அமரிக்க ராஜாங்க அமைச்சின் அறிக்கையும் இலங்கை அரசியற் பின்புலமும் : சபா நாவலன்

amother மக்களின் குருதியறைந்து, கொலைகளுக்கு நியாயம் சொல்லுகின்ற ஒரு புதிய கூட்டம் மாரிகாலக் காளான்கள் போல கோரமாய்ப் பரவிக்கொண்டிருக்கும் இக்கட்டான உலக சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு புறத்தில் இராட்சத வியாபாரிகள் ஆயிரமாயிரமாய் கொலைகளை நிகழ்த்திவிட்டு “வீர சிம்மாசனத்தில்” வீற்றிருக்க அவர்களின் பின்னால் இன்னும் ஆயிரம் “புதிய நியாயங்களோடு” குட்டி வியாபாரிகள் மக்களைச் சூறையாட அணிவகுத்து நிற்கின்றனர்.

 அறுபது நீண்ட ஆண்டுகள், இலங்கைத் தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர்; வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம், தெருக்கோடி எல்லாமே பேரினவாதப் புற்று நோய்க் கிருமிகளால் சிறுகச் சிறுக அரிக்கப்பட்டு அதன் உச்ச பட்ச வடிவமாக வன்னி நிலம் முழுவதுமே அபகரிக்கப்பட்டுவிட்டது.

கொன்று போடப்பட்டவர்கள், சாம்பலாக்கப்பட்டவர்கள், விரட்டியடிக்கப்பட்டவர்கள், சிதைத்துச் சிதைது குடியேற்றப்பட்டவர்கள் என்று வடக்கும், கிழக்கும், மலையகமும் மறுபடி மறுபடி அவலங்களின் பூமியாக மாற்றப்பட்டுவிட்டது.

இவையெல்லாம் நேற்று ஆரம்பித்து இன்று முடிவடையும் சிவில் யுத்தமல்ல. பின் காலனியக் காலகட்டம் முழுவதுமே தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் அழிப்பிற்கான காலகட்டம் தான். கடந்த அறுபது ஆண்டுகள், ஒவ்வொரு பொழுதும் புலரும் போதும் கொலைச் செய்தியோடு, அல்லது தமிழ் பேசும் மக்கள் மீதான  வெறுப்பைச் சுமந்துவரும் பேரினவாத சோவனிஸ்டுக்களின் அருவருக்கும் செய்திகளோடும் தான் புலரும்.

இன்றைய உலகின் புதிய விதிகளின் பின்புலத்தில் மகிந்த அரசு பெற்றுக்கொண்ட அசுர பலத்தில், புலிகளை அழிக்கிறோம் என்ற ConcentrationCampsபெயரில் சாரி சாரியாக அப்பாவி மக்களைக் கொன்று போட்டுவிட்டு, மீதமிருக்கும் மக்களை திறந்த வெளிச் சிறைகளில் அடைத்து வைத்துக் கொண்டு தெற்காசியாவின் குட்டித் தாதாவாக உருவெடுத்திருக்கிறது.

இதே உலகச் சூழல் அறுபது ஆண்டுகளாக நடாத்தப் படுகின்ற திட்டமிட்ட குடியேற்றங்களை அதன் நவீன வடிவத்தில் நடைமுறைப் படுத்த ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு உதவி புரிகிறது. தமிழ் நாடு முதலமைச்சர், “தொப்புள்கொடி” முத்துவேல் கருணாநிதி குடும்பத்திலிருந்து தெருச் சந்தை வியாபாரிகள் வரை பல சந்தர்ப்பவாதிகள் முண்டியடித்துக்கொண்டு மக்களின் இரத்த வாடையில் திருட்டு வியாபாரம் நடத்துகிறார்கள். பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற அரசியலோடு தொடர்பற்ற ஒருவர் முகாம்களிலிருந்து கொண்டு வந்திருந்த ஒளிப்படத்தில் நூற்றுக் கணக்கில் மக்கள் திறந்த வெளிச்சிறையிலிர்ந்து விடுதலையாவதையே கோருகிறார்கள். ஊடகவியலாளர்கள் முகாம்களுக்குள் இலங்கை அரசின் தடைகளையெல்லம் மீறி செல்லும் போதெல்லாம் இதே கோரிக்கையைத் தான் மக்கள் முன்வைக்கிறார்கள். யாரும் முகாம்களுள் சிறைவைத்துச் சாப்பாடு போடக் கோரவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நூற்றுக் கணக்கில் திறந்தவெளிச் சிறைவாசிகளோடு பேசியிருக்கிறேன். அவர்களுக்கு என்ன உதவியை நாம் வழங்க முடியுமென்று கேட்கும் போதெல்லாம், அங்கிருந்து அவர்கள் வேளியேற வேண்டுமென்றே கோருகிறார்கள்.

புலிகள் மக்கள் மீது நடத்திய தாக்குதல்களை எல்லாம் அவர்கள் மறந்து போய்விடவில்லை. ஆனாலும், இலங்கை அரசின் துணைப்படைக் குழுக்களையும் அதன் ஆதரவு சக்திகளையும் கடைந்தெடுத்த துரோகிகளாகவே அவர்கள் எண்ணுகிறார்கள். அரச தில்லுமுல்லுகள், திருட்டு வாக்குகளுக்கு மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய வாக்குகள் அவர்கள் புலிகள் மீது வைத்திருக்கும் பற்றால் அல்ல, அரச அடக்குமுறை மீதுள்ள வெறுப்பினாலேயே வழங்கியிருக்கிறார்கள். இது தான் மக்களின் மனோநிலை.

வீதியில் நடமாடக்கூட விதி முறைகளுண்டு. அதியுயர் சோவனிசப், பாசிசக் கட்டுமானங்களைக் கொண்ட இலங்கை அரசிற்கும் விதிமுறைகள் உண்டு. இந்த விதிமுறைகளோடு ஒத்துழைக்காமல், அதாவது இனப்படுகொலைக்கு அங்கீகாரம் வழங்காமல், இலங்கையில் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது.எத்தனை முறை மருந்து வினியோகத்தையும், உணவு வினியோகத்தையும் இலங்கை அரசு அங்கு திட்டமிட்டுத் தடை செய்திருக்கிறது என்பதை அமரிக்க ராஜாங்கத் திணைக்கள அறிக்கை கூறுகிறது.

இலங்கை அரசிற்கு எதிராகப் போராடுவதும், அதனை மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக அம்பலப்படுத்துவதும் மட்டுமல்ல அதன் ஆதரவு சக்திகளையும் பாசிசத்தின் புதிய கூறுகளாக உலகம் எங்கும் பல்வேறு கோணங்களில் முளைவிடுகின்ற இலங்கை இந்திய அரசியல் குற்றவாளிகளின் விரிவு படுத்தலைப் பற்றி விழிப்பாயிருத்தலும், ஏனையோரை விழிப்பாயிருக்கக் கோருதலும் எமது ஒவ்வொருவரதும் கடமை.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான பிராந்திய அதிகாரப் indianmadeபோட்டியின் விளைபலன் தான் இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்கியது என்று இந்திய ஆதரவாளர்கள் நிறுவ முயல்கிறார்கள். இந்தியா இலங்கை அரசுடன் இணைந்து நடத்திய இனப்படுகொலைக்கு சீனாவும் பாகிஸ்தானும் தான் காரணம் என்ற முட்டாள் தனமான விவாதத்தை முன்வைக்கிறார்கள். இந்தியாவின் கொல்லைப் புறத்தில் அமைந்திருகிற “சுண்டெலித்” தீவான இலங்கையை இந்திய மேலாதிக்கம் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் புரட்டியெடுக்கலாம். இங்கு சீனா, பாகிஸ்தான் என்ற விவாதமெல்லாம் இந்தியாவை நியாயப்படுத்த முன்வைக்கும் சமாதானங்களாகும்.

தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தை 83 களில் ஆரம்பித்து சிதைத்து சின்னாபின்னப் படுத்தியது இந்தியா தான். இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் விடுதலை என்பது இந்திய மேலாதிக்கத்திற்கும் எதிரான போராட்டத்திலிருந்தே ஆரம்பிக்க முடியும். இந்திய முற்போக்கு சக்திகளுடன் இணைந்த புதிய போராட்ட வடிவங்கள் குறித்து தமிழ் பேசும் மக்கள் சிந்திப்பது இன்று அவசியமாகிறது.

80 களில் இந்தியாவிடம் ஒரு தந்திரோபாய முறைமை இருந்தது. அமரிக்க அணியிடமிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுமானால் சோவியத் சார்பு நிலையும், சோவியத் ரஷ்யாவிடமிருந்து அழுத்தங்கள் உருவாகுமானால் அமரிக்க சார்பு நிலையும் எடுத்துக்கொள்கிற வெளிவிவக்காரக் கொள்கையைப் பிரயோகித்திருந்தது.

இந்திய வெளிவிவகார ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனன் டெல்லிப் பல்கலைக் கழகத்தில் இந்த வருட ஆரம்பத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிடுவது போல 1990 இற்குப் பின்னதாக இன்று வரைக்கும் இந்திய வெளிவிகாரக் கொள்கை புதிய கோணங்களில் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

சுதந்திரத்தின் பின்னர் கடந்த பத்தாண்டுகளில் மட்டும்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி பெற ஆரம்பித்திருக்கிறது என்றும் அந்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையிலேயே இந்திய வெளியுறவுக் கொள்கை அமையும் என்கிறார் ஷிவ் சங்கர் மேனன். இந்த நிலையில் இந்த ஆண்டு சீனாவுடன் இந்திய வியாபாரம் 60 பில்லியன் தொகையை அடையும் என்று எதிர்வு கூறப்படுகிறது. இந்தியாவின் பிரதான வியாபாரப் பங்கு நாடான சீனாவின் தெற்காசிய ஆதிக்கத்திற்கான நிகழ்ச்சி நிரல் என்பது இந்தியாவுடன் இணைந்ததாகவே அமைந்திருக்கும் என்ற எல்லைக்கு ஆசியப் பொருளாதாரம் இன்று ஆதிக்கம் செலுத்துகிறது.

ஆக, இந்தியா, சீன சார்பு நிலையையே பிராந்தியப் பொருளாதார ஆதிக்கம் குறித்த விவகாரங்களில் கடைப்பிடிக்கிறது. இலங்கைப் பிரச்சனையிலும் கூட! இருந்த போதும் சீனாவிடமிருந்து அதிக அழுத்தங்கள் உருவாகும் போதெல்லாம், அமரிக்காவுடன் அரசியல் இராணுவத் தொடர்புகளை வலுப்படுத்துவதாகக் காட்டிக்கொண்டு, அதிகாரச் சமநிலையைப் பேணிக் கொள்கிறது.இது, முன்னைய சோவியத் – அமரிக்க சமநிலை பேணுதலின் புதிய உலக ஒழுங்கோடு கூடிய புதிய பரிமாணமே தவிர வேறில்லை.

இந்த நிலையில், அமரிக்க ராஜாங்கத் திணைக்களம், இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்த 70 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வன்னியில் இரத்தக் குளியல் நடைபெற்று ஐந்து மாதங்களின் பின்னர் அமரிக்காவிற்கு முளைத்திருக்கும் மனிதாபிமான கரிசனை உலக அரசியல் சதுரங்கத்தில் இலங்கை இனச்சிக்கல் இன்னும் தீவிர பாத்திரத்தை வகிப்பதாகவே உணர்த்துகிறது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஆசியப் பொருளாதார நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதற்கும் அமரிக்க ஆதிக்கம் சரிந்து வருவது குறித்துமே அமரிக்கா துயர் கொண்டுள்ளது. ஐ.நா சபையில் இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பான கூட்டத்தொடர்களில் எல்லாம் இலங்கை அரசிற்கு சார்பாகச் செயற்பட்ட பிரதானமான நாடு இந்தியா. இவ்வறிக்கை என்பது இலங்கையின் போர்க்குற்றங்களை விரிவாகத் தெளிவுபடுத்தும் அதே வேளை இந்திய அரசின் இலங்கை சார்பான நிலைப்பாட்டிற்கும் சவால் விடுத்துள்ளது. இந்திய – சீன இணை நடவடிக்கைக்கு எதிராக் அமரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் முன்னறிவுப்பு என்பதே இது.

இதன் உள் நாட்டு நகர்வுகளையும் அமரிக்கா இந்தியாவிற்கு எதிராக ஆரம்பித்துவிட்டது எனலாம். சரத் பொன்சேக தேர்தலில் போட்டியிட்டால் சிங்கள் மக்களின் வாக்குகள் பிளவுபட, தமிழ் மக்களின் வாக்குப் பலத்துடன் அமரிக்க சார்பு யூ.என்.பி கட்சியை butenisஆட்சிக்கு கொண்டு வந்துவிடலாம் என்பதே அமரிக்கத் தூதுவரின் கணிப்பு. சரத் போன்சேகவிற்கும் இலங்கைகான அமரிக்கத் தூதருக்கும் இடையிலான உத்தியோகப் பற்றற்ற சந்திப்புக்கள் குறித்து இலங்கைப் பத்திரிகைகள் கேள்வியெழுப்புகின்றன. ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட போது அங்கு தூதுவராகக் கடமையாற்றியவர், ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட போது அங்கு தூதுவராகக் கடமையாற்றியவர், பங்களாதேஷின் அமரிக்க சார்பு அரசை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தவர், என்ற தகமைகளைப் பெற்றுள்ளவர் தான் அமரிக்கத் தூதுவர் பற்றீசியா பட்டெனிஸ்.

உலகிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களினதும், தமிழ் பேசும் மக்களினதும் எதிரியான அனைத்து நாடுகளதும் வியாபார அரசியல் சதுரங்கம் கருத்தில் கொள்ளப்பட்டு விவாதங்களுக்கு உட்படுத்தப்படல் என்பது இன்றைய தென்னாசிய அரசியற் சூழலில் புதிய போராட்ட சக்திகளின் மத்தியில் அவசியமானதாகும்.

19 thoughts on “அமரிக்க ராஜாங்க அமைச்சின் அறிக்கையும் இலங்கை அரசியற் பின்புலமும் : சபா நாவலன்”

 1. இந்த பின்னூட்டாம் வழியாக ஒன்ட்ரை தெளிவு படுத்த விரும்புகிரென்.
  கருணானிதி என்பவன் ஒரு தெலுஙுகு வந்தெறி. அவன் சார்ந்த சாதி இசை வெளாளர். அவர்கல் விஜயனகர மன்னர் காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த தெலுஙு கு வந்தெறி.அவன் தமிழைவிட திராவிடத்தை தான் அதிகம் பேசுவான். அவன் ஒரு தமிழ் ஒட்டுன்னி.

  1. soundarasolan: You are right! How much we are cheated. I am from Tanjavur. This karunanithi is always agaisnt we thevar. But we call this group as molar. Not isai vellalar.

 2. The awrness though this prose will be noticed by all tamils around the world. iincluding tamil people of tamilnadu. seeries of photographs received through tamilmanam and iniooru e mails is heartfelt sadness every day.Rajapakshey have no courtisy on the suggestions made by bankimoon and seenators of uS&england to hear and have no humanism against his attitude on the tamil people kept behind the barbed wire fencing.This sort of behaviour had by the Adolft Hitler and his end is a lession for all the political leaders of the world sreelanga and for tamilnadu also.

 3. இந்தியாவும் சீனாவும் ஒன்று சேர்ந்து தான் எல்லாமே பண்ணுகிரது என்பதை நான் முன்ன்ன்ரே நினைத்தி இருந்தேன்நீங்கள் விலா வாரியாக சொன்னதற்கு நன்றி.

 4. KARUNANITHI IS PURE TAMIL.HE IS TAMIL THERE IS NO DOUBT IN IT.I SINCERE BELIVE WE CANT BLAME HIM FOR OUR SORROW AND SADNESS.MANY NAIDUS WERE HELP TIGERS AND THERE NOT EVEN CONCIDER THEMSELF THELUNGU EITHER.IT OUR CAST BASED MENTALITY THAT BLAMING MR KARUNANITHI.OTHER THAN THAT WE KNEW HE IS GREAT LEADER AND GOOD POLITICIAN. ANOTHER THING I WANTED TO SAY WHATEVER BUSINESS DEAL INDIA AND CHINA HAS OR HAVE BITTERNESS BETWEEN THEM STILL REMAIN SAME,THERE MAY BE A SPARCKLE AS WELL. I CANT AGREE WHAT IT SAYS ON THIS ARTICAL BECAUSE I HONESTLY BELIVE AMERICA THE GREAT NATION AND THE COUNTRY ONLY SAVE US AND HELP US. THESE CHINA NOTHING TO THEM.

  SO I ALWAYS SUPPORT AMERICA AND AMERICA. PLEASE WELCOME SAVE INDIA AND SRILANKA FROM CHINESE .

 5. இந்தியா சீனா உறவுகள் குறித்து புதிய கோட்பாடு ஒன்றை முன் வைக்கிறீர்கள். இது குறித்து மேலும் தெளிவாகக் கூறினால் தான் ஏற்றுக்கொள்ளக் கூடிதாக இருக்கும். நீங்கள் எழுதுவது இந்திய, ஐரோப்பிய அறிஞர்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் முரணாக உள்ளது. இவ்வாறான கருத்துக்கள் தேவைதான். ஆனால் ஆதாரங்களுடன் விடயதானம் அமைய வேண்டும்.

 6. Peoples of this World face problem since we the peoples of this World don’t follow various Government policy decisions. We elect the Government and don’t co-operate with the Governments of various countries.

  Hence, the problems will never be solved. This is my personal view and it may not be true with others.

 7. புலம் பெயர் நாடுகளிலிருந்து வெளிவரும் இணையங்களுக்கு இது நல்ல அடி! அரசாங்கப் பணம் இவர்களை கருணாக்களை விட மோசமாக்கி உள்ளது. முகாம் களிற்கு சென்ற தமிழ் எம்பி குழுவும் இப்படி ஒருநாடகத்தையே ஆடி முடித்துள்ளது. மனிக் பாமில் சிலர் ஓடி வந்து நம்பிக்கையுடன் பிரச்சனைகளைச் சொல்லும் போது கனிமொழி அழுவது போல்நடிக்க, ரீ.ஆர் பாலு மக்களைத் திட்டித் தீர்த்துள்ளார். திருமா அண்ணன் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். பாலு திட்டியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனது உறவினரான ஒருவர் நீங்கள் என்ன அரசாங்கத்தின் ஆளா எனக் கேட்டுள்ளார். மறுநாள் அவர் ராணுவத்தால் நையப் புடைக்கப் பட்டுள்ளார். *** நெற் இணையம் அங்கு எல்லாம் சுமூகமாக உள்ளதாக முழுப் புசணிக்காயைச் சோத்துக்குள் மறைத்திருக்கிறது. ஏன் இப்படி எல்லாம் தமிழர்களுக்கு நடக்கிறது?

 8. //…வீதியில் நடமாடக்கூட விதி முறைகளுண்டு. அதியுயர் சோவனிசப், பாசிசக் கட்டுமானங்களைக் கொண்ட இலங்கை அரசிற்கும் விதிமுறைகள் உண்டு. இந்த விதிமுறைகளோடு ஒத்துழைக்காமல், அதாவது இனப்படுகொலைக்கு அங்கீகாரம் வழங்காமல், இலங்கையில் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது…. //நாவலனின் `கருதுகோள்` இலங்கை போன குழுவில் மீது செய்யப்பட்ட ஒரு அமிலப் பரிசோதனையாகக் கொள்ளலாம்.

 9. வனக்கம் உங்கல்கருது மிகவும் சரிஜானது. கருனானிதிஜை வரலாரு என்ரும் மன்னிக்காது………….

 10. ஓ! அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையும் நாவலனுக்கு ஒரு முக்கிய ஆவணமாகிவருகிறதே! இதென்ன ஓபாமாவுக்கு பின்னா? ஈராக்கில் இன்னும் குருதிகாயவில்லை.

  இலங்கை அரசைக்கண்டிப்பதற்கு உநத ராஜாங்க திணைக்களத்தை துணைக்கழைப்பது எங்கள் பலவீனம்.

 11. உங்கள் எழுத்துக்கள் அருமை என்றாரலும் சினா இந்தியாவின் ராஐதந்திரத்தை நன்றாக விளங்கபடுத்த தவறவிடடிர்கள் போல தோன்றுகிறது இலங்கை இனவாதத்தின் உச்சகட்டத்தை உணா;ந்த உள்ளமாக பார்க்கிறேன் நன்றி இப்படி ஒவ்வொரு மகனும் தன்வரலாற்றை தொலைக்காது இருந்தால் இந்த படுகொலைகள் நடக்குமா? இனப்படுகொலை செய்ய தமிழனே துணைநிற்கும்போது நாம் அரட்டுகிறோம் என்று நினைக்கிறேன் தன் வரலாற்றை
  தான் ஆண்டமண்ணை தொலைத்து விட்டு ஏன் துணைபோய்விட்ட தமிழனைபற்றி
  இன்னும் என்ன பேசவுண்டு சகோதரா? உமது மனகொதிப்பிற்கு நன்றி கருணாநிதிபோன்ற தமிழ் தலைவா;கள் தமிழிநாட்டில் இருப்பது வீண் தன் முன்றுதாரத்து பிள்ளைகளை பாதுகாக்க அரசியல் நடத்துகிறார் என்பது எமக்கு தெரியும் கருணாநிதியை வளா;த்து விட்டு ஒட்டு மொத்த ஆறுகோடி தமிழ் இஇனத்தையே அழித்த கருணாநிதி இவா; தமிழனா? என்ற கேள்வியை விடடு முடி
  க்கிறேன்

 12. தனது குடும்பம் வாழ கருணாநிதி மக்களைக் கொல்ல நினைக்கிறார்.

 13. நாடுகட்கிடையிலான உறவுகள்– குறிப்பாக வலியவற்றுக்கிடையிலானவை –நட்பும் பகையும் கலந்தவையே.
  எது மேலோங்கியுள்ளது என்பதே கவனிப்புக்குரியது.
  மேற்குலகு சீன-இந்திய மோதலை விரும்புவதில் வியக்க என்ன உள்ளது?
  நிபுணர்கள் வர்க்க நலன்கட்கு அப்பாற்பட்டவர்களல்லவே.

  இந்தியா பிராந்தியப் பெருவல்லரசாக விரும்புகிறது.
  ஒரு காலத்தில் சோவியத் ஆதரவுடன் முயன்றது. அப்போது அமெரிக்காவுடனான பகைமுரண்பாட்டுக்கு முக்கியத்துவம் இருந்தது.
  1987க்குப் பின் நிலைமை மாறத் தொடங்கியது. பெருவல்லரசாக அமெரிக்காவின் ஆதரவு தேவை என்பதுடன் இந்தியாவினுள் ஒரு அமெரிக்க சார்பு அதிகார வர்க்கமும் முதலாளியக் குழுமமும் உருவாகி விட்டன.
  அது தொடர்பான இழுபறிகள் இருந்தாலும் நாவலன் சொல்வது போல சீனா இந்தியாவுக்கு ஒரு மிரட்டலல்ல என இந்திய நிறுவனம் அறியும்.
  அதே வேளை அமெரிக்காவின் நோக்கங்களைத் தனக்குச் சாதகமாக் பயன்படுத்தும் எண்ணமும் உண்டு.

  இலங்கையில் சீன எதிர்பார்ப்புக்கள் வரையறைக்குட்பட்டவை. சீனா தனது எல்லைகட்தகு வெளியே படைத் தளங்களை நிறுவ வேண்டிய சூழல் இன்னும் வரவில்லை. வரலாம் — ஆனால் இப்போதைக்கல்ல. அதையும் இந்திய நிறுவனம் அறியும்.

  சீன-இந்தியப் போட்டியில் இலங்கை தனக்குப் பகைமையான ஒரு நாட்டின் கட்டுப்பாட்டினுள் வருவதைத் தவிர்க்கவே சீனா இலங்கை அரசாங்கங்களுடன் நல்லிணக்கம் பேயணுகிறது. அதை விட இலங்கை-சீன நட்புறவு 1951ம் ஆண்டிலிருந்து வலுப்பட்டு வந்த ஒன்று.

  இலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக ஆதிக்க நேக்கத்திற்கான எண்ணமும் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்துக்கான ஆவலுமே அமைதிப் பேச்சுக்களில் இந்தியாவின் விஷமத்தனமான குறுக்கீடுகட்குக் காரணமாயின.

  சீன முதலீடுகள் தென்னிலங்கையற் கூடுதலாகவும் இந்திய முதலீடுகள் வடக்கு-கிழக்கிற் கூடுதலாகவும் உள்ள நிலையில் தமிழர் அஞ்ச வேண்டியது எதை? தமிழரின் மண் யாரிடம் பறிபோகிறது?

  இவை நமது கவனிப்பிற்குரியவை.

 14. தோழமையுடன் சிவா,

  உலகமயமாதல் ஏற்படுத்திய மூலதன நகர்வு, அதனூடான ஆசியப் பொருளாதாரத்தின் உருவாக்கம், சினா,ரஷ்யா,ஜப்பான், இந்தியா போன்ற நாடுக்ளை நோக்கி நகர்ந்திருக்கும் பொருளாதாரம், மேற்குலகில் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார நெருக்கடி என்பவை கருத்தில் கொள்ளப்படவேண்டும்.

  இந்தப் பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள இன்றைய நிலையில் தெற்காசியா அதிலும் குறிப்பாக இந்தியாவை சீன இணைவிலிருந்து பிரித்தெடுப்பதும் அதனை தனது வசதிக்கு ஏற்ப கையாள்வதுமே அமரிக்காவின் தந்திரோபாயத்தின் முதன்மைப் பகுதி.

  இதனை இந்தியாவிற்கு அழுத்தங்களை வழங்குவதனூடாகவே அடைய முயல்கிறது.

  அதற்கு இலங்கையும் பாகிஸ்தானும் பிரதான மையங்களாக அமைகின்றன.

  இவ்வழுத்தங்களுக்கு எதிரான இந்தியா- சீனா இணைந்த எதிர்ப்பே இலங்கை அரசினூடாக அமரிகாவிற்கு எதிராக நிகழும் பனிப்போர்.

  இந்தப் பனிப் போரில் நசுங்கி மாண்டு போனவர்களே வன்னி மக்கள்.

  ஆக, புதிய உலக ஒழுங்கும் அதில் சீனா, இந்தியா, மேற்கு நாடுகள் குறித்த பூகோள – அரசியலும் இன்று முக்கியத்துவம் பெறுகின்றன.
  இந்தியா பிராந்திய மேலாதிக்கம் என்ற நிலையிலிருந்து இப்போது கடந்து துருவ வல்லரசாக உருவெடுக்கிறது. தெற்காசியாவில் இடது புத்திஜீவிகள் கூட இவை குறித்து எந்த அக்கறையுமற்று இருக்கிறார்கள்.

  கிளிநொச்சியில் இலங்கை இராணுவம் போரை ஆரம்பித்த போது, புலிகள் அழிக்கப்படுதலும் அதன் பின்னர் இந்தியாவில் மாவோயிஸ்டுக்கள் அழிக்கப்படுதலும் நிகழும் என்பதை ஆசியப் பொருளாதார உருவாக்கத்தின் ஒரு பகுதியான கட்டுரையாக எழுதியிருந்தேன். அப்போதும் இப்போதும் யாருமே இதைப்பற்றிப் பெருதாக அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.

 15. இரு தினங்களுக்கு முன் நடந்த ஆசியான் மாநாட்டில் , ஆசிய ஒன்றியம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அமெரிக்க பொருளாதார சீரழிவில், புதிய உலக நாயகன் ஆசியாவில் உருவாகப்போகிறான். இதன் முதற்படி- ஆசிய ஒன்றியம், இரண்டாவது- ஆசிய நாணய சபை, மூன்றாவது- நேட்டோ போன்றதொரு இராணுவ கூட்டமைப்பு. இதில் அமெரிக்க போல வருவதற்கு’ இந்தியாவும் சீனாவும்’ சந்தை ஆதிக்கம் மற்றும் பாதுகாப்புத் துறையில் தம்மை நிலை நிறுத்த போட்டியிடுகின்றன.
  நாவலனின் கட்டுரை, சமகால அரசியல் நகர்வுகள் எவ்வாறு மாறுதல் அடையும் என்பதனை சுட்டிக்காட்டி உள்ளது

 16. கடந்த பத்தாண்டுகளாக மூலதனம் தீவிரமாக பாரியளவில் திரட்சியடையும் இந்திய உபகண்டத்தில் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை என்ற போர்வையில் அரசுகள் புதிய ஒடுக்கு முறை ஆயுதங்களை தரித்துள்ளன. இந்த அரசுகளுக்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புகளான மாவோஸ்ட்டுகள் தாம் எதிர்நோக்கும் புதிய சவால்களை சமாளிக்க தம்மை புதிய முறையில் தகவமைக்க தவறின் புலிகளின் முடிவே இவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது கசப்பான உண்மை.

 17. நாவலனுக்கு நன்றியுடன்

  “சீன-இந்தியப் போட்டியில் இலங்கை தனக்குப் பகைமையான ஒரு நாட்டின் கட்டுப்பாட்டினுள் வருவதைத் தவிர்க்கவே….” என்பது கவனக்குறைவான சொற்பயன்பாடு. என் மனதில் இருந்தது “இந்திய அமெரிக்க நெருக்கத்தின் பின்னணியில் இலங்கை தனக்குப் பகைமையான ஒரு நாட்டின் கட்டுப்பாட்டினுள் வருவதைத் தவிர்க்கவே….” என்பதாகும்.

  “இந்தியாவை சீன இணைவிலிருந்து பிரித்தெடுப்பதும் அதனை தனது வசதிக்கு ஏற்ப கையாள்வதுமே அமரிக்காவின் தந்திரோபாயத்தின் முதன்மைப் பகுதி”.
  இதில் எனக்கு அதிகங் கருத்துவேறுபாடில்லை

  “இவ்வழுத்தங்களுக்கு எதிரான இந்தியா- சீனா இணைந்த எதிர்ப்பு” என்பது ஏதோ புரிந்துணர்வு என்ற கருத்தைச் சுட்டி நிற்கிறது.
  அதில் எனக்கு ஐயம் உண்டு.

  இலங்கை அரசுக்குச் சீன உதவிக்கு வேறு வரலாற்றுக் காரணங்களும் உள்ளன.
  எனினும் சீன-இந்திய முரண்பாட்டை மிகைப்படுத்துவதன் வெகுளித்தனம் பற்றி உடன்படுகிறேன்.
  சீனாவுக்குத் தென்னாசியாவில் ராணுவக் கேந்திர முக்கித்துவமின்மையும் இந்தியாவுடனான மோதலின்மைக்கு ஒரு காரணி. அதே வேளை இந்திய மேலாதிக்க நோக்கங்கட்கு நீண்ட வரலாறுமுண்டு.

  நிச்சயமாக இந்திய நிறுவனம் அமெரிக்காவுடனான தனது இன்றைய நெருக்கத்தைத் தனது பிராந்திய மேலாதிக்க நோக்கங்கட்குப் பாதகமாக அமைய அனுமதிக்காது.
  மறுபுறம் — குறிப்பிடத்தக்க அளவிலான சீன ஆயுத உதவி மிகவுங் காலங்கடந்தே நடந்ததும் கவனிக்கத் தக்கது. சீனாவுக்கு இந்தியாவினளவுக்கு இலங்கை உள் விவகாரங்கள் முக்கியமானவையல்ல. சூடானிலும் கினியிலும் சீனா இவ்விதமான அறஞ்சாராத அணுகுமுறையையே கடைப்பிடிக்கிறது.

  இந்திய அரசு எப்போதுமே நக்சலைட்டுக்களை ஓழிப்பதில் தீவிரமாகவே இருந்து வந்துள்ளது. 1975க்குப் பின் கடந்த சில ஆண்டுகளில் தான் நக்சலைட்டுக்களின் செல்வாக்கு ஓங்கியுள்ளது. மாஓவாதிகள் அரசுக்குப் பெரும் மிரட்டலாக இருந்து வருவதாக மன்மோகன் சிங் போன வருடமுதலில் அறிவித்தார்.

  இந்திய அரசு மாஓவாதிகளை மட்டும் இலக்கு வைக்கவில்லை. எல்லா மக்கள் இயக்கங்களையுந் தான். (1950களில் தெலிங்கானா விவசாயிகள் போராட்டம் நசுக்கப்பட்ட விதம் நினையவுகூரத்தக்கது)
  சல்வார் ஜுடுன் சில ஆண்டுகள் முன் உருவாக்கப்பட்டது. அதன் மாஓவாதி எதிர்ப்புப் பயங்கரவாதம் எதிர்பார்த்த பலனளிக்கவில்லை.
  ஆந்திராவிலேயே இந்திய அரசு தனது முதல் வெற்றியைக் கண்டது. அது நிலைக்குமா என்பது வேறு கதை.
  இலங்கையிற் செய்ததை அங்கும் செய்ய முயலலாம்.
  முடியுமா என்பது தான் கேளவி.
  மாஓவாதிகள் தம்மை முழுமையான மக்கள் இயக்கமாக்கி மேலும் அரசியல் வேலைகளைச் செய்வார்களாயின் கதையே வேறாகிவிடும்.

Comments are closed.