அமெரிக்க ஆயுத வியாபாரம் இரண்டரை மடங்குக்கு மேல் அதிகரிப்பு!

18.09.2008

நியூயார்க்:
புஷ் ஆட்சிக் காலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக் குள் அமெரிக்காவின் ஆயுத வியாபாரம் இரண்டரை மடங்குக்கும் மேலாக அதி கரித்துள்ளது. உலகெங்கும் போர் பீதியையும் மோதல் களையும் நீடிக்கச் செய்ய அமெரிக்கா ஒரு புறம் முயற் சிக்கிற நிலையில், மறுபுறம் அதன் ஆயுத வியாபாரமும் கொடி கட்டிப் பறக்கிறது.

2005-ல் 1200 கோடி டால ருக்கும் அதிகமாக ஆயுதங் கள் மற்றும் யுத்தக் கருவி களை அமெரிக்கா விற் பனை செய்தது. இந்த ஆண்டு 3,200 கோடி டாலருக்கும் அதிகமாக விற்பனை செய் துள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் கணக்கு கள் கூறுவதாக, நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட் டுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் அரபு நாடுகளின் எண்ணெய்ப் பணத்தை ஆயுதங்களை விற்று அமெ ரிக்கா அபகரிக்கிறது.

சவுதி அரேபியா இந்த பொருளாதார ஆண்டில் குறைந்தபட்சம் 600 கோடி டாலருக்கு ஆயுதங்கள் வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் (யுஏஇ) அமெரிக்காவிடமி ருந்து ஏவுகணைப் பாது காப்புக் கருவிகளை வாங்கு வது குறித்து ஆலோசித்து வருகிறது.

இஸ்ரேல் 190 கோடி டாலருக்கு யுத்தக் கப்பல் களையும், இதர போர்க்கரு விகளையும் வாங்குவது குறித்து பரிசீலித்து வருகி றது. இராக் மற்றும் ஆப் கானிஸ்தானின் ராணுவங் களை வலுப்படுத்துவது என்ற பெயரில் அந்த நாடு களையும் அமெரிக்கா ஆயு தங்களை பெருமளவு வாங் கிக் குவிக்கத் தூண்டுகிறது.

இரண்டரை ஆண்டுக ளில் 1000 கோடி டாலருக் கும், மேல் ஆயுதங்களை வாங்குவதற்கு இராக்கை ஒப்பந்தம் போடச் செய்தது. ஆப்கானிஸ்தான் அரசின் பேரில் 1000 கோடி டாலர் ஆயுதம் வாங்க அமெரிக்க அரசே ஒப்பந்தம் போட் டது. வட ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெ ரிக்கா, ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளிலெல்லாம் அமெரிக்க ஆயுத வியாபா ரம் பரவலாகியுள்ளது.

ஆசியாவில் தென் கொரியா இந்த ஆண்டு 110 கோடி டாலர் ஆயுதம் வாங்க ஒப்பந்தத்தில் கை யெழுத்திட்டுள்ளது. உல கின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவது, பயங் கரவாதத்தை முறியடிக்க கூட்டாளிகளை வலுப் படுத்துவது என்ற பெயரில் ஆயுத வியாபாரத்தை அதி கரிக்கிறது. எனினும் இது உண்மையில் ஆயுதப் போட் டிக்குத்தான் இட்டுச் செல் கிறது என்ற விமர்சனம் கடுமையாக எழுந்துள்ளது.

அமெரிக்க நாடாளு மன்ற பிரதிநிதிகள் சபை யின் (கீழ்சபை) வெளியுறவுக் கவுன்சில் தலைவர் ஹோவார் எல் பெர்மன் இந்த விமர் சனத்தை எழுப்புகின்றவர் களில் முக்கியமானவரா வார். ஆயுத வியாபாரங்கள் ஆயுதப் போட்டிக்கும், இறு தியில் உலகை மேலும் ஸ்திர மற்றதாக்குவதற்கும்தான் வழிவகுக்கும் என்று அவர் கவலை தெரிவித்தார். பாகிஸ் தானுக்கு அளிக்கப்படும் உதவி பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு அல்ல. இந்தியாவுடன் பதட் டத்தை அதிகரிக்கவே வழி வகுக்கிறது என்று அவர் உதாரணத்துடன் சுட்டிக் காட்டுகிறார்