அமெ. தாக்குதல் : 22 ஆப்கானியர் பலி

அசதாபாத் (ஆப்கானிஸ்தான்), ஜூலை 5-

ஆப்கானிஸ்தான் நாட் டில் அமெரிக்க தலைமை யிலான படையைச் சேர்ந்த விமானம் சாலையில் சென்ற வாகனங்கள் மீது விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தை கள் மற்றும் பெண்கள் உள்பட 22 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள வாண்ட் மாவட்டத்தில் அமெரிக்க விமானப் படை யினர் குண்டு வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். பயங் கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்ட தாக அமெரிக்க விமானப் படை கூறியுள்ளது. ஆனால் இத்தாக்குதலில் இரு வாகனங்களில் சென்று கொண்டிருந்த 22 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ள னர். மாவட்ட நிர்வாக அதிகாரி ஜியாஉல்-ரகுமான் கூறுகையில், தவறுதலாக இத்தாக்குதல் நடைபெற் றிருக்கலாம் என்று தெரி வித்தார். தலிபான்கள் மீது தாக்குதல் நடத்த திட்ட மிட்ட படையினர் பொது மக்கள் மீது குண்டுவீசியுள் ளனர் என்றும் அவர் கூறி னார்.

ஆனால் தவறாக நடை பெற்ற இத்தாக்குதல் குறித்து அமெரிக்கப் படையினர் இதுவரை கருத்து எதுவும் கூறவில்லை.