அமரிக்காவில் தொடர்ச்சியான பொருளாதாரச் சரிவு : வறிய நாடுகளைக் குறிவைக்கும் நிறுவனங்கள்

dollarஅமரிக்க உள்ளூர் மக்களையே சுரண்டிக் கொழுத்த வால் மார்ட் நிறுவனம் உட்பட பல பல் தேசிய நிறுவனங்கள் இந்தியா இலங்கை போன்ற ஆசிய நாடுகளையும் ஆபிரிக்க நாடுகளையும் குறிவைக்கின்றன. அமரிக்க அரசு உலகம் முழுவதும் இந்த நிறுவனங்களை முன்வைத்தே போர்களையும் அழிவுகளையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

வால் மார்ட்டின் கடைகள் வெறுமையாகக் காணப்படுகின்றன. இது குறித்து வால் மார்ட்டின் உள்ளக தொடர்பாடல் ஒன்று வெளியாகி அமரிக்காவில் பரபப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஏனைய சில்லரை வணிக பல்தேசிய நிறுவனங்களில் பல இவ்வருடம் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன. பெஸ்ட் பை நூற்றுக்கணக்கான நிறுவனங்களை மூடுவதாக அறிவித்துள்ளது.
அமரிக்க தனி நபர் வருமானம் கடந்தவருட டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 50- 55 பில்லியன் டொலர்கள் குறைவடைந்துள்ளது.

கடந்த 20 வருடங்களில் இவ்வ்வளவு அதிகமாகக் குறைவடைந்துள்ளது இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்படுகின்றது.

அமரிக்க மக்களை ஒட்டச் சுரண்டிய இந்த நிறுவனங்கள் ஆசிய ஆபிரிக்க நாடுகளைக் குறிவைத்து நகர்கின்றன. இவற்றைப் புரிந்துகொள்ளாத அப்பாவிப் பொதுமக்கள் இப் பல்தேசிய நிறுவவங்களின் அடிவருடிகளை இனம்கண்டு கொள்வதில்லை. பலமிழக்கும் ஏகாதிபத்தியங்கள் புதிய பாசிச உலகம் ஒன்றை மக்கள் மீது திணித்துவருகின்றன. அரசுகளின் நேரடியான நெறியளர்களாக பல்தேசிய நிறுவனங்களே திகழ்கின்றன.

துணைத் தகவல்கள்:

http://www.bloomberg.com/news/2013-02-27/wal-mart-s-slowness-stock-shelves-worsens-as-sales-stay-s.html

http://theeconomiccollapseblog.com/archives/retail-apocalypse-why-are-major-retail-chains-all-over-america-collapsing

One thought on “அமரிக்காவில் தொடர்ச்சியான பொருளாதாரச் சரிவு : வறிய நாடுகளைக் குறிவைக்கும் நிறுவனங்கள்”

  1. 1964. Indiana, USA. President Lyndon Baines Johnson of Texas is still in the hearts  and minds of all almost all Americans as he did not plunder all his popularity in Vietnam. He said that there is time for everything with a Southern Accent. It is he who changed America into  a welfare state with an array of social and civil rights programs and legislation.

Comments are closed.