அஜ்மல் அமீர் கசாப்புக்கு மரணதண்டனை.

பாராளுமன்றத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவின் கூட்டு மனச்சாட்சிக்காக வழங்கப்படும் தீர்ப்பு என்று அப்சல்குருவுக்கு தீர்ப்பு வழங்கிய பின்பு ஒட்டு மொத்த இந்தியர்களும் மிக ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மும்பைத் தாக்குதல் திவீரவாதி அஜ்மல் அமீர்  கஸாபுக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் நீதிமன்றத்திர்கு வரும் போதும் போகும் போதும் ஊடகங்களைப் பார்த்து வெற்றிச் சாடை காட்டத் தவறியதில்லை. இந்திய ஊடகங்களோ தீர்ப்பு எழுதப்படுவதற்கு முன்னரே கஸாபை எப்படிக் கொல்லலாம் என்றும் என்ன மாதிரி தண்டனை கொடுக்கலாம் என்றும் வித விதமான எஸ்.,எம்.எஸ் போட்டிகளை நடத்தின. பிரபாகரன் உடலை எரிக்கலாமா? புதைக்கலாமா? என்று ஆங்கில ஊடகங்கள் தங்களின் மன வக்கிரங்களை வெளியிட்டது போல இப்போது ஒரு கஸாப் கிடைத்திருக்கிறார். மும்பை தாஜ் ஹோட்டலில் கொல்லபட்ட அனைவருமே கோடீஸ்வரர்கள். இதுவே ஒரு சராசரி இந்தியனுக்கு நடந்திருந்தால் இந்திய ஆளும் வர்க்கங்கள் இத்தனை தூரம் கொதித்திருப்பார்களா? கஸாபுக்கு இன்று தீர்ப்புச் சொன்ன தகிளியானி “ 

 

, கசாப் செய்த செயலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கசாப் மனம் திருந்தி மறு வாழ்வு பெறுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது. அவராகவே விரும்பி லஷ்கர் தொய்பா அமைப்பில் இணைந்து இந்த படு பாதகச் செயலை செய்துள்ளார். எனவே அவர் திருந்துவார் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே மரண தண்டனையைத் தவிர வேறு எந்தத் தண்டனையும் குறைந்ததாக இருக்க முடியாது. கசாப்புக்கு இரக்கம் காட்டவும் முடியாது என்றார்.

2 thoughts on “அஜ்மல் அமீர் கசாப்புக்கு மரணதண்டனை.”

  1. ////கசாப் செய்த செயலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கசாப் மனம் திருந்தி மறு வாழ்வு பெறுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது. அவராகவே விரும்பி லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இணைந்து இந்த படு பாதகச் செயலை செய்துள்ளார். எனவே அவர் திருந்துவார் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே மரண தண்டனையைத் தவிர வேறு எந்தத் தண்டனையும் குறைந்ததாக இருக்க முடியாது. கசாப்புக்கு இரக்கம் காட்டவும் முடியாது என்றார்./
    //

    இஸ்லாம்(தமிழ்) சமுதாயத்துக்கு ஒரு எச்சரிக்கை இது

Comments are closed.