அமெ.வுடன் அடிமை உடன்பாடு நிறைவேறும் பணியை தொடர்வோம் : பிரதமர் பிடிவாதம்

புதுடில்லி, ஜூன் 30-

இந்திய நலனுக்கு தீங்கு பயக்கும் வகையில் அமைந் துள்ள அமெரிக்காவுட னான அணுசக்தி உடன் பாட்டை நிறைவேற்ற முயற் சித்தால், மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறு வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள் ளிட்ட இடதுசாரிக் கட்சி கள் எச்சரித்துள்ள நிலை யில், உடன்பாட்டை நிறை வேற்றுவதற்கான பணி களை தொடரப் போவதாக பிரதமர் மன்மோகன்சிங் பிடிவாதமாக கூறியுள்ளார்.

உடன்பாட்டை நிறை வேற்றும் வகையில், அணு சக்தி முகமை மற்றும் அணு வர்த்தக நாடுகளுடனான, உடன்பாட்டிற்கான பணி களை தொடர விரும்புவ தாக பிரதமர் கூறியுள்ளார். எனினும், அணுசக்தி முக மை மற்றும் அணு வர்த்தக நாடுகளுடனான உடன் பாடுகளை முடித்த பிறகு இதுகுறித்து நாடாளுமன் றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது என் றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் அணுசக்தி தேவையை பூர்த்தி செய்ய அமெரிக்காவுடனான உடன்பாடு உதவாது. மேலும், சுயேட்சையான அயல்துறை கொள்கையும், நாட்டின் பாதுகாப்பு சார்ந்த கொள்கைகளும் கடும் பாதிப்புக்குள்ளாகும். இந்த உடன்பாடு அமெரிக் காவின் இராணுவ கூட்டணி யில் இந்தியாவை சிக்கவைக் கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக் குழு கூறி யுள்ளது. இந்நிலையில் உடன்பாட்டை நிறை வேற்ற மன்மோகன் சிங் அரசு முயலுமானால் ஆதர வை வாபஸ் பெறுவோம் என்று கட்சி திட்டவட்ட மாக எச்சரித்துள்ளது.

இந்நிலையில், சுற்றுச் சூழலுக்கான தேசிய செயல் திட்ட ஆவணத்தை தனது இல்லத்தில் வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், அணுசக்தி முகமை மற்றும் அணு வர்த்தக நாடுகளுட னான விவாதத்தை நிறைவு செய்து உடன்பாட்டை நிறைவேற்ற அரசை அனு மதிக்க வேண்டும் என்று கூறினார். இந்த உடன்பாட் டின் முடிவு அனைத்துக் கட்சிகளையும் திருப்திப் படுத்துவதாக அமையும் என்றும் அவர் கூறினார்.

இடதுசாரிக் கட்சி களின் எதிர்ப்பில் புதிதாக ஒன்றும் இல்லை என்று ஆணவத்துடன் கூறிய அவர், “நான் மீண்டும் வலி யுறுத்தி கூற விரும்புவது ஒன்றுதான். உடன்பாட்டிற் கான பணிகள் நிறைவேற அனுமதியுங்கள். அதன் பிறகு நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம். நாடாளு மன்றத்தின் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

உடன்பாட்டை நிறை வேற்ற முயன்றால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, “அத் தகைய நிலை வரும் போது அதை நாங்கள் சந்திப் போம்” என்று பிரதமர் பதி லளித்தார்.

விலைவாசி மற்றும் பணவீக்கம் நாட்டு மக்க ளை பெரும் துன்ப துயரத் திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் அமெரிக்காவுட னான அடிமைச் சாசனத் தில் கையெழுத்திடுவதே மன்மோகன்சிங்கின் முன் னுரிமையாக உள்ளது என்ப தையே அவரது பேட்டி தெளிவாக்குகிறது.