அமரிக்கத் தூதுவர் தலையீடு : ரனில் விடுதலை, ஏனையோர் காவலில்!

இலங்கைக்கான அமரிக்கத் தூதுவர் பட்டானிஸ் தலையிட்டு ரனில் விக்கிரமசிங்கவை தடுப்புக்காவலிலிருந்து  விடுவித்துள்ளார் என பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இதே வேளை சிரச தொலைக்காட்சி இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மங்கள சமரவீர மாத்தறையில்  அமைந்துள்ள அவரது இல்லத்தில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்படு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  ரூபவாகினி தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவின் மகள் மற்றும் மனைவி ஆகியோரும் இராணுவத்தினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.   இதே வேளை அஸ்கிரிய மகா நாயக்கர்கள் தேர்தலை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.