அப்பாவி பழங்குடிகளை வேட்டையாடத் துவங்கி விட்டது இந்திய அரசு.

க்ரீன் கண்ட் என்னும் பெயரில் பழங்குடி மக்கள் மீதும் மாவோயிஸ்டுகள் மீதும் போரைத் தொடுத்துள்ள இந்திய இராணுவத்திற்கு எதிராக மாவோயிஸ்டுகள் போராடிவருகிறார்கள் .

இப்போராட்டத்தின் விளைவாக சமீபகாலமாக மாவோயிஸ்டுகளின் பதில் தாக்குதல் அதிகரித்துள்ளது. சமீபத்தில் அரசின் ஆள்காட்டிக் ஆயுதம் தாங்கிக் குழுவான சல்வார்ஜூடுமைச் சார்ந்தவர்களும் சி.ஆர்.பி.எப்ஃ படையினரும் சென்ற வாகனம் மாவோயிஸ்டுகளின் கண்ணி வெடியில் சிக்கிச் சிதற அதில் பலர் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளின் தொடர் தாக்குதல் குறித்து மௌனமாக இருக்கும் மத்திய அரசு தங்களின் ஆளும் வர்க்க சார்பு ஊடகங்கள் மூலம் விமானத் தாக்குதலை தொடங்குவதற்கான புறச்சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தாந்தேவாடா சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி அப்பாவி பழங்குடிகளை கைது செய்து வருகிறது இந்திய அரசு. இதனால் பழங்குடி கிராம மக்கள் தங்களின் கிராமங்களை விட்டு வெளியேறி வருகிறார்கள். எவ்வித சிவில் உரிமைகளும் அற்ற பழங்குடிகளை இந்தியா வேட்டையாடத் துவங்கியிருக்கும் நிலையில் தண்டகாரண்யா நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பழங்குடிகள் கைது தொடர்பாக கருத்துத் தெரிவித்த மாவோயிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான ராமண்ணாபழங்குடி கிராம மக்களான அவர்கள் 6 பேரும் அப்பாவிகள். அவர்களில் மாவோயிஸ்ட் தளபதியும் ஒருவர் என்று கூறுவது பொய்யான தகவல். போலியான குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்என்று ராமண்ணா கூறியுள்ளார்.