அம்பலப்படுத்த வேண்டிய பாஜகவின் கோர முகம்!

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டார்கள் புறப்படுங்கள், என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, கட்சி யினருக்கு உற்சாக மூட்டியிருக்கிறார். ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக இருக்கிறார் களோ இல்லையோ, இவர்கள் எந்த மாற்றமும் அடையவில்லை என்பதே உண்மை.

இந்தியாவை இந்து நாடு என்று மதச் சார்பு ஆக்குவதே இவர்களின் நோக்கம் என்பதிலிருந்து இம்மியளவும் மாறவில்லை. இந்தியா என்பதே இந்துக்களுக்கு மட் டும் தான் என்ற பழைய நிலையிலிருந்து இப்போதும் மாறவில்லை என்பதை ‘இந்து’ நாளிதழுக்கு அண்மையில் அத்வானி அளித்த பேட்டி நிரூபிக்கிறது. இந்தியத்தன்மை என்பதே இந்துத்துவாதான் – பன்முகக் கலாச் சாரத்தை மறுத்து ஒற்றைக் கலாச்சாரத்தை உயர்த்திப்பிடிப்பதுதான் – என்ற பழைய ஜனசங்கத்தின் பிற்போக்குவாதமே தன்னி டம் குடிகொண்டிருக்கிறது என்பதை அத் வானி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதனால்தான் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசும் கட்சியும் நடத்திய கோரப்படுகொலைகளை அத்வானி கலவரம் என்ற சொல்லால் மூடி மறைக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பாஜக பரிவாரம் ஆட்சிக்கு வருவதற்குப் பயன் படுத்திய தந்திரமே மதக் கலவரம் தான். அந்தக் கலவரங்களுக்காக அயோத்தியை நோக்கி ர(த்)தயாத்திரை நடத்தியவர் அத்வானி என்பதில் ரகசியம் ஏதும் இல்லை.

இந்தக் கோரமுகம் கொண்ட அத்வானி தான் இப்போது பாஜகவின் பிரதமர் வேட் பாளர் என அறிவிக்கப்பட்டு வலம் வருகி றார். மிகவும் சிரமப்பட்டு நாகரிக முகமூடி போட்டுக் கொண்டாலும் அவ்வப்போது ஒரிஜினல் மதவெறி நாக்கு வெளியே நீண்டுவிடத்தான் செய்கிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயில் யாத்ரிகர்கள் தங்கும் விடுதிக்கான நிலப் பிரச்சனை யைக் காரணம் காட்டி பாஜக-வும் ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட சங்பரிவாரங்களும் நடத் திய வன்முறைகள் தற்போ தைய அரசியல் பரபரப்பில் அமுங்கிப் போய்விட்டன என்பதுதான் உண்மை. பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் இந் தூரில் மட்டும் 6 பேர் கொல்லப்பட்டுள் ளனர். இஸ்ஸாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்த ஏதாவதொரு காரணம் கிடைக்காதா என்று அலையும் இவர்களின் போக்கு பாஜக ஆளும் மாநிலங் களில் சமீபத்தில் வெளிப்பட்டது.

இந்த நிலையில் தான் நாட்டை அமெ ரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்படுத்தும் அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தால் இடதுசாரிகள் மத்திய அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்ள, மத்திய அரசும் நம்பிக்கை வாக்கு கோரும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனே ஆட்சி கவிழ்ந்து திடீர் தேர்தல் வரப்போகிறது என்று சப்புக் கொட்டத் தொடங்கிவிட்டது பாஜக. இதற்காக வியூகம் வகுக்க அத்வானி சந்தித் திருக்கும் நபர்கள் யார் தெரியுமா? ஆர் எஸ்எஸ் தலைவர் சுதர்சன், வி.எச்.பி. தலை வர் அசோக்சிங்கால், பிரவீண் தொகாடியா ஆகிய இந்து மதவெறித் தலைவர்களைத்தான்.

எனவே அணுசக்தி ஒப்பந்தத்தின் அபாயத்தை விளக்கும் அளவுக்குக் கொஞ் சமும் குறையாமல் மதவெறி சக்திகளின் அபாயத்தையும் மக்க ளிடம் விளக்குவது அவசியம்.