அமெரிக்காவே ‘சர்வாதிகாரி’: இரான் பதிலடி!

தாம் இராணுவ சர்வாதிகாரியாக வருவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியிருப்பதற்கு பதிலடி தந்துள்ள இரான், அமெரிக்கா தான் சர்வாதியாக இருந்து கொண்டு பிறர் மீது குற்றஞ்சாட்டுவதாக கூறியுள்ளது.

இராக்கிலும், ஆப்கானிலும் சண்டையிடுவதற்கு அமெரிக்காதான் வெளிநாட்டுக்கு நூற்றுக்கணக்கான சிப்பாய்களை அனுப்பியதே ஒழிய இரான் அவ்வாறு செய்யவில்லை என்று இரானிய அதிபர் மஃமுட் அஹ்மதிநிஜாத் கூறியுள்ளார்.

தமது நாட்டின் அணுத் திட்டத்துக்கு எதிரான புதிய தடைகளுக்கான அச்சுறுத்தல்களை நிராகரித்துப் பேசிய அவர், அத்தகைய நகர்வுகளினால் தமது நாடு பாதிக்கப்படாது என்றும் கூறினார்.

BBC.

3 thoughts on “அமெரிக்காவே ‘சர்வாதிகாரி’: இரான் பதிலடி!”

  1. இந்த ஈரானிய மன்னர் மீது எத்தனையோ பழிகள் சுமத்தப்பட்டது, எத்தனையோ கடுமையான சொற்பிரயோகங்கள், அத்தனையையும் தாண்டி இன்னும் இரும்பின் உறூதியாய் நிற்கிறார்.அமெரிக்கா குழம்பித்தான் போயிருக்கிறது.

    1. யாரு சாமி “இந்த ஈரானிய மன்னர்” ?

  2. ஏலவே சில,பல நாடுகளுக்கு பொருளாதார தடை விதித்தும் கூட எதையும் சாதிக்க முடியவில்லை!எண்ணெய் வள நாடுகளுடன் மோதுவதில் பயனில்லையென்று தெரிந்தும் கூட மீசையில் மண் படாத கதை தான் வல்லரசுகள் பேசிக் கொண்டிருக்குமென்பது தெரிந்தது தான்!!மிரட்டா விட்டால், மிரட்டி வைத்திருக்கும் நாடுகளுக்கு குளிர் விட்டுப் போய் விடுமே?

Comments are closed.