அமெரிக்காவிற்கே திரும்பிச் செல்ல வேண்டும் என அடம்பிடிக்கும் தேவ்யானி

devyani-khobragade-cryingஅமெரிக்காவின் நியூ யார்க்கில் இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே (39) மோசடி வழக்கில் கைதுசெய்யப்ப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. தேவையானி குற்றமிழைத்தாலும் அவரைக் காப்பாற்ற முனைந்தது. இந்தியாவில் தேவயானி குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ளாதவர்கள் உயர்குடிகளால் தூண்டப்பட்டுப் போராட்டம் நடத்தினர்.
ஊடகங்கள் பொதுவாக தேவயானியையும் இந்தியாவையும் அமரிக்கா அவமனப்படுத்திவிட்டதாகப் புலம்பின. போராட்டம் நடத்திய மக்களையும், தன்னைக் காப்பாற்றி இந்தியாவில் உயர்பதவி வழங்கிய இந்திய அரசையும் அவமானப்பட்டுத்தி மீண்டும் அமெரிக்காவிற்கே செல்லவேண்டும் என்று அடம்பிடிக்கிறார் தேவயானி.

மேலும், தேவயானிக்கு தூதரக ரீதியிலான சிறப்பு சலுகைகளும், விலக்கு உரிமைகளும் வழங்கப்பட்டது. அடைந்த அமெரிக்கா அவற்றை திரும்ப பெறுமாறு இந்தியாவை வலியுறுத்தியது. ஆனால் முடியாது என இந்தியா மறுத்து விட்டது.

எனவே நியூயார்க் கோர்ட்டில் தேவயானி ஆஜர் ஆகாத நிலையில் நேற்று முன்தினம் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை நாட்டை விட்டு அமெரிக்கா வெளியேற்றியது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தேவயானி நாடு திரும்பினார்.

விதிவிலக்கு உரிமையை தேவயானி இழந்து விட்டதால் விசா மற்றும் குடியுரிமை நடை முறைகளில் தேடப்படும் நபராக குறிக்கப்படுவார். அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், சாதாரணமான முறையில் அமெரிக்காவுக்கு வரவும் தேவயானியை அனுமதிக்க மாட்டோம். மீறி வந்தால் அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் என்றும் நேற்று அமெரிக்கா மிரட்டியுள்ளது.

இந்தியா திரும்பியுள்ள தேவயானியை டெல்லியில் உயர்பதவியுடன் பணியமர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விமானநிலயத்தில் வந்திறங்கிய தேவ்யானி செய்தியாளர்கள் முன் கண்ணீர்விட்டு அழுதார். அவர் எதற்காக அழுதார் என்பது பின்னர் தெளிவாகத் தெரிந்தது.
நியூ டெல்லியிலுள்ள ஆங்கிலப் பத்திரிகதேவி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தேவ்யானி தெரிவித்ததாவது

‘தொடர்ந்து தான் அமெரிக்காவிலேயே பணிபுரிய வேண்டும். மகள்களும் அங்கேயே தங்கி படிக்க வேண்டும் என்று எனது கணவர் முடிவு செய்து விட்டால் அமெரிக்காவுக்கு நான் செல்லவே முடியாது என்ற நிலையில் எங்கள் குடும்பம் ஒன்றும் வாய்ப்பே கிடையாதா? என்பதை நினைத்துப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.

எனது 4 மற்றும் 7 வயது மகள்கள் இருவரும் என்னைவிட்டு பிரிந்து இருந்ததே கிடையாது. நான் திரும்பவும் அமெரிக்காவுக்கு செல்ல முடியாது என்பதை புரிந்துக் கொள்ள முடியாத வயதில் இருக்கும் எனது மகள்களை நினைத்து நான் மிகவும் கவலைப்படுகின்றேன்.

இந்தியாவுக்கு வந்த பிறகு அவர்களுடன் நீண்ட நேரம் போனில் பேசினேன். ’அம்மா.. நீங்கள் எப்போது வீட்டுக்கு வருவீர்கள்?’ என்று எனது இளைய மகள் கேட்டாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் கண்ணீருடன் வாயடைத்து நின்றுவிட்டேன். உதவிக்கு கூட யாருமின்றி என் மகள்களை கணவரிடம் ஒப்படைத்து விட்டு வந்துள்ளேன்.

குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்ற அவர் என்ன சிரமப்படுகிறாரோ..? என்னை பார்க்க முடியாமல் எனது மகள்கள் எப்படி தவித்துக் கொண்டிருக்கிறார்களோ.. இந்நேரம் என்ன செய்கிறார்களோ’ என்பதை நினக்கும்போது என்னால் துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘
தன்னை கைது செய்து நிர்வாணமாக்கி அவமானப்படுத்திய அமெரிக்காவிலேயே மீண்டும் குடியேறவேண்டும் என்று அடம்பிடிக்கும் தேவயானி மறுபுறத்தில் இந்தியாவில் வாழ மறுக்கிறார். இதனால் இந்தியக் கலாசாரத்தின் மீதும், மக்கள் மீதும், அரசு மீது சேற்றை வாரி இறைத்திருக்கிறார். சொந்த நாட்டிலேயே குடும்பத்துடன் வாழ மறுத்து அமெரிக்காவில் வாழ்வதற்காக இரண்டு நாடுகளிடையே ராசதந்திரப் பிரச்சனையை உருவாக்கி, மக்களைத் திசைதிருப்பிய தேவயானிக்கும் இந்தியாவில் என்ன தண்டனை?

7 thoughts on “அமெரிக்காவிற்கே திரும்பிச் செல்ல வேண்டும் என அடம்பிடிக்கும் தேவ்யானி”

 1. Devayani is an Indian Foreign Service officer.  She knows well the immigration rules of the USA.  US immigration authorities have never shown mercy for technical violations or suppression of facts by uneducated very old parents who visit their children for a short period of one or two months.  Then how Devayani expects special treatment  for serious violations of US immigration laws and also for the offence of ill treating and exploiting a helpless Indian domestic servant.   The reactions by Indian Government shows how bad is our foreign policy.  Even Obama cannot help her.  She can get unlawful and undeserving help and support only from Indian politicians.

 2. it is too much of her/ she has to bring her children to india/ it is no doubt she suuffered humilation at the hands of american authorities/ but why did she not permit her maid to return to india . is it true that she refused to handover passport to the maid/ if so she has VIOLATED THE BASIC human compassion/

 3. தேவ்யானி போன்ற உயர்தர அரச ஊழியர்கள் கிடைக்கும் வழிகளில் எல்லாம் சுருட்டிக் கொள்வார்கள். முதலில் சங்கீதாவை அடிப்படை மனித உரிமைகளுக்கு மாறாக நடத்தியவர் இப்போ அமெரிக்கா போவதற்காக வெட்கமில்லாமல் கண்ணீர்வடிக்கிறார். இவர்களை சிறையில் அடைக்கவேண்டும். இந்திய சட்டப்படி அமரிக்க கனவில் வாழ முயலும் தேவ்யானி போன்ற திருட்டுக்கும்பல்கள் இந்தியாவின் உயர்குடிகளின் சிந்தனையக் காட்டுகிறது. திரும்பிப் போகவேண்டும் என்று இந்த அடிமை அழுவதைப் பார்த்தால் இந்தியர்களை பற்றி ஒவ்வொரு அமெரிக்கனும் என்ன நினைப்பான். ஏற்கனவே அமரிக்க சட்டதிட்டத்துக்கு உட்படாமல் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது சரி என்று சொல்லிம் தேவ்யானி ஒரு சாதாரண பெண்ணை அடிமைப் போல நடத்தியுள்ளார். இந்தியா என்றால் அமெரிக்க சாமானியனுக்கு இவை தான் நினைவுக்கு வரும்.

 4. தேவயானி கோப்ரகடேயின் தந்தை உத்தம் கோப்ரகடே மகாராஷ்டிரா மாநில இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். மும்பையில் பிறந்து வளர்ந்த தேவயானி மவுண்ட் கார்மல் பள்ளியில் படித்து சேத் ஜி எஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றார். மருத்துவராக பணி புரிவதை ‘தியாகம்’ செய்து, அவரது உறவினரான 1985-ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி அஜய் எம் கோண்டானேவின் அடியொற்றி 1999-ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.

  தேவயானி கோப்ரகடே
  தேவயானி கோப்ரகடே
  பாகிஸ்தான், இத்தாலி, ஜெர்மனி நாடுகளில் இந்திய தூதரகங்களின் அரசியல் பிரிவில் பணியாற்றிய பிறகு, பெரிதும் விரும்பப்படும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி நியமனம் பெற்றார்.

  2012-ம் ஆண்டு நியூயார்க்கில் இந்திய தூதரகத்தின் அரசியல், பொருளாதாரம், வணிகம் மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான துணைத் தூதராக நியமிக்கப்பட்டதும், அங்கு தனக்கு வீட்டு வேலை செய்வதற்காக ஆள் தேட ஆரம்பித்திருக்கிறார் தேவயானி.

  சங்கீதா ரிச்சர்ட் என்ற பெண் மும்பையில் உள்ள தேவயானியின் வீட்டில் அவரை சந்தித்திருக்கிறார். அமெரிக்காவில் தனது வீட்டில் தங்கி குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் ஆள் தேடிக் கொண்டிருப்பதாகவும் ரூ 25,000 சம்பளமும், ரூ 5,000 ஓவர் டைம் ஊதியமாகவும் தருவதாக சொல்லியிருக்கிறார். சங்கீதாவின் வீட்டு வேலை செய்யும் திறனை மதிப்பிடும் விதமாக தேவயானி தனது வீட்டில் அவரை பல நாட்கள் வேலை வாங்கியிருக்கிறார்.

  தூதரக பாஸ்போர்ட் பெறப் போவதாக சொல்லி சங்கீதாவின் சாதாரண இந்திய பாஸ்போர்ட்டை தேவயானி வாங்கிக் கொண்டிருக்கிறார்.

  அக்டோபர் (2012) மாதம் சங்கீதாவின் சார்பாக தேவயானி அனுப்பிய விசா விண்ணப்பத்தில், சங்கீதாவுடன் பேசியிருந்த சம்பளத்துக்கு மாறாக, வீட்டு வேலைகள் செய்வதற்கான மாதச் சம்பளமாக சங்கீதாவுக்கு $4,500 வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். நவம்பர் 1-ம் தேதி விசா நேர்முகத்துக்கு சென்ற சங்கீதாவிடம் பணி ஒப்பந்தம் முதலான ஆவணங்களை கொண்டு வரும்படி கூறியிருக்கிறார் அமெரிக்க தூதரக அதிகாரி.

  அமெரிக்க வெளியுறவுத் துறையின் விதிமுறைகளின் படி அமெரிக்காவில் பணி புரிய நியமிக்கப்படும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் தமது தனிப்பட்ட ஊழியர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், அல்லது வேலையாட்களை அமெரிக்கா அழைத்து வருவதற்காக ஏ-3 விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்ப நடைமுறையின் போது வேலைக்கு அமர்த்தப்படுபவரை நேர்முகம் கண்டு, அவர் வேலை செய்யவிருக்கும் அமெரிக்க பகுதியில் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக வாழ்வதற்கு போதுமான சம்பளம் அவருக்கு வழங்கப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

  அதற்காக பணிக்கு அமர்த்தப்பபடுபவரும், பணிக்கு அமர்த்துபவரும் கையொப்பமிட்ட ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த ஒப்பந்தத்தில், என்ன வேலை செய்யப் போகிறார் (வீட்டு வேலை, தோட்ட வேலை, குழந்தைகளை பார்த்துக் கொள்ளுதல்) என்ற விபரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். வேலை நேரத்தையும், ஒரு வாரத்துக்கு வேலை செய்யும் கால அளவையும் வரையறுத்திருக்க வேண்டும். வீட்டு வேலை செய்பவர்கள் வாரத்துக்கு 35 – 40 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வாரத்துக்கு குறைந்தது ஒரு நாள் விடுமுறையாக வழங்கப்பட வேண்டும். சம்பளத்துடன் கூடிய விடுப்புகள், மருத்துவ விடுப்புகள், விடுமுறை விடுப்புகள் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

  அமெரிக்க விசா
  அமெரிக்க விசா நடைமுறைகளை ஏமாற்றினார் தேவயானி.
  வேலைக்கான ஊதியம் அமெரிக்க மத்திய மற்றும் உள்ளூர் சட்டங்களின் படியான குறைந்த பட்ச ஊதியத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். தங்குமிடம், மருத்துவச் செலவு, மருத்துவக் காப்பீடு, பயணம், உணவு போன்றவற்றுக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படக் கூடாது.

  வழக்கமான வேலை நேரத்துக்கு அதிகமாக வேலை செய்தால் அந்த நேரத்துக்கு ஓவர் டைம் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். சம்பளம் ஊழியரின் வங்கிக் கணக்கில் போடப்பட வேண்டும். அந்த வங்கிக் கணக்கை வேலை கொடுப்பவரோ அவரது குடும்ப உறுப்பினர்களோ கட்டுப்படுத்தக் கூடாது. ஊழியரின் பாஸ்போர்ட், பணி ஒப்பந்தம் முதலான எந்த ஆவணத்தையும் வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது.

  இந்த விதிகளின்படி தேவயானி ஒரு பணி ஒப்பந்தத்தை தயாரித்திருக்கிறார். அதன்படி சங்கீதா வாரத்துக்கு 40 மணி நேரம் மட்டும் வேலை செய்வார் என்றும், ஒரு மணி நேர வேலைக்கு $9.75 ஊதியம் (நியூயார்க் சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம்) வழங்கப்படும் என்றும் விசா நேர்முகத்தில் சொல்லுமாறு தேவயானி சங்கீதாவுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். வேலை நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மதியம் 12 வரை, மாலை 6.30 முதல் 8.30 வரை சனிக்கிழமைகளில் காலை 8.00 முதல் மதியம் 1 மணி வரை என்று சொல்ல வேண்டும். ஞாயிற்றுக் கிழமை முழு நாளும் விடுமுறை வழங்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்க சட்டப்படி வழங்கப்பட வேண்டிய சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்கள், மருத்துவ விடுப்பு நாட்கள், ஆண்டு விடுமுறை விடுப்பு நாட்கள் போன்ற விபரங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. ரூ 30,000 சம்பளம் குறித்து அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் தேவயானி கூறியிருக்கிறார்.

  இந்த பணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், நேர்முகத்திற்கு பிறகு நவம்பர் 14, 2012 அன்று அமெரிக்க தூதரகம் சங்கீதாவுக்கு விசா வழங்கியிருக்கிறது.

  நவம்பர் 23-ம் தேதி விமான நிலையத்துக்கு போவதற்கு முன்பு சங்கீதாவையும் அவரது கணவர் பிலிப்பையும் தனது வீட்டுக்கு அழைத்த தேவயானி சங்கீதாவை இன்னொரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட சொல்லியிருக்கிறார். அதன் படி சங்கீதாவுக்கு ரூ 25,000 மாதச் சம்பளமும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், கூடுதல் மணிகளிலும் வேலை செய்வதற்கு ரூ 5,000 ஓவர்டைம் ஊதியமும் வழங்கப்படும். சம்பளமும் ஓவர்டைமும் சேர்த்து ரூ 30,000-ஐ தாண்டக் கூடாது. ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை என்பதைத் தவிர்த்து வேலை நேரம், வார வேலை நேர வரம்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்கள், விடுமுறை விடுப்பு நாட்கள் பற்றி இந்த ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

  தூதரக விசா விதிகள்
  ‘தூதரக விசா விதிகளின்படி அப்படி செய்வது அமெரிக்க சட்டங்களுக்கு விரோதமானது’
  நவம்பர் 24-ம் தேதி தேவயானியும், சங்கீதாவும் நியூயார்க் போய் சேர்கின்றனர். நவம்பர் முதல் ஜூன் வரை தேவயானியின் வீட்டில் வேலை செய்த சங்கீதா 40 மணி நேர வரம்பை விட பெருமளவு அதிக நேரம் வேலை (ஒரு நாளுக்கு 18 மணி நேரம் வரை) செய்திருக்கிறார். அவருக்கு ஒத்துக் கொண்ட ரூ 30,000-ஐ விட குறைவாகவே சம்பளமே கொடுக்கப்பட்டிருக்கிறது. போகப் போக வேலைச் சுமையும், எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காததும் தாங்க முடியாமல் ஆகியிருக்கிறது.

  தனது வாராந்திர ஓய்வு நாளில் வெளியில் வேலை செய்யப் போவதாக அனுமதி கேட்டிருக்கிறார். சங்கீதா. ‘தூதரக விசா விதிகளின்படி அப்படி செய்வது அமெரிக்க சட்டங்களுக்கு விரோதமானது’ என்று அதை தடை செய்திருக்கிறார் தேவயானி. தனக்கு சாதகமாக இருந்தால், அமெரிக்க சட்டங்களை மீறி குறைந்த சம்பளம் கொடுக்கலாம், அதிக நேரம் வேலை வாங்கலாம், விசா விண்ணப்பத்தில் பொய்யான தகவல்களை கொடுக்கலாம், அமெரிக்க தூதரக அதிகாரியிடம் பொய் சொல்லும்படி கற்றுக் கொடுக்கலாம். ஆனால், சங்கீதா ஒரு நாள் வெளியில் வேலை செய்தால் அமெரிக்க சட்டம் மீறப்பட்டு விடும் என்ற அவரது அக்கறை சுயநலமே அன்றி வேறல்ல.

  ஜூன் மாதம் பொருட்கள் வாங்க கடைக்குப் போன சங்கீதா வீட்டுக்குத் திரும்பவில்லை. ஜூலை 8-ம் தேதி சங்கீதா நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு குடியேற்றங்கள் தொடர்பான வழக்கறிஞரின் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்திய தூதரகத்திலிருந்து 4 அதிகாரிகள் அங்கு போய் சேர்ந்திருக்கின்றனர். பேச்சு வார்த்தையின் போது தான் செய்த வேலைக்கான சம்பளமாக ஒரு தொகையையும், தனது சாதாரண இந்திய பாஸ்போர்ட்டையும் தந்து விடும்படி சங்கீதா கேட்டிருக்கிறார்.

  இதற்கிடையில் தேவயானியின் தந்தையான ஐஏஎஸ் அதிகாரியின் செல்வாக்கில் இந்தியாவில் சங்கீதாவின் கணவர் பிலிப்பும் குழந்தையும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவிலிருந்து அவர்களுடன் தொலைபேசியில் பேசிய சங்கீதா, வழக்கறிஞர் அலுவலகத்தை விட்டு போக மறுத்திருக்கிறார். இந்திய தூதரக அதிகாரிகள் அவர் வெளி வருவதை எதிர்பார்த்து காத்திருந்திருக்கின்றனர். பின்னர், அமெரிக்க காவல் துறைக்கு புகார் கொடுக்கப்பட்டு அவர்கள் சங்கீதாவை அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

  யஷ்வந்த் சின்ஹா
  “அமெரிக்க தூதரக ஊழியர்களின் ‘துணைவர்களாக’ விசா வழங்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையை தடை செய்யும் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும்”.
  அதே நாளில் இந்திய அரசு சங்கீதாவின் இந்திய பாஸ்போர்ட்டை ரத்து செய்தது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறி ஆகி விட்ட அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் படி அமெரிக்க அரசிடம் இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்தது.

  டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேவயானி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முறையீட்டின் அடிப்படையில் தேவயானிக்கு எதிராக இந்தியாவிற்கு வெளியில் எந்த வழக்கும் தொடரக் கூடாது என்று சங்கீதாவுக்கு தடை விதிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. சங்கீதாவின் கணவர் பிலிப்புக்கும் சம்மன் அனுப்பியது நீதிமன்றம். சங்கீதா மீது இந்தியக் குற்றப் பிரிவு 387, 420 மற்றும் 120 B-ன் கீழ் தெற்கு டெல்லி மாவட்டத்தின் மாநகர போலீஸ் வழக்கு பதிவு செய்து கைது வாரண்ட் பிறப்பித்தது. சங்கீதா இந்தியா திரும்பினால் அவர் உடனே கைது செய்யப்படுவார்.

  இதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு தேவயானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. நியூயார்க் நகரின் நீதித்துறை தலைவர் பிரீத் பராரா தேவயானியை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார். டிசம்பர் 12-ம் தேதி தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு திரும்பும் போது, அவரை அமெரிக்க அரசு மார்ஷல்கள் கைது செய்து அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

  தேவயானியை அவரது குழந்தைகள் முன்பு கைது செய்த்தாகவும், கை விலங்கு இட்டு அழைத்துச் சென்றதாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. போதை மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுடனும், பாலியல் குற்றவாளிகளுடனும் சேர்த்து வைத்திருந்ததாகவும், நிர்வாணமாக்கி சோதனை செய்ததாகவும் தேவயானி குற்றம் சாட்டியிருக்கிறார். தனக்கு தூதரக ஊழியர்களுக்கான விதி விலக்கு இருப்பதாக பல முறை கூறியும் அமெரிக்க அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை என்று தேவயானி கூறியிருக்கிறார்.

  பிரீத் பராரா
  நியூயார்க் நகர நீதித் துறை அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா
  நியூயார்க் நகர நீதித் துறை அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா, “தேவயானி குழந்தைகள் முன்பு கைது செய்யப்படவில்லை. அவருக்கு கை விலங்கு இடப்படவில்லை. அவரது தொலைபேசி கைப்பற்றப்படவில்லை. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பல இடங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள அனுமதித்திருக்கின்றனர். தமது காரில் அமர வைத்து தொலைபேசி அழைப்புகளை செய்ய ஏற்பாடு செய்த காவலர்கள், அவருக்கு காபி கொண்டு கொடுத்ததுடன், சாப்பிடுவதற்கான உணவும் வாங்கித் தருவதாக கூறியிருக்கின்றனர். அமெரிக்க காவல் துறை நடைமுறையின்படி தேவயானி தனி அறையில் ஒரு பெண் அதிகாரியால் முழுமையாக சோதனை செய்யப்பட்டார். தனக்கோ, சக கைதிகளுக்கு ஊறு விளைவிக்கும்படியான எந்த பொருளையும் உடலில் மறைத்து வைத்திருக்கக் கூடாது என்பதை உறுதிப் படுத்தும் விதமாக இந்த சோதனை செய்யப்பட்டது” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

  இது இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் கர்ஜித்திருக்கிறார்கள். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவை சந்திப்பதற்கு நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் மறுத்திருக்கிறார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் அவர்களை பார்க்க மறுத்து விட்டிருக்கின்றனர். இந்திய தூதரகப் பெண் ஒருவருக்கு அமெரிக்காவில் இழைக்கப்பட்ட அநீதியைத் தொடர்ந்து தான் இந்த நிலையை எடுத்ததாக மோடி டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

  அமெரிக்காவில் இந்தியத் தூதர் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இந்தியாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு சலுகைகளை ரத்து செய்திருக்கிறது இந்திய அரசு. அமெரிக்க தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் சிறப்பு தூதரக அடையாள அட்டைகளை திரும்பக் கொடுத்து விடுமாறு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க தூதரகங்கள் இறக்குமதி செய்யும் வெளிநாட்டு மதுவகைகள் இனிமேல் அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்திருக்கிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு விமான நிலைய அனுமதிச் சீட்டும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, “எங்க ஆள் மேல் கை வைச்சா உங்களுக்கு தருகிற மேட்டுக் குடி சலுகைகளை எல்லாம் பிடுங்கிக் கொள்வோம்” என்று செல்லமாக மிரட்டுகிறார்களாம்.

  அமெரிக்க தூதரகங்களில் பணி புரியும் இந்திய ஊழியர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் இவற்றின் விபரங்களை கேட்டிருக்கிறது மத்திய அரசு. இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணி புரியும் ஊழியர்களின் பட்டியலையும் கேட்டிருக்கிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகளின் மனைவி/கணவர் முறையான பணி விசா இல்லாமலேயே பள்ளிகளில் பணி புரிவது இது வரை இந்திய அரசுக்கு தெரியாதாம்.

  அமெரிக்க குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் தேவயானி கைது செய்யப்பட்டது போலவே, இந்தியாவில் அமெரிக்க தூதரக ஊழியர்களின் ‘துணைவர்களாக’ விசா வழங்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையை தடை செய்யும் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

  “நூறு டாலரை விட்டெறிந்தால், நம் வீட்டு வேலைகளை எல்லாம் செய்து, காலடியில் உத்தரவுக்கு காத்திருக்கும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் கிடைப்பது தெற்கு ஆசியாவின் வரம். ஒரு சுல்தானைப் போல வாழ்வதற்கு உலகில் வேறு எந்த இடத்திலும் சாத்தியமில்லை”.

  வீட்டு வேலை செய்யும் பெண்
  வீட்டு வேலை செய்யும் பெண்
  இந்தியாவுக்கு வரும் மேற்கத்திய நடுத்தர வர்க்கத்தினரின் புகழுரை இது. வீட்டு வேலைகளை எல்லாம் செய்து, குழந்தையை பார்த்துக் கொண்டு, மிஞ்சியிருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, கொடுத்த இடத்தில் தூங்கிக் கொண்டு வீட்டோடு வேலை செய்யும் பெண் என்பது இந்திய நடுத்தர வர்க்கத்தின், குறிப்பாக வட இந்தியர்களின் கனவு வாழ்க்கையின் ஒரு இன்றியமையாத பகுதி. ஓய்வு நேரம், வார இறுதி, வருடாந்திர விடுமுறை என்பதெல்லாம் தேவைப்படாத உழைக்கும் செக்கு மாடுகள் போல பயன்படுத்தப்படும் வர்க்கம் அது.

  சம்பளத்தை

 5. டில்லி: இந்திய துணைத்தூரக பெண் அதிகாரி தேவயானி (39) மீதுசங்கீதா என்ற வீட்டு வேலைக்காரிகொடுத்த புகாரினை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள மேலும் சில இந்திய தூரக அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். தற்போதுஇவர்களின் வீட்டு வேலைக்காக சென்றுள்ளவர்கள் இந்தியர்கள் என்பதால்,தங்களிடம் உள்ள வீட்டு பணியாளர்களின்விசா நடைமுறைகளை ஒழுங்குப்படுத்தி தருமாறு இந்தியாவினை வலியுறுத்தியுள்ளனர். இல்லையென்றால் தேவயானிக்கு ஏற்பட்ட நிலைமை போன்று தங்களுக்கும் ஏற்பட்டுவிடுமோ என அச்சத்தில் உள்ளனர்.

 6. In America, we have seen that the law enforcement authorities have acted on a complaint of a house-help maid. But, in India nobody will immediately entertain any complaint of a house-maid. In India, police, law etc are made only for benefit of highly placed persons and the rich people.

 7. இந்தியா என்றால் பிழைக்க லாயக்கற்ற இடம் என்று கூறி தேவயானி அவமானப்படுத்துகிறாரா? வெட்கம் இவர்களை துரத்தியடிக்கவேண்டும்

Comments are closed.