அமெரிக்காவின் தாக்குதல்கள் ஒசாமாவை பிடிக்க உதவாது – பாகிஸ்தான்

13.09.2008.

பாகிஸ்தானிற்குள் அமெரிக்க துருப்புகள் நடத்தி வரும் தாக்குதலானது அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை பிடிப்பதற்கு உதவாது என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் செளத்திரி அஹமது முக்தர் தெரிவித்துள்ளார்.

அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் ஆப்கானிஸ்தான் எல்லை அருகே இருக்கின்ற வடமேற்கு பகுதியில் மறைந்திருப்பதாக நம்பப்படுகின்றது.

வடக்கு வாசிர்ஸ்தான் பகுதியில் இந்த மாதத்தின் முற்பகுதியில் தரை ஊடாக அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.

இனி தரை ஊடாக தாக்குதல் நடத்தப்படாது என அமெரிக்கா தங்களுக்கு உறுதி கொடுத்திருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

BBC.