீவு கூடவா திருமாவுக்கு இல்லை?பாபர் ஆக்கிரமிப்புச் செய்த இராமர் பூமி மீட் கப்பட்டிருக்கிறது இது தர்மத்தின் வெற்றீ.இனியாவது வோட்டுக்காக நாடகம் ஆடுவதை திருமா விட வேண்டும்.

    1. First of all, there is no proof that the temple existed during Mogul’s period, if Ram janmabhoomi trust had any record, there is no need for the judges to go after assumption, its just superstition. Before wrting some accusation, read the FIR submitted by police on the issue, which is open to all and available, (REF:http://goldee.bharathblog.com/tag/ram-janmabhoomi/)

      1. எங்கள் எண்ணங்கள் உண்மையை நோக்கி இல்லை அதை ஏற்றூக் கொள்ளூம் வகையிலும் இல்லை.அயோத்தி என்பது இராமனுக்கு சொந்தமானது,மக்கா எப்படி முஸ்லீமுக்கு சொந்தமானதோ அப்படி அங்கு மாரியாத்தா கோயிலைக் கட்டி நம்மால் உரிமை கொண்டாட முடியுமா? அக்பர்,பாபா எல்லாம் வந்து ஆக்கிரமிப்புச் சின்னங்கள நிறூவி இன்றூம் அயோத்திக்கு சொந்தம் கொண்டாடுவது எமது உயிர் நரம்பில் கை வைப்பது போன்றது.

  2. திருமா இன்னும் நாடகத்தை நிறுத்தவில்லை 

  3. திருமா அவர்களே பாபர் மசூதி வரலாறு எல்லாம் சரிதான் ,இப்போ நீங்க எங்கே கண்ணு தரிச்சு நிக்கிறீங்க . தியாகத்திரு விளக்கிடம் நேரே கேட்கவேண்டியத்தானே அப்புறம் போராடுவோம் புடுங்குவோம் , நாடகம் முடிஞ்சு இப்போ பரதநாட்டியம் ஆடுறீங்களா, உங்களைப்பற்றி எல்லோருக்கும் நல்லாவே புரிஞ்சுபோச்சு அடக்கி சுறுட்டி வையுங்க,

  4. எங்கே செல்லும் இனியுங்கள் பாதை யாரோ யாரோ அறிவாரோ,

Comments are closed.