அமைச்சர் ரோஹித்த 450 மில்லியன் ரூபா பணத்தைத் திடீரென எவ்வாறு உழைத்தார்?:பொலிஸார் விசாரணை!

07.09.2008.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களில் ஒன்றான தேச நிர்மாண அமைச்சுப் பொறுப்பை வகிக்கும் ரோஹித்த அபேகுணவர்தன 450 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
அமைச்சர் ரோஹித்த 450 மில்லியன் ரூபா பணத்தைத் திடீரென எவ்வாறு உழைத்தார் என்பது குறித்துப் பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

குறித்த பணத்தொகை உழைக்கப்பட்ட முறைமை குறித்து அமைச்சர் இதுவரையில் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சட்ட ரீதியான கொடுக்கல் வாங்கல்களின் மூலம் குறுகிய காலத்தில் இவ்வாறானதொரு பாரியளவு பணத்தை வருமானமாக ஈட்ட முடியாதெனச் சுட்டிக் காட்டப்படுகிறது.
 
அமைச்சர் ரோஹித்த அபேகுணர்தன தொடர்பில் செய்யப்பட்டுள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.