அமெரிக்காவில் சரத் பொன்சேக்காவும், எம்.கே. நாராயணனும் சந்தித்துள்ளனர்!

fonseka_narayananகூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்கா வொசி ங்டனில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணனைச் சந்தித்துள்ளதாக தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேக்கா உத்தியோகபுர்வமாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் ரொபட் ஓ பிளேக்கைச் சந்திக்கிவருந்த போதிலும், பிளேக் சுகவீனமுற்றிருந்ததால் அந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை.

அதேவேளை, சரத் பொன்சேக்கா உத்தியோகபுர்வ பணிகளுக்கு அப்பால் சந்திக்கும் நபர்கள் குறித்து கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையின்படி புலனாய்வு அதிகாரிகள் பலர் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

One thought on “அமெரிக்காவில் சரத் பொன்சேக்காவும், எம்.கே. நாராயணனும் சந்தித்துள்ளனர்!”

  1. ஓ ஹோ எல்லாம் இந்தியாவின் வேலை தானோ?

Comments are closed.