அமெரிக்கா உளவு அமைப்பான சிஐஏ-வின் தலைவர் புதுதில்லி வந்தார்!

ciaஅமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-வின் தலைவர் லியோன் இ பனேட்டா, சனிக்கிழமை புதுதில்லி வந்தார். அவர் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம். கே.நாராயணனை சந்தித்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இயங்கும் பயங்கரவாதக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தார். இந்தியா – பாகிஸ்தான் விவகாரங்களில் அமெரிக்காவின் நேரடி தலையீட்டின் ஒரு பகுதியாகவே பனேட்டா தில்லி வந்துள்ளார்.