அமெரிக்க தேர்தலில் நிறம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்:தேர் தல் பகுத்தாய்வாளர்கள் .

16.10.2008

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நிறம் அவர்களின் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய இடம் பெறும் என்று தேர் தல் பகுத்தாய்வாளர்கள் கரு துகின்றனர்.

கருத்துக் கணிப்புக ளிலே கறுப்பர் ஒபாமா முன்னிலையில் உள்ளார். எதிர்க்கட்சி வேட்பாளர் மக்கெயின் வெள்ளையர் ஆவார். இவர்கள் இருவரின் வெற்றி தோல்வியை நிறமே தீர்மானிக்கும் அவல நிலை மை முன்னேறிய நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் இன்றும் நிலவுகிறது.

மக்கெய்ன் பேசும் பிரச் சாரக் கூட்டங்களில் அவர் நிறத்தைக் கூறிக் கூச்சலிடும் கும்பலை மக்கெய்ன் கண் டிப்பதில்லை என்று ஜார் ஜியா மாகாண ஜனநாயகக் கட்சி பிரதிநிதி ஜார்ஜ் லூயிஸ் கூறுகிறார். குடி யரசுக் கட்சியின் நிறவெறி பற்றி கூற வேண்டிய தில்லை. கத்ரீனா புயலால் பாதிக்கப் பட்ட கறுப்பின மக்களை புஷ் புறக்கணித்தது அண் மைக் கால வரலாறு.

1960களைவிட அமெ ரிக்கா வெகுதூரம் முன்னே றிவிட்டது. ஆனாலும் இன் னும்சில தென் மாநிலங் களில் நிறவெறி முற்றிலும் மறையவில்லை. கறுப்பர் என்பதால் ஒபாமாவுக்கு வாக்களிக்க முடியாது என்ற முணுமுணுப்பு நிலவுவதாக குடியரசுக் கட்சி தலைவர் சவுல் அனுசிஸ் கூறினார்.

கறுப்பருக்கு வாக்க ளிக்க மறுக்கும் வெள்ளை யரின் எண்ணிக்கை குறைந் துவிட்டது என்று ஜனநாய கக் கட்சியின் ஆப்பிரிக்க – அமெரிக்க பிரதிநிதி ஆர்தர் டேவிஸ் சொல்கிறார். ஆனா லும் கூட அமெரிக்கப் பொரு ளாதார நெருக்கடி உள் ளிட்ட பல தத்துவார்த்த விஷயங்களைவிட வேட் பாளர்களின் நிறம் தேர்த லில் முக்கிய இடம் பெறக் கூடும் என்ற கருத்து வலு வாக உள்ளது. ஒபாமாவின் வயது, அனுபவம், பல சிக்க லான பிரச்சனைகளில் அவ ருடைய வெளிப்படையான நிலைபாடு, அவற்றின் மீது நேர்மையான அணுகு முறை, அவருடைய கலாச் சார, தத்துவப் பின்னணி ஆகியவை நிறத்தை வெல் லக்கூடிய அம்சங்கள் என்று குடியரசுக் கட்சியினரே கூறுகின்றனர்.