அமெரிக்காவின் நிதி ஆதிக்க சகாப்தம் முடிந்தது : டிமிட்ரி மெத்வதேவ்

04.09.2008.

செயின்ட்பீட்டர்ஸ்பர்க்:
ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் ரஷ்ய – ஜெர்மன் அமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசுகையில், அமெரிக்கா வின் நிதி ஆதிக்க சகாப்தம் ஓய்ந்து விட்டது என்று குறிப்பிட்டார். மேடையில் உடன் இருந்த ஜெர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க் கெல் “கூடுதலான நேர்மை கொண்ட அமைப்பு வேண் டும்” என்று கூறினார்.

ஒரு பொருளாதாரம் ஒரு நாணயம் ஆகியவற்றின் ஆதிக்ககாலம் முடிந்து விட்டது. அது ஒட்டு மொத் தமாக வரலாற்றில் புதைக் கப்பட்டு விட்டது என்றும் மெத்வதேவ் கூறினார். உல கச் சந்தையை தனியாகக் கட்டுப்படுத்தும் வலிமை அமெரிக்காவுக்கு இல்லை என்பதை இன்றைய நெருக் கடி வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

ரஷ்ய – ஜெர்மன் கூட் டுறவு அமைப்பின் வருடாந் திரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க் கெல் ரஷ்யா வந்துள்ளார். அவர் பேசுகையில், சர்வ தேச நிதிக் கட்டமைப்புக்கு புதிய நடைமுறைகள் தேவைப் படுகிறது. இது தேவை என்று இந்த நெருக்கடியின் போது அல்ல முன்பே புரிந் திருந்தேன் என்று அவர் குறிப்பிட்டார்.

இருவரும் தனியே சந் தித்து அரசியல் நிலைமை குறித்து விவாதித்தனர். ஜார் ஜியாவில் ரஷ்ய நடவடிக் கைகள் குறித்து இருவருக் கும் முரண்பாடுகள் இருந் தன. இருவரும் கலந்து கொண்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய மெர்க் கெல், ஜார்ஜியாவின் எல் லைகள் விவாதத்திற்கு அப் பாற்பட்டவை என்று கூறி னார்.

ரஷ்யாவுக்கும், ஜெர் மனிக்கும் இடையே நடை பெறும் இந்த வருடாந்திரக் கூட்டம் இரு நாடுகளிலும் மாறி மாறி நடக்கும். இக் கூட்டம் இவ்வாண்டு ஒரு நாளாகச் சுருங்கி விட்டது. இரு தரப்பிலும் பல அமைச்சர்கள் வரவில்லை. இரு நாடுகளின் உறவுகளில் இயல்பு நிலை குறைந்துள் ளது.

One thought on “அமெரிக்காவின் நிதி ஆதிக்க சகாப்தம் முடிந்தது : டிமிட்ரி மெத்வதேவ்”

 1. //கூடுதலான நேர்மைகொண்ட அமைப்பு வேண்டும்// ஏஞ்சலா மெக்ர்கெல்

  ஏகாதிபத்தியத்திற்கோ முதலாளித்துவத்திற்கோ கூடுதலான நேர்மையோ குறைந்தநேர்மையோ
  என்று ஒண்று இல்லை. அதற்கு தெரிந்தது “அப்பட்டமான பட்டுவாடா” தவிர வேறு ஒண்றும்
  தெரியாது. உலகத்திலை டாலர் என்ன வேலை செய்ததோ! அதே வேலையைத்தான் யூரோவும்
  செய்யப்போகிறது.
  நுகர்வுப்பொருள்களை அளவுக்கு மீறி ஆதாயத்திற்காக உற்பத்தி செய்தலே இவ்வளவு சீர்கேட்டுக்கும் காரணம் ஆகிறது உலகில் தளும்பல் நிலையும் ஏற்படுகிறது
  இறுதியில் மாபெரும் யுத்தத்தையும் தயாரிக்கிறது.
  உலகத்தொழிலாளர்களே! விழிப்பாய்யிருங்கள்.

Comments are closed.