அமெரிக்கா சென்று வந்ததும் பொன்சேகாவுக்கு அதிர்ஷ்டம்!

033அமெரிக்கா சென்று விசாரணைப் பரபரப்புக்களை ஏற்படுத்தித் திரும்பிய முப்படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஒருவகை அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது!

அவருக்கு இப்போது இராணுவத்தின் இரண்டு படையணிகள் பாதுகாப்பு வழங்குகின்றன.

அமெரிக்காவில் இருந்து வியாழக்கிழமை கொழும்பு திரும்பிய ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பிற்காக இரண்டு வெவ்வேறு படையணிகள் நேற்று பாதுகாப்பில் ஈடுபட்டன.

“சிங்கரெஜிமன்ட்” படைப்பிரிவில் பணிபுரிந்த ஜெனரல் சரத் பொன் சேகாவிற்கு இது வரைகாலமும் சிங்க ரெஜிமன்ட் படையணியினரே பாதுகாப்பு வழங்கிவந்தனர். அவர் அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் இராணுவத் தளபதியின் கீழ் இயங்கும் விசேட படையணியினரும் அவரது பாதுகாப்பிற்காக நேற்று அனுப்பிவைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சிங்கரெஜி மன்ட் படையணியினர் தமது முகாமிற்கு செல்ல முடிவு செய்தனர். எனினும் அவர்களைச் செல்லவிடாது தமது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடருமாறு பொன்சேகா உத்தரவிட்டார்.

One thought on “அமெரிக்கா சென்று வந்ததும் பொன்சேகாவுக்கு அதிர்ஷ்டம்!”

  1. ஜெனரல் சரத் பொசெகாவிற்க்கு படையணிப்பாதுகாப்புநல்லது அல்ல். தெர்தலில்ரஜபக்ஷெய்க்குப் போட்டிக்கு ஆள் தயாராகிவிட்டர்ர். பக்ஷெய் சகொதரர்களுக்கு இனி கெடுகாலம் தான்.

Comments are closed.