அன்பு…. அக்கா அசினிற்கு : பா.மாணிக்கம்

அன்புள்ள அக்கா அசினிற்கு,

பாக்கெட் பரிஸ்சிலிருந்து பணம் போட்டு உங்கள் படங்களைப் பார்த்து உங்களை வளர்த்து விட்ட பாமரத் தமிழ் ரசிகன் எழுதிக் கொள்ளும் சிறு கடிதம் இது. வசதிகளும் வாய்ப்புகளும் பெருகி இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக நீங்களும் வளர்ந்து விட்டது குறித்து எனக்கு எந்த சந்தோசமும் இல்லை அதே நேரம் கவலைகளும் இருந்ததில்லை எல்லா பாமரர்களைப் போல அதில் அசினோ, த்ரிஷாவோ நன்றாக நடித்தால் ரசித்து விட்டுக் கலைந்து செல்கிற சாராசரி நான்.

எந்த வம்பு தும்புகளுக்கும் செல்லாமல் நானுண்டு என் வேலையுண்டு என்று கழிகிறது என் வாழ்க்கை. இந்த நேரத்தில்தான் வித்தியாசமாக உங்களின் இலங்கைப் பயணம் தொடர்பான பேட்டி சிலவற்றை உங்களின் சில ஊடகங்களில் வாசித்தேன். அதில் ”ஏன் அக்கா எங்களை தமிழகத்தில் இருந்து யாரும் வந்து பார்க்கவில்லை? என்று ஈழ மக்கள் உங்களிடம் கேட்டதாகவும் அதையே நீங்கள் வந்து எங்களிடம் கேட்டுள்ளீர்கள்.

ஒரு பச்சைத் தமிழனாகப் பிறந்த என் கன்னத்தில் ஓங்கி பொளேர்ணு ஒரு அறை விட்ட மாதிரி இருந்தது. ஆறரை கோடி பச்சைத் தமிழர்கள் இருந்தும் ஏண்டா? நீங்கள் எல்லாம் உடம்பு முடியாம இருக்கும் உங்கள் ரத்த சொந்தங்களை ஏன் போய் பார்க்கவில்லை என்பதுதான் உங்கள் கேள்வியின் நோக்கம். அல்லது நீங்கள் சொல்லவருவதும் அதைத்தான். அக்கா எங்களுக்கெல்லாம் வராத பாசமும் கருணையும் உங்களுக்கு வந்ததை நினைச்சு ஒரே பெருமையா இருக்குக்கா? ஆனா உங்களோட இந்த பாசம் எப்பேற்பட்டது? என்ன மாதிரியானது? இந்தக் கருணைக்குப் பின்னால் இருப்பது வெறும் தொழில் நோக்கம் மட்டும்தான? அல்லது அதையும் தாண்டி புனிதமான வேறு ஏதேனும் நோக்கங்கள் உண்டா? இந்தக் கருணையும் இரக்கமும் கேராளாவில் உங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை மணி நேரத்தில் செல்லக் கூடிய முத்தங்காவின் காடுகளில் இருந்து வெளியேற்றப் பட்ட பழங்குடி மக்கள் மீது ஏன் வரவில்லை? என்பதை எல்லாம் யோசிச்சப்போ எழுதத் துவங்கினது தான்க்கா இந்தக் கடிதம்……….

ஏன் தமிழ்நாட்டில இருந்து யாருமே போகல்ல என்று கேட்டவுடன் தான் நீங்க தமிழ் மக்கள் மீது வெச்சிருக்கிற பாசமும் அன்பும் புரிஞ்சுது……..ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எங்களுக்கெல்லாம் அந்த அன்பு உண்மையிலேயே இல்லையா? என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்கும் போதுதான்க்கா………. அந்த கருப்பு நாட்கள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

உங்களுக்கு ஏங்கேக்கா அது தெரியப்போவுது. அப்போ நீங்க எந்த ஷூடிட்ங்கிறாக எந்த நாட்டுக்கு போயிருந்தீங்களோ, அல்லது எந்த உச்ச நடிகரின் படத்தை குறிவெச்சு அக்ரீமெண்ட் போடுற பிஸியில் இருந்தீங்களோ யாருக்குத் தெரியும். ஆனா அந்த நாட்கள் அவ்வளவு சுகமானதாக எங்களுக்கு இருக்கவில்லை. அப்போதான் நாங்க போர் நிறுத்தம் கேட்டுப் போராடினோம். தமிழக சினிமாக்காரங்க, அரசியல்வாதிங்க, எல்லோரும் அவங்க அவங்க லெவலுக்கு எவ்வளவு நடிக்க முடியுமோ அவ்வளவு நடிச்சாங்க, அதுல போலிகளும் இருந்தாங்க உண்மையானவங்களும் இருந்தாங்க….ஆனா அதுக்கு முன்னாடியே 2008 – துவக்கத்துலயே வடக்குப் பகுதி தமிழ் மக்கள் மேல இலங்கை அரசு பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்துடுச்சு. ஒண்ணும் இல்லை ஏ – 9 சாலையைப் பற்றி ராஜபட்சே ஆளுங்க மூலமா கேள்விப்பட்டிருப்பீங்க இல்லையா? அதை மூடிட்டாலே போதும் அதுவே அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடைதான்.

இப்போ நீங்க துணிச்சலா போனதா சொல்றீங்க இல்லியா? அந்தப் பகுதி மீதுதான் தடை கொண்டு வந்தாங்க. அப்பவே ஈழத்தில் பட்டினிச் சாவுகள் ஆரம்பிச்சிடுச்சு தமிழ் நாட்ல பல அமைப்புகளும் தனி நபர்களும் மக்களிடம் சென்று ஈழ மக்களுக்காக உணவு, மருந்து எல்லாம் சேமிச்சு அனுப்பக் காத்திருந்த போது கடைசி வரை இந்தியா அந்த மருந்துகளையோ துணிமணிகளையோ ஈழ மக்களுக்கு அனுப்பச் சம்மதிக்கவில்லை. அப்போதான் இலங்கைக்கு உணவு அனுப்புவோம்ணு கோரி நூறடி ரோட்ல நெடுமாறன் உண்ணாவிரதம் எல்லாம் இருந்தார். கடைசி வரை பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த உணவுகளும், மருந்துகளும் புழுத்து அழுகி நாசமாகப் போனதே தவிற பட்டினியால் வாடிய பத்து ஈழத் தமிழனுக்குக் கூட அது கிடைக்கவில்லை.

அதன் பிறகு போர் வந்தது பாதுகாப்பு வலையம்ணு இலங்கை அறிவிச்ச பகுதிகளுக்குள் சென்ற தமிழ் மக்களுக்கு மருத்துவ வசதிகளோ, உணவோக் கூட இல்லாமல் கொத்துக் கொத்தாக மக்கள் செத்து மடிஞ்சாங்க………..ஆமாக்க அவங்க தமிழர்கள் என்பதால் கொல்லப்பட்டாங்க…………நீங்க சினிமாவுல நடிக்கிற மாதிரி டம்மித் துப்பாக்கியை வெச்சு போடுற டிஷ்யூம் சண்டையில்லை இது நிஜமான சண்டை. பாஸ்பரஸ் குண்டுகளும், கிளஸ்டர் குண்டுகளும் வீசப்பட்ட கொடூர யுத்தம். ஈழ வரலாறு அதை நான்காம் ஈழப் போர் என்கிறது.

சினிமாவுல மட்டுமே ஹிரோயினைக் கடத்தும் வில்லன் எல்லாப்படத்திலும் வீழ்த்தப்படுவான். ஆனா ஈழத்திலோ நிஜ வில்லன் ராஜபட்சே போட்ட ஆட்டம் இருக்கே….கடைசி வரை வில்லன் வீழவே இல்லை. இப்போ அந்த வில்லன்தான் அங்கே அதிபர்…. அப்போ பட்டினில் கிடந்த ஈழ மக்களுக்காக புலம்பெயர் மக்கள் உணவு, மருந்துப் பொருட்கள் எல்லாம் சேமிச்சி வணங்காமண் என்றொரு கப்பலை இலங்கைக்கு அனுப்பினாங்க ஆனால் அந்த நிவாரணக் கப்பலைக் கூட எங்க கடல் பகுதிக்குள்ள அனுமதிக்க மாட்டோம்ணாரு ராஜபட்சே………… பல மாதமா அந்தக் கப்பல் கடலிலேயே சுற்றி வந்து கடைசியில் சென்னையில் வந்து சோந்து போய் படுத்துக்கிச்சு. ஒரு வழியாக அதை கொழும்பு அனுப்புனாங்க ஆனா அது கொழும்பு போய் சேர்ந்தப்போ போரே முடிஞ்சி போச்சு உயிரோட இருக்கும் போதே உணவு கொடுக்க மறுத்த அரசாங்கம் பொணங்களுக்காகவது அந்தப் பொருட்களை கொடுத்திருக்குமாணு தெரியல்ல…….. அப்புறம் அழுதோம்…கண்ணீர் விட்டு கதறினோம். ம்ஹூம் யாரும் அசைஞ்சு கொடுக்கல்லியே…….ஒரு கட்டத்தில் தமிழ் நாட்டுலேர்ந்து சில பிரஸ் காரங்க இலங்கை போய் பார்த்து வந்தா என்னணு இலங்கை தூதரகத்துல போய் விசா கேட்டாங்க. ஆனா அவங்க என்ன செஞ்சாங்க தெரியுமா? தமிழைத் தாய் மொழியாக கொண்ட எந்த ஊடகவியளார்களுக்கும் விசாவே கொடுக்கல்ல. இதெல்லாம் ஏன் இங்கே சொல்றாருண்ணு நினைக்கிறீங்களா? காரணம் இருக்கு ………. நீங்க சொல்றீங்கல்லியா ஏன் எங்களை பாக்க தமிழ்நாட்டிலேர்ந்து யாருமே வரலைணு வன்னி மக்கள் கேட்கிறாங்கண்ணு அதை வந்து இப்போ சொல்றது ஈஸி.

உங்கள் இரக்க குணத்தைப் பார்த்தா புல்லரிக்குதுக்கா ஆனா உங்களோட இந்த இரக்க குணம் 2009 – ல் எங்கக்கா போச்சு? ஆக இலங்கையில சாகிற ஈழத் தமிழனை காப்பாத்த இங்குள்ள தமிழன் போக முடியாம இருக்குறதுக்கு காரணம் ஒன்று இலங்கை பக்கத்து நாடு…….இரண்டாவது இந்தியா வேடிக்கை பார்க்கிற பக்கத்து நாடு, இந்தியாவும் தமிழக அரசும் போக விடாதது மட்டுமல்ல அவங்களுக்காக பேசுனாக்கூட ஜெயில்ல தூக்கிப் போட்டுறாங்க இன்னைக்கு தேதியில கூட குறைஞ்சது 500 பேராவது ஈழ மக்களுக்காகப் பேசி சிறையில் இருக்காங்க. தவிறவும் இங்கிருந்து போறவங்க எல்லோரும் அவங்களுக்கு பொன்னாடை போர்த்தியும் சால்வை கொடுத்துட்டும் வந்துட்டாங்க. இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்ற ராஜபட்சேவுக்கு தர்மசங்கடம் கொடுக்கிற மாதிரியான எந்த ஒரு நபரையும் அவங்க அனுமதிக்க மாட்டாங்க இதுதான் அங்குள்ள நிலமை. மற்றபடி அங்க போகணும், மக்களுக்கு உதவணும், கூடவே தமிழ் மக்களின் மூச்சடங்கிய நந்திக்கடலை பார்க்கணும்ணெல்லாம் எங்களுக்கு மட்டும் ஆசை இருக்காதா? என்னக்கா சொல்றீங்க……………..ஆனா நீண்டகாலமாக அந்த மக்களை நேசித்த சக்திகள் எல்லாம் போக விரும்பிய போது கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. நீங்களும் போய் வந்திருக்கிறீர்கள்.

எப்பேற்பட்ட சாதனையை செய்து வந்திருக்கிறீங்க நீங்க நான் சென்றது இலங்கை அரசை ஆதரிப்பதற்கல்ல என்றும் எனது நடிப்புத் தொழில் தொடர்பாகவே நான் சென்றேன் என்றும். இலங்கைக்குச் சென்ற பின் தமிழர்கள் அங்கே படும் துன்பங்கள் குறித்து கேள்விப்பட்டேன். விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த யாழ்பாணத்திற்கு துணிச்சலாகச் சென்றேன். இதுவரை எந்த ஒரு முக்கியப் பிரமுகர்களும் 35 வருடமாக இதுவரை நுழைய முடியாத யாழுக்குச் சென்றேன் சென்றேன் என்று பீற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நந்திக்கடலில் துயரமான அந்தப் போர் முடிவுக்கு வந்த போது எஞ்சியிருப்போரை முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கி வைத்திருந்தது இலங்கை அரசு. தமிழக பத்திரிகையாளர்கள், ஈழ ஆதரவாளர்கள், ஏன் இங்கிருந்து சென்ற எம்.பிக்கள், அது ஏன் இலங்கையிலேயே உள்ள எதிர்கட்சி எம்பிக்களைக் கூட முகாம்களைப் பார்வையிட அனுமதிக்க வில்லை. உலகின் கண்களை மறைக்க சில ரெடிமேட் முகாம்களை உருவாக்கி அதிலிருந்த மக்களை மட்டுமே பார்வையிட இலங்கை அரசு அனுமதித்தது. நீங்கள் சென்றதும் அப்படியான ரெடி மேட் முகாம் ஒன்றிர்குத்தான். அந்த ரெடி மேட் முகாமுக்கிற்குக் கூட நீங்கள் தனியாக சென்று ஏதோ இமையமலை ஏறியது போல பில்டப் செய்கிறீர்களே! நீங்கள் தனியாகவாச் சென்றீர்கள்? இலங்கையில் இருந்தவரை உங்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ராஜபட்சேவின் மனைவியும் முன்னாள் மாடல் அழகியுமான ஷிராந்தி விக்கிரமசிங்கேவுடன் அதி உயர் பாதுகாப்புடன் நீங்கள் சென்றது இலங்கை அரசின் இராணுவ விமானத்தில், இராணுவத்தினரின் புடை சூழ யாழ்பாணத்தின் ரெடிமேட் முகாமிற்குச் சென்றதைத்தான் நீங்கள் சிலிர்த்துப் போய் சினிமா பாணியிலேயே பெருமிதமாகச் சொல்கிறீர்கள். சொல்வதோடு மட்டுமல்லாமல் தமிழகத்திலிருந்து ஏன் யாருமே வரவில்லை என்று அவர்கள் கேட்பதாக நீங்கள் கேட்கிறீர்கள். இங்குள்ளவர்களை குற்றவாளியாகக் காட்ட முனைகிறீர்கள். என்ன செய்வது காலக் கொடுமை தொட்ட அழுக்கு எங்கே கைகளில் ஒட்டிக் கொள்ளுமோ என்று டிஸ்யூ பேப்பரில் கை துடைக்கிற நீங்கள் சொல்லி நாங்கள் ஈழ மக்களின் துயரங்களை தெரிந்து கொள்ளும் அந்தச் சூழலும் வந்து விட்டது.

சரி கிடக்கட்டும்,

கொழும்பில் பிளாப்பான ஐஃபா விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் பின்னால் ஒரு அரசியல் நோக்கம் இருக்கிறது. சீமான் துவக்கி வைத்த அந்த எதிர்ப்பு வெற்றியும் அளித்தது. ஆனால் எந்த நடிகரும் இலங்கை செல்லக் கூடாது என்றெல்லாம் சொல்வது கொஞ்சம் ஓவரானது என்பது எனக்கும் தெரியும். இப்படி எல்லாம் கட்டுப்பாடு போட்டால் ஒரு கட்டத்தில் கட்டுப்பாடு போட்டவர்களே முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டு நிற்க நேரிடும். அந்த வகையில் உங்களின் தொழிலான சினிமா படப்பிடிப்பிற்காக நீங்கள் இலங்கை சென்றது தொடர்பாக நான் உங்களை ஆதரிக்கிறேன். கிரிக்கெட் விளையாடச் செல்கிறார்கள், தமிழக எம்,பிக்கள் செல்கிறார்கள் நான் சினிமாவில் நடிக்கச் செல்லக் கூடாதா? என்ற உங்களின் கேள்வி நியாயமானது. யார் எதிர்த்தாலும் நான் உங்களை இந்த விஷயத்தில் ஆதரிப்பேன் ஆனால், அதையும் தாண்டி தமிழக மக்கள் ஏன் செல்ல வில்லை என்று கேட்பதோடு அண்ணன் விஜய்யும், சூர்யாவும் வரவில்லையா? என்று கேட்கிறார்கள் என்று சொல்கிறீர்களே அங்கேதான் அசின் நீங்கள் உங்கள் வர்க்க குணாம்சத்தில் பளிச்சிடுகிறீர்கள்.

ஆமாக்கா நீங்க இலங்கை சென்று உங்கள் தொழிலை மட்டுமா பார்த்து விட்டு திரும்பியிருக்கிறீர்கள். வில்லனின் மனைவி ஷிராந்தியோடு கொழும்பில் ஷாப்பிங் போனதும், கொழும்பில் அறக்கட்டளையை பதிவு செய்து கோடி கோடியாய் பண்ட் வாங்க வழி ஏற்படுத்தி வந்திருப்பதும் உங்கள் தொழில் தொடர்பானதா? எந்த சினிமாவுக்காக இதைச் செய்தீர்கள்? என்ன சுவாராஸ்யத்துக்காக இந்த ஸ்கிரிப்ட் என்று சொல்ல முடியுமா? இது தொழில் மட்டுமே தானா? அல்லது அதையும் கடந்து தனிப்பட்ட லாபங்களுக்காக கொன்றொழிக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் மரணங்களோடு விளையாடவில்லையா? என்பதை நீங்கள் எண்ணிப்பாருங்கள். ஷூட்டிங் போன இடத்தில் நீங்கள் ஏன் இலங்கை அரசின் நல்லெண்ணத் தூதராக யாழ்பாணம் சென்றீர்கள்.

நீங்கள் உங்களின் பயணத்தின் பின்னர் நான் 300 தமிழர்களுக்கு சொந்தச் செலவில் ஆபரேஷன் செய்தேன். ஒரு ஆபரேஷனுக்கு ஐந்தாயிரம் செலவு. எல்லாம் என் சொந்தப்பணம். பத்தாயிரம் பேருக்கு ஆபரேஷன் செய்ய இருக்கிறேன். 150 குடும்பங்களை தத்தெடுத்திருக்கிறேன்.அறக்கட்டளை துவங்கியிருக்கிறேன் என்று செலவுக்கணக்கு சொல்வது இருக்கட்டும் வருமானம் எவ்வளவு என்று சொல்லவில்லையே? ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்களை இனப்படுகொலை செய்த அரசு இலங்கை அரசு என்பதை இப்போது உலகம் ஏற்றுக் கொள்ளத் துவங்கியிருக்கிறது. புலம்பெயர் மக்கள் மற்றும் தமிழக மாற்று இயக்கங்களின் போராட்டம் காரணமாகவும் சில மேற்குலக ஊடகங்களின் கடும் விமர்சனம் காரணமாகவும் ஐநா அவை இறுதிப் போரின் போது நடந்த மனித உரிமை மீறலை விசாரிக்க மூவர் குழுவை நியமித்திருக்கிறது. அக்குழுவின் விசாரணைகள் உண்மையாக நடக்க உலகம் முழுக்க மனித உரிமையாளர்கள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அழுத்தத்தின் ஒரு பகுதிதான் ஐஃபா விழாவை புறக்கணிக்கக் கோரியது. அக்கா……. சீமானும் சினிமாவில்தான் இருக்கிறார் இந்த வம்பு தும்பை எல்லாம் தூக்கி எரிந்து விட்டு முப்பது லட்சம் சமபளம் வாங்கி சினிமாவில் மிக வசதியாக செட்டிலாகக் கூடிய அளவுக்கு அவருக்கும் தொடர்பிருந்தும் அவர் விடாமல் மெனக்கெட்டு போராடுகிறார் சிறைக்குச் செல்கிறார். ஆனா நீங்க அய்யோ நான் உங்களை போராடவோ சிறை செல்லவோ சொல்லவில்லை. ஏன் தமிழ் மக்களின் வேதனை தெரியாமல் நல்லது செய்கிற நோக்கில் தீயதைச் செய்கிறீர்கள். என்பதுதான் என் கேள்வி. ஆக, இலங்கை ஒரு இனக்கொலை தேசம். அதை ஆளுகிறவர்கள் இனக்கொலை குற்றவாளிகள். ஒரு இனகொலை குற்றவாளியின் துணைவியாரோடு நீங்கள் அவர்கள் யாரைக் கொன்றார்களோ அவர்களையே போய் பார்த்து வந்து விட்டு வந்து இங்கிருப்பவர்கள் சரியில்லை என்பது போன்று பேசுகிறீர்கள். இதைச் சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. இலங்கையின் இனக்கொலை குற்றவாளிகளுக்கு இப்போது உங்களை மாதிரி சாக்லெட் பேபிகளின் முகங்கள் தேவைப்படுகிறது. இதோ உங்களைத் தொடர்ந்து தமிழக சினிமா நட்சத்திரங்களும் கொழும்பு செல்லப் போகிறார்கள் என்று உங்களை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்கள்….இலங்கையின் கொடூர ரத்தம் தோய்ந்த அதன் கோர முகங்களை மறைக்க அக்கா நீங்கள் உதவி புரிந்து வந்திருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை.

தமிழகத்தில் மிக கொதிப்பும் அவலமுமாய் மாறிப் போன ஈழக் குட்டையில் எப்படி மீன் பிடிப்பது என்பதை நீங்கள் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறீர்கள். உங்களுக்கு எல்லாமே சினிமா போல இருக்கிறது. ஆனால் எங்களுக்கு அது அப்படியில்லை……ஏனென்றால் நாங்கள் நடிகர்கள் இல்லை.உங்களின் சினிமாக்களை காசு கொடுத்து பார்க்கிறவர்கள் மட்டுமே……..அக்கா விளையாடுங்கள்……..விளையாடிக் கொண்டே இருங்கள்………

நன்றியக்கா .

உங்கள் பாசமிகு தம்பி,

பா.மாணிக்கம்.

49 thoughts on “அன்பு…. அக்கா அசினிற்கு : பா.மாணிக்கம்”

 1. தமிழ்நாட்டுத் தமிழனுக்கு நடிக நடிகையர் என்ன செய்யினமென்பதை பார்ப்பதே முழு நேர வேலையாகிவிட்டது.அசினென்ன செய்தலென்ன குஸ்பு என்ன செய்தாலென்ன கண்டும் காணாமல் விட்டு விடுங்களேன்.இதுவெல்லாம் விளங்கக் கூடிய நிலையிலா நீங்கள் இருக்கின்றீர்கள்.ஒரு 300 வருசம் எடுக்குமோ தெரியாது நீங்களேல்லாம் மனுசராவதற்கு.

 2. ரதன் முட்டாள் மாதிரி ஏதோ உளறுகிறார். நடிகைகளோட தொப்புளைப் பார்க்கவும் அதுங்க பின்னால் ஜொள்ளு ஊத்திக்கிட்டு அலையிறதுக்காவும் இப்படியா? ஒரு இனத்தை கேவலப்படுத்துறீங்க?

 3. இந்தம்மா போனால்போய் தொழிலைப் பார்த்து விட்டு வரவேண்டியதுதானே? இது ஏன் ஷிராந்தியோடு இராணுவ விமானத்தில் போய் முகம்களில் போய் போட்டோவுக்கு போஸ் கொடுத்திட்டு வந்து நிங்க எல்லாம் ஏன் அங்க போகல்ல, அறிக்கை விடுறதை விட அங்க போகலாம்லியா என்றால் செருப்பால் அடிக்கத்தான் வேண்டும்.

 4. இலங்கையை இரண்டாக்குவது என கோத்த்பாயா ஆசைப்படுகிறார் ஒன்றாக்குவது என் சிராந்தி நினைக்க கூடாதா?நடிகை அசின் அறீவுஜீவியாய் சிந்திப்பது தவறா?தொடர்ந்தும் நாம் சிங்களவரோடு கோபத்தை பேணூவதை விட அய்யா சம்பந்தர் வ்ழியில் அறீவுபூர்வமாய் அணூகுவதே நல்லது.நடிகர் சரத்குமார் அறீக்கை இதை எடுத்து இயம்புகிறது.

 5. இக்கட்டுரைக்கு உரித்தான அன்பருடன் ஒரு கேள்வி…நீங்கள் இப்போது இலங்கையிலா உள்ளீர்கள்…? …இல்லை நீங்கள் ஒரு இலங்கையரா…?
  சிலவேளைகளில் இலங்கையராக இருக்கலாம்…ஆனால் நிச்சியமாக நீங்கள் இப்போது இலங்கையில் இருப்பவராக மட்டும் இருக்கமாட்டீர்கள்…!

  ஏனெனில் இங்கிருந்து தத்தம் கைளை உயர்த்த பயம்..!
  அந்த துணிவு ஒரு சிலரிடமே..இங்க அப்படியாரும் இல்லை”தற்போதைக்கு”..
  நீங்கள் ஒரு இலங்கைத்தமிழினாகயிருந்தால்..உங்கள் உங்கள் நலனை முதற்கொண்டு நீங்கள் சுயநலத்துடன் தப்பிப்பிழைத்துவிட்டீர்கள்..
  நீங்கள் ஓடும் போது திரும்பி பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்..இங்கு
  உங்கள் உதவிக்காக காத்திருந்தோர்களை…!

  நீங்கள் மட்டுமல்ல…இந்தியாவிலும் சரி..உலகு எங்கும் இருக்கும்..
  எம்,என் தாய்த்திருநாட்டில் நடந்த யுத்ததிற்காக இன்று குரல் கொடுப்பவர்களே…
  30 வருட யுத்தத்தில் கடைசியில் மட்டுமா என் மக்கள் மடிந்தார்கள்…!

  யுத்தம் வேண்டாம் என்று நினைத்திருந்தால்…விமானம் மூலம் உணவு பொதிகள் போடத்தெரிந்த பிராந்திய வல்லரசு…!
  ஆயுதம் கொடுத்து உதவியிருக்குமா (இரு பகுதியினருக்கும்)…?

  இந்திய தமிழ் நாட்டு மக்களே,அரசியல் வாதிகளே,கலைஞர்களே முதலில் உங்கள் நாட்டில் எம் போன்று உரிமைக்காக போராடி,
  உங்கள் இராணுவம் ஒழிக்கும் மக்களை காப்பற்றுங்கள்…!
  அவர்களுக்காக வருந்துங்கள்..உண்னாவிரதமிருங்கள்…!

  தமிழ் மொழி ..தமிழ் மொழி என்று கூறி இலாபம் தோடவேண்டாம்.
  எம்மக்களை கேட்டுப்பாருங்கள்…அவர்கள் சொல்வார்கள்…”நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்.இன்னும் ஒரு யுத்தம் வேண்டாம் என்று…! ”

  எது எப்படியிருப்பினும் நாம் வாழவேண்டும் எம் சகோதர மொழி மக்கள் உடனே…
  நாம் அவர்களுக்கு சமனான வாழ எமக்கான உரிமைகள் வேண்டும்…!
  அவ்வுரிமை இப்படி வராது…!
  எம் தாய்த்திருநாட்டின் தமிழ் அரசியல் வாதிகள் ஒன்று சேர்ந்து முன்வரும் போது தான் அது கிடைக்கும்.
  அதற்கு முடிந்தால் உதவி செய்க.. 
  உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை ..
  எம் உயிரில் இலாபம் தேடவேண்டாம்…

  இது எல்லோரையும் சாரும்…!
  Green cardபெற்றுவிட்டு இப்ப குரல் கொடுக்கும் எம் நாட்டு அன்பார்கள்…!எம் நலனின் மீது அக்கரை உண்டு என்று கூறி உண்ணாவிரதம் இந்தியா…!மற்றும் பாதுகாப்பாக மாளிகைகளில் வாழம் எம் நாட்டு தமிழ் அரசியல்வாதிகள்…! 

  1. “நீங்கள் இப்போது இலங்கையிலா உள்ளீர்கள்…? …இல்லை நீங்கள் ஒரு இலங்கையரா…?”
   இதையெல்லம் கேட்க நீங்கள் என்ன கியூ பிரான்ச் அதிகாரியா, சி.ஐ.டி./டி.ஐ.டி. அதிகாரியா/
   கருத்துக்கள் பற்றி மட்டும் பேசாமல் ஏன் தனிப்பட்ட விசாரணைகளில் இறங்குகிறீர்கள்?
   நீங்கள் யாரென்று யாராவது கேட்டர்களா?
   இணையத் தளங்களில் தனிப்பட்ட விடயங்கள் இழுக்காமலிருப்பது பண்பானது.

  2. இலங்கைத்தமிழர் அழிவில் கோடீஸ்வரர்களாக வாழும் இலங்கைத்தமிழர்களை
   இவர் இன்னமும் அறியவிலலயா? அல்லது அப்படி வாழும் ஒருவரா இவர்?
   அசின் கண் கொடுத்தாலும் பிழை, சிங்கள்வ்ர் தமிழரின் கண்ணைக் கெடுத்தாலும் பிழை. தொடரட்டும் தமிழரின் அழிவு வாழ்ந்திடுவோம் நாம் புலமெங்குமினிதாக்
   என்று சொல்வதே இவரின்நோக்கம். துரை

 6. எனக்கு ஆசின் தங்கச்சி மட்டும் தான். தங்கச்சிக்கு வந்த அக்கறை போலவே இங்கு புலன் பெயர் கனவான்களுக்கும் வந்திருக்கிறது. கொலைகாரர்களோடு சேர்ந்து மக்களுக்கு புல்லுப் போடப் போகிறர்களாம். வாழ்க ரமில்

 7. அசின் உனக்கேன் இந்த பிசின் வேலை…வந்தா வந்த சோலியை முடிச்சிட்டு போவியா…வந்ததே தப்பு! அதுக்குள்ள ஒரு சடையல் கதைகள்!! எப்பவுமே ஈழத்தமிழனுக்கு அழிவுதான்!!!

  1. ALL EELATHAMILAN MASSACRE SUPORTED BY KERALA MALAIYALI’S…THIS IS FACT…PLEASE DON’T CENSOR THIS TRUE!!!

   1. It was equally the job of Tamils in high positions. Do you want a list of names?
    The problem is the Indian capitalist expansionist state. Who in Tamilnadu state politics will stand up to it?
    If you have not the courage to denounce Chithamparam the Tamil killer of Aadhivaasis, you have no moral authority to denounce any other.
    Do not try to cover up for the sins of Tamilnadu politicians by pointing fingers at Malayalis or any other nationality.


 8. சின் மிகவும் துனிச்சலான நடிகை. புலி வீடு வீடாய் போய் பில்லைகலை பிடிச்சு சாக்காட்டும் போது புலி வால்கல் எல்லாம் என்ன புல்லா பிடிங்கினீங்க? அசின் இல்லை,நீங்க தான்டா ஈழத்தமிழனுக்கு அழிவு காரர்.

  1. கற்களில் எழுதவேண்டிய் உண்மை. துரை

 9. This is first time I am writing to your website but I read your articles often earlier

  I thought of writing because I was talking to my mother in Jaffna this morning and she told me how she had seen and spoke to actress Asin in jaffna. Then I read your article now and thought I must write to you

  From what my mother said all what you wrote is so true. My mother went with her sister my aunt for eye surgery for my aunt

  The Indian doctors helped by jaffna hospital medical staff was very nice and helpful. My aunt has children abroad and is well -off. So she did not take the free lens given . But a lot of other people did and they are all very greatful to Asin
  My aunt too is very greatfu to Indian doctors for eye surgery and Asin for arrangements

  My mother is a fan of Asin and she was thrilled to see her personally and speak to her

  When my mother spoke in English and told how much she likes her pictures and how much she misses her now in Tamil films Asin smiled and thanked her and told her she is acting in new picture with Vijay named kavalkaran

  She told “ungalai ellam santhithathil enakku romba mahilchi” in Tamil to a lot of others

  Lots of people who got eye surgery took Asins hand touched their eyes telling “Kan kudutha kadavulamma neengal” in Tamil

  One woman fell down on the ground at Asins foot and worshipped her. But Asin was upset and pulled her up with own hands and scolded her tellling “Neenga enakku Amma maadhiri. Ippadi seyyalama? Unga ponnu kaaliley neenga vilalama?

  According to my mother Asin won the hearts of all the people in Jaffna who saw her

 10. அசின் ஒரு பிசின்[ கோந்து] யாருடனும் ஒட்டிக்கொள்ளும்,உறவாடும்!!! அந்த அசினுக்கு தேவை பசைதான் [ பணம்] கிடக்கட்டும் , விடுங்கள்!! நமக்கு எவ்வளவோ வேலை இருக்கு,அதைப் பார்ப்போம்1!! ஆடத்தெரியாத அசினுக்கு தெரு கோணலாம்!!

  1. தமிழீழப் போராட்டம் நடத்திய புலத்துப் புலிகள்ற்கெல்லாம் தேவைப்பட்டத்தும்
   பண்ம்தான்.. அதற்காக அவர்கள் தமிழரின் அழிவினை பயன்படுத்திபனார்கள்.
   துரை

 11. அன்பு அக்கா அசினுக்கு , நீங்கள் துணிந்த பெண்ணாக எங்கள் தவித்துநிட்கும் உறவுகளை போய் பார்த்தது 300 கண்பார்வை குறித்த வைத்திய சேவை மட்டுமலாமல் நூற்றுக்கு மேற்பட்ட அபலை பெண்களை தத்தெடுத்து உண்மையான மனித நேயத்துடன் நடந்ததுக்கு நன்றிகள் தாயே . உங்கள் புடவை எப்போது விலகும் ..இடுப்பு மடிப்பில் எத்தனை கோடு என்று  அலைபவர்களின் காசு கணக்குக்கு மனதை  தளரவிடாதீர்கள். ஒரு பெண்ணாக  பெருமை படுகிறேன்

  1. வீரா, ஊர்மிளா,
   அசின் தனது சொந்தச் செலவில் வந்து கண் வைத்தியம் செய்வித்துக் கொடுத்தாரா? இலங்கையிலேயே தங்கியிருந்து துன்பப் பட்டோருக்கு ஆறுதல் வழங்குவதில் தன் வாழ்நாளைச் செலவிடப் போகிறாரா?
   இந்த நடிப்புலகம் பணத்துக்காக என்னவும் செய்யும். தமிழகத்தில் இழந்ததை ஈடு செய்ய வழி தெரியாத சிறுமியல்ல அசின்.
   அதற்காகத் தமிழ் சினிமா உலகின் வீராவேச (வேஷ?) நாடகங்கட்கு நாம் எடுபட வேண்டியதில்லை.

 12. All the Eelam tamils travel from abrod on holy day to Sri Lanka, Sri lanka airlines is fully booked, these people who cant boycott Sri lanka themsleves expect non tamil Ashin to boy cott Sri Lanka, this is called shame on you, Jaffn atamils

  1. solid shot buddy. தாங்கள் மட்டும் சுகமா இருந்து கொண்டு …நட்சத்திர விழா கொம்ன்டாடி..பர்த்டே பற்றி வைத்து…விடுமுறை போய்.இலாத பெருமை காட்டி .வீரம் பேசுவதில் மகா வீரர்கள்…மிஞ்சி இருக்கும் சுயநல புலி வால்கள்…

 13. கரம்மசாலா , ரத்தம் காணாட்டி பொழுது உங்களுக்கு போகாது..இந்த சனம் எனதான் அப்பிடி உங்களுக்கு பாவன் செய்ததுகளோ ..?

  1. ஊர்மிளா
   நல்லா கோவபடுறீங்க போங்க

  2. உங்களுக்கு ரண்டு கொலைகாறப் பக்கத்திலை ஒண்டாத்தான் மனிசர் தெரிஞ்சா அதுக்கு ஆர் என்ன செய்யேலும்? உங்களுக்கு மாறாக் கதைக்கிறவையை எல்லாம் உங்களுக்கு ஒரு நிறமாத்தான் தெரியுமெண்டா, அசினிட்டைப் போய்க் கண் வைத்தியம் அல்லது வேறை வைத்தியம் பாருங்கோ.
   உஙகை உப்ப வந்த்து சனத்துக்கு இரங்குகிறவை தான் கொத்துக் கொத்தாக் கொலை பண்ணினவை. இப்ப வந்து பரிவு காட்டுகினை.
   இந்தச் சினிமாக்காரரின்டை கூத்துக்கு நீங்கள் எடுபடுகிறியள் எண்டா மற்றவையும் எடுபடமாட்டினை பாருங்கோ.

 14. உலக்ம் முழுவதும் இலங்கைத் தமிழர் பிரச்சினையால் அகதிகளாகியவர்களே பல இலங்கைத்தமிழர்கள்.. 25 வருடங்களில் இவர்கள் தான் இந்திய சினிமாவினை வளர்ப்பவ்ர்கள் போன்றே இவர்களில் சிலர் கருதுகின்றார்கள்.

  காரண்ம் காலம் காலமாக் இந்தியத்தமிழரை மதிக்காமல் நடந்த குணமே இதுவாகும்.

  உலக்த்தமிழர் என்றால் இந்த அக்திகள் வாழ்வை ஆரம்பித்த இலங்கத்தமிழர் என்பதே இவர்களின் கருத்து.

  தமிழ்மொழிக்கும் இனத்திற்கும் இவர்கள் தான் அதிகார பூர்வமான் பிரதிநிதிகள்.
  என்பதேயாகும். தமிழகத்தமிழர்
  தொப்புள் கொடி,இந்தியா விரோதி. ஒரு குடும்பத்தில் குழப்பத்தை விழைவித்து
  கூத்துப் பார்க்கும் குண்மே இதுவாகும். இவர்கள் வாழும் புலம் பெயர்நாடுகளை
  இவர்களில் பலர் மதிப்பத்தில்லை. இவர்க்ளின் தனிப்ப்ட்ட சமூக பழக்க வழக்கங்களோ அருவருக்கத்தக்கன. நாக்ரீகம் வளர்ந்த் நாடுகளில் வாழ்ந்தாலும
  இவர்கள் இன்னமும் பல ஆண்டுகளிற்கு முன்பு வாழ்ந்த ஆதி வாசிகளின் குண்மேயூள்ளது. அறிவுள்ளவ்ர்கள் பெரும் பிரச்சினைகளையும் சிறிதாக்கிவிடுவார்கள். இவர்களோ சிறு பிரச்சினைகளையும் பெரிதாக்கி
  அழிவினில் வேடிக்கை பார்ப்பது மட்டுமல்லாமல் வியாபாரமாக்குவார்கள்.
  இவர்களை விட அசின் பல மடங்கு மேல். துரை

  1. துரை
   நல்லா காசு தாறாங்கள் போல இருக்கு
   எல்லா அகதி தமிழன்ற சிந்தைக்குளேயும்
   புகுந்து வந்தனி போல் பேசுகிறீர்

   1. துரோகிகள்,ஒட்டுப்படைகள்,கூலிப்படைகள்,அரசாங்கத்திடம் பணம் வாங்குகின்றவ்ர்கள் என்பதே கருத்துக்களை, கருத்தால் வெல்ல முடியாதவ்ர்களிற்கும், கேட்கும் கேள்விகளிற்கு பதில் சொல்லமுடியதவ்ர்களின் வாயில் வரும் வார்த்தைகள்.

    புலியின் பெயரை வைத்து தமிழரை பயப்படுத்தியவ்ர்களே இவர்கள். இதன் மூலம் தமிழரின் கருத்துக்கள் பரிமாறும் உருமைகளை பறித்தவ்ர்கள் புலிகளே சிங்களவர்கள் அல்ல.

    இன்று தமிழரை ஏமாற்ரிய பண்த்தில் இலங்கையில் கூட முத்லீட்டாளர்களாகவும், இலங்கை அரசின் செல்லப்பிள்ளைக்ளாகவும் மாறிவருவோரும் புலிகள்தான்.

    கருத்துக்க்க்ளை முன்வைப்போரல்ல. புரியுதா? இன்னும் புரியவில்லயா? துரை

    1. மதிவதனியும் துவாராகாவும் புலிப்படையிலா இருந்தார்கள்?கைது செய்யப்பட்டுள்ளோர் எல்லோருமே புலிகளாக இருப்பார்கள் என நம்புகிறீர்களா?அவர்களீல் அனேகர் அப்பாவிகளாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா?பாலஸ்தீனர்கள், ருவாண்டா என்றால் மனிதர் எனப் புலம்பும் நாம் தமிழரை மட்டும் மாற்றாராய்ப் பார்ப்பது ஏன்?சொல்லுங்கள் துரை.

     1. தமிழரை நாம் தமிழரென்னும்
      விசத்தையூட்டி சுயநலம் காணும்
      தமிழின்மே புலியினம்.

      இதில்
      அவல்ப்படுவ்தும், இன்னல்களை
      அனுபவிப்பதும் சாதாரண் மனிதர்கள். முதலில் புலிகளின்
      சுய நல வலையில் விழுந்துள்ளவர்களை மீட்டெடுக்க வேண்டும். அத்ன் பின்னரே சிங்கள ஆதிக்கத்தின் பிடியில் இருந்து தமிழர் தப்ப முடியும்.

      தமிழரால் துரோகிகளாகக் காணப்படுவோரெல்லாம் துரோகிகழுமல்ல, புலிக்ளென்று வாழ்வோரெல்லாம் தமிழினதின் விசுவாசிக்ழுமல்ல.துரை

    2. தமிழ்மாறனிற்கு, ஈழ்த்தமிழினத்திற்கு எதிரிக்ள் ந்மக்குள்ளேயேயுள்ளனர். நம்மினத்துடன் இரண்டறக் கலந்துவிட்டன்ர். அது ஒரு தீய சக்தியாக பல்ம்பெற்றுள்ளது. தமிழனை தமிழ்னாக் மதிக்காமல் வாழும் வாழ்க்கை.

     சிங்கள்வ்ரை எதிரியாக் பார்க்கும் அதே கண்கள்
     கூடப் பிறந்த த்மிழனையும் அதே கண்களால் பார்க்கின்றது. தமிழரின் அடிமைத்தனத்திற்கும்,
     அழிவுகளிற்கும் இதுவே காரண்ம்.துரை

   2. புலியாதரவாளரின் பேச்சுக்களே இவ்வளவு கொடூரமாக இருக்கிறதே,புலிகளும் இப்படித்தான் இருந்தார்களோ,கருத்துச்சொன்னால் வேருட்டியல்லவா எழுதுகிறார்கள்.அப்புறம் எந்த அடக்குமுறைக்கு எதிராக போராடினார்கள்??அசின் ஒரு நடிகை(கூத்தாடி),அவரை பிரபலமாக்க இவர்கள் யாரிடம் வாங்கினார்கள்??

  2. துரை
   இங்கே பிரச்சனைக்குரிய விடயம் இந்திய நிறுவனத்தின் புதிய சுற்று மாற்று வேலை. அதை முதலில் விளங்கிக் கொள்வோம்.
   எல்லா விஷயத்துக்கும் புலிக்கு அரிச்சனை பண்ணிப் பிரயோசனமில்லை.

   1. புலம் பெயர்நாடுகலில் புலிகள் தமிழ் மக்களிடம் காட்டிய
    சுற்று
    மாற்று வேலைகளே இன்று ஈழ்த்தமிழரை இந்த்நிலைமைக்கு
    கொண்டு வந்துள்ளது. இத்ன் காரணமாக்வே இன்று ஈழ்த்தமிழர்
    இந்திய அரசினதும் , இலங்கை அரசினதும் உதை பந்தாக்வுள்ளனர்.

    இன்னமும் இத்ற்குக் காரண்மாக் இருந்தோரே தாம் தான்
    தமிழரிற்கு முன்னோடிகளெனெ புலம் பெயர் சமூகத்தினரிடம் கூறி வருகின்றனர். இவர்கள் உள்ள்வரை தமிழினத்திற்கு வழிகாட்ட, யாரையும் விட் மாட்டார்கள். தமிழரின் விடுதலை அமைப்பும்
    ஓர் தனிப்பட்டவர்களின் நிதி ந்திறுவனமாக் மாறிவிட்டது.

    புலியின் வேசம் போட்ட தமிழினத்தின் துரோகிகள்.

    இவர்களிடமே அதிகாரமும், பொருளாதரமும் சிக்கியுள்ளது.
    இவர்களிடமிருந்தே தமிழர் முதலில் விடுவிக்கப்பட வேண்டும்.
    இலங்கை அரசுடன் சேர்ந்துள்ளோரும், அங்கு செல்லும் முத்லீட்டாளர்க்ழுமே இத்ற்கு ஆதாரம். துரை

   2. இன்றைய அவலத்தின் நேரடி வேர்களே இந்திய மேலாதிக்க நோக்கங்கள் தாம்.
    தனியே புலிகளைப் பிரித்தெடுத்துப் பார்த்துப் பயனில்லை. இந்திய வழிகாட்டலின் கீழ், ஈ.பி.ஆர்.எல்.எவ். (1987-89) நடந்து கொண்ட விதமும் இந்தியத் தூண்டுதலின் மூலம் வளர்க்கப் பட்ட இயக்கங்களும் இயக்க மோதல்களும் (1983-1987) எண்ணற்ற அழிவுகளும் பற்றி விளங்கினால், அது விளங்கக் கூடும்.
    அதை விடப், புலிகளின் தவறுகளின் சில வேர்கள் தமிழரசுக் கட்சியில் இருந்தன.

    நீங்கள் இந்தியாவின் வஞ்சகத்தைப் பற்றிப் பேச விரும்பவில்லை என்றால் அது வேறு விடயம்.,

    1. இந்தியாவின் வஞ்சகம் என்பதை விட ஆரியரின்
     வஞ்சகம்
     என்பதே பொருந்தும். தற்போது இமயமுதல் ,கன்னியாகுமரிவரை எல்லா இனத்தவர்க்ழும் இந்தியர்களேயாகும்.

     வடந்தியர்களின் ஆதிக்கததை நிலை நாட்ட முடியாத நிலமாக் இலங்கையில் தமிழர்களின்
     பிரதேசம் ஆகிவிடுமென்ற் அச்சம் இந்தியாவிற்கு
     ஏற்பட்டதில் தவ்றில்லை. ஆனால் ஆரியர்களால் தமிழர்களிர்குள் கொண்டுவரப்பட்ட சமூக பிரிவுகளே
     இந்தியர்வின் வஞ்சகத்தை விட பாதிப்பை
     ஏற்படுத்தியுள்ளது. அதுவே இன்றும் தமிழரை ஓர் இனமா வாழவிடாமல் உலகெங்கும் பல சமூகப் பிரிவுகளாகவும் பகையுடனும் வாழும் பரிதாபமான் நிலைமை. துரை

    2. இன்றைய அவலத்தின் நேரடி வேர்களே புலிகள் தான். உலக அறிவு இல்லாமல் கொலையால் உலகை பயத்தில் வைத்துக்கொண்டு  காலம் தள்ளலாம் என்று நினைத்தது தவளை புத்தி.

    3. இந்திய மேலாதிக்கம் பற்றிப் பேச விரும்பாவிட்டால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் அதன் கொடுமைகள் ஓயப் போவதில்லை.

     1. தமிழரிடம் உள்ள சாதிக் கொடுமைகழும், பாகுபாடுகழும்
      இலங்கைத் தமிழர்களால் உலகமுழுவதும் விதைக்கப்பட்டு
      மனித இனத்திற்கே கேடு விளைவிக்கின்றது. இதனை விட இந்திய மேலாதிக்கம் என்ன செய்தது. துரை

     2. இந்திய மேலாதிக்கம் என்ன செய்கிறது என்று தெரியாமலிருக்க ஒருவர் உலக அரசியல் அக்கறை அற்றவராக இருக்க வேன்டும் அல்லது உன்மைகளை காண விரும்பாதவராக இருக்க வேன்டும்.
      இந்திய நோக்கங்களை பற்றி நீங்கள் பேச விரும்பாவிட்டால் நான் பேச்சை வளர்ப்பானேன்.

     3. ஈழத்தமிழர்கள் இன்று உலகத்திலும்,இலங்கையிலும் அகதிகள். சாதாரண மனித
      உருமைகளோடு வாழ்வதுதான்
      அவ்ர்களின் இன்றைய நிலமை.

      இந்த குறைந்த் பட்டச வாழ்விற்கே வழியும் வழி காடடவும் ஆழிலில்லை. அத்ற்குள்
      இந்தியாவில், குறைசொல்லவும்
      குறைகாணவும் எனன தகுதியுண்டு. இதன் அறியாமல்

      நடந்ததால்தான் முள்ளிவாய்காலை அப்பாவித் தமிழர்களிற்கு சுடுகாடாக்கினார்கள்.. துரை

 15. ஈழக் குட்டையில் எப்படி மீன் பிடிப்பது என்பதை நீங்கள் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறீர்கள்.
  தமிழகத்தில் இழந்ததை ஈடு செய்ய வழி தெரியாத சிறுமியல்ல அசின்.
  very correct assessments.

  Although we know that what Asin is doing is wrong and it helps only the Rajabakse &co to legitimize the genocidal war crime and his authoritarian semi fascist Government… it is very difficult to condemn her act.
  every small thing what they gives us somehow helps someone….what to do…Asin is not a humanitarian workers but she is siding with the dictator…and she knows the art how to sell that as her act of helping the poor…. Rajabakse&co is very good on diplomatic warfare too…he denied and continued to deny permissions for many Tamil and Sinhalese MPs to visit the camps but their peoples are taken there as a propaganda tools…. Anybody can do anything with eelam Tamils. that is the post modern movements of post war era..
  this is what our so- called leader prapa & co have left us as their present..

 16. ஐயா மாணிக்கம் தமிழ் நாட்டிலிருந்தும் தமிழ் அரசியல்வாதிகளை உங்களுக்கு புரிந்ததாக தெரியவில்லை,நடிகருக்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீங்க,அவங்க வந்தது தெரியாது,உங்களாக்களே அதை பிரபலப்படுத்தி தங்களுக்கு சாதகமாக்கி அசினை அழிக்க முயல அசினோ பிசினாகி அதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டார்,படம் நடிக்க சென்றவரை உசிப்பி அரசியலாக்கி விட்டு அவரை பிழை சொல்ல குற்றவாளியான உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது?சீமான் நீண்டகால அடிப்படையில் திட்டமிட்டு போராட்டம்,சிறை செல்கின்றார் என்பதை போலீசாருடன் எடுத்த படமே கூறியது.நடிகரை நடிகராக மட்டும் பாருங்கள்,அவர்கள் உழைத்தாலே பணம்,அரசியல்வாதிகள் சிறைபோனாலும் கட்சி பணம் திரட்டும்.

 17. நீங்கள் சொல்வது சரி: தமிழ்நாட்டு அரசியலே ஒரு பெரிய கூத்துத் தொடர்.
  இதில் அசின் ஒரு சின்ன நடிகையாக இருக்கலாம். ஆனால் ராஜபக்ச ஆட்சிக்கு முண்டு கொடுக்கிற துணை நடிகையாக இருப்பதால், அது எதிர்ப்புணர்வைத் தூண்டுகிறது.

  மற்றப்படி, இலங்கைத் தமிழரின் நிலையைப் பொறுத்த வரை, கருணாநிதிக்கும் சீமானுக்கும் ஒட்டு மொத்தத்தில் வேறுபாடு இராது.
  டில்லியைத் தடுத்து நிறுத்த இந்நாள் சினிமாக் கூத்தாடிகளாலும் ஆகாது, முன்னாள் சினிமாக் கூத்தாடிகளாலும் ஆகாது.
  மக்கள் வேறு வழிகளில் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

 18. அசினுடைய சினிமா வாழ்க்கையை உயர்த்தியது, அவரை இந்திப் பட உலகில் அறிமுகப்படுத்தியது எல்லாம் தமிழ்தான், தமிழன் தான், தமிழினம் தான். தமிழினத்தின் தலைவன் என்று சொல்லிக் ‘கொல்லும்’ நபரின் லட்சணமே சந்தி சிரிக்கும் போது அவருக்கு கூஜா தூக்கி வாழும் தமிழ்த் திரைப்பட உலகினர் என்ன கிழித்துவிடப் போகிறார்கள். ஏர்டெல், அம்பானி, மன்மோகன், சோனியா, கருணா, திருமா, ராமதாஸ் என்று துரோகங்களின் வரிசை நீண்டுவிட்டது. இதில் கடைசியில் அசின் வந்து நிற்கிறார். அதிலும் இவர் செய்யும் அரசியல் கூட இங்கிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு செய்ய தைரியம் இல்லை என நினைக்கும் போது வருத்தமாயுள்ளது. இதை வாசி்க்கும் மானமுள்ள தமிழர்களே அசின் நடிக்கும் படங்களைப் பார்க்காதீர்கள். பார்க்கும் நண்பர்களிடமெல்லாம் அவரது தமிழ்த்துரோகச் செயலை சொல்லுங்கள். அவர் போஸ்டரைப் பார்த்து காறித் துப்புங்கள். அதுதான் அதிகாரம், பணபலம், அரசியல் துணை இல்லாத உங்களாலும் என்னாலும் இப்போது செய்யமுடிந்தது.

 19. தமிழ் மக்களின் அழிவிற்கு புலம்பெயர் தமிழரின் செயற்பாடே காரணம். எரிக் சொல்கைம்
  17 யூலை 2010 23:42:22

  இலங்கை யுத்தத்தம் மற்றும் சமாதான பேச்சுக்களின்போது மிகவும் பிரபல்யாமாக பேசப்பட்டவரும் இலங்கை அரசு – புலிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளின் போது பிரதான மத்தியஸ்தராகவும் செயற்பட்டுவந்த நோர்வே அமைச்சர் எரிக் சொல்கைம் அவர்கள் இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு அதிக அவலங்களை ஏற்படுத்துவதன் மூலம் தாம் நேசித்த தலைமையை பாதுகாத்துக்கொள்ள முடியுமென நம்பி புலம்பெயர் தமிழர்கள் அம்மக்களின் அழிவுகளில் பங்ககெடுத்துக்கொண்டுள்ளார்கள் என்ற பொருள்பட கடந்தவாரம் சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

  அவர் மேலும் கூறுகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்து இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என தெரிவித்துள்ளார். அத்துடன் எல்ரிரிஈ இறுதிநேரத்தில் சரணடையும் முடிவை எடுத்தபோது அது மிகவும் காலம் தாழ்த்திய முடிவாகி இருந்தது என்று கவலை தெரிவிக்கின்றார்.

  எல்ரிரிஈ சரணடைவதன் மூலமே மனித அவலத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் எனவும் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் எனவும் கோரிக்கை உலகின் பல பாகங்களிலுமிருந்து முன்வைக்கப்பட்டிருந்தது. 2009 பெப்ரவரி அளவில் 2000க்கு உட்பட்டவர்களே கொல்லப்பட்டனர். ஆனால் அதற்குப் பின்னைய நாட்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு எல்ரிரிஈ இன் தலைமை கொல்லப்படுகின்ற இறுதி நேரத்திலேயே அவர்கள் சரணடைய முன்வந்திருந்தனர்.

  எரிக் சொல்ஹைம் தனது நேர்காணலில் ‘நாங்கள் எல்ரிரிஈ யை ஒழுங்குமுறையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி (சரணடையும்படி) கேட்டிருந்தோம். அப்படி நடந்திருந்தால் ஆயிரக்கணக்காண உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். இந்த யுத்தம் ஐக்கிய நாடுகள் சபை இந்தியா அமெரிக்கா மற்றும் சிலரின் கண்காணிப்புடன் நடைபெற்று இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

  தான் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருந்ததாகவும் ஐநா பிரதிநிதிகள் வே பிரபாகரனுடக் தொடர்பில் இருந்ததாகவும் அனால் இரு தரப்பும் வேறு வேறு காரணங்களுக்காக யுத்தத்தை தொடர்ந்தனர் என்றும் எரிக் சோல்ஹைம் குறிப்பிட்டுள்ளார்.

  அவர் மேலும் குறிப்பிடுகையில் மே 17 2009ல் புலிகளுடைய தலைவர்கள் பா நடேசன் எஸ் புலித்தேவன் ஆகியோரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அவர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தன்னிடம் கேட்டதாகவும் தெரிவித்தார். எல்ரிரிஈ சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஐசிஆர்சி ஐநா ஆகிய அமைப்புகளையும் கேட்டிருந்ததாகவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்தார்.

  ‘(எல்ரிரிஈ இன் வேண்டுகோளை) நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினோம். எல்ரிரிக்கு அவர்களுடைய (சரணடையும்) கோரிக்கை மிகத் தாமதமாக வந்ததைத் தெரியப்படுத்தினேன். அவர்கள் சரணடைவதாக இருந்தால் வெள்ளைக்கொடியைத் தூக்கிக் கொண்டு சென்று சரணடையும்படி கூறினேன். ஆனால் சிறிது நேரத்தின் பின் அவர்கள் இறந்துவிட்ட செய்தியைக் கேள்விப்பட்டேன்’ என எரிக் சொல்ஹைம் எல்ரிரிஈ, க்கும் தனக்குமான கடைசி உரையாடல்கள் பற்றிக் குறிப்பிட்டார்.
  மேலும் இந்த சரணடையும் பேச்சுவார்த்தையில் வேறு சிலரும் தொடர்புபட்டு இருந்ததாகவும் கூறியுள்ள சொல்ஹைம் அவர்களின் பெயரையும் வெளியிட மறுத்துள்ளார்.

  ‘யுத்தத்தை மீள ஆரம்பிப்பதற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்காது. யுத்தத்தில் விருப்பம் இல்லை என்பதை புலம்பெயர் தமிழர்களுக்கு சொல்கிறேன். ஆனால் தமிழர்களின் உரிமைக்கு சர்வதேச சமூகத்திடம் பாரிய ஆதரவு உண்டு’ எனவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்தார். இலங்கை ஊடகங்கள் தன்மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

  ‘இந்தியா இந்தோனேசியா மலேசியா நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளை இலங்கையும் வழங்க முன்வர வேண்டும்’ என்றவகையிலும் எரிக் சொல்ஹைம் கருத்து வெளியிட்டு இருந்தார். ‘தென்னிந்திய மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்குப் பல உரிமைகள் உள்ளது. அரசியல் உரிமைகளுக்குப் பலமான ஆதரவு உள்ளது. ஆனால் யுத்தத்தை மீள ஆரம்பிக்க ஆதரவு இல்லை. இதுவே நோர்வேயின் நிலைப்பாடு. இதுவே உலகில் உள்ள பெரும்பாலான அரசுகளின் நிலைப்பாடும்’ எனவும் சொல்ஹைம் தெரிவித்தார்.

  தற்போது ஜநா வினால் உருவாக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவையும் வரவேற்று எரிக் சொல்ஹைம் கருத்து வெளியிட்டார்.

  இலங்கைத் தமிழர்களின் வரலாறு காணாத இந்த அழிவையும் அவலத்தையும் நிறுத்தியிருக்கக் கூடிய மட்டுப்படுத்தி இருக்கக் கூடிய வாய்ப்புகள் தமிழ் அரசியல் தலைமைகளிடமும் புலம்பெயர்ந்த தமிழ் தலைமைகளிடமும் இருந்தது. ஆனால் இவர்கள் தமிழ் மக்களின் அவலத்தை இன்னமும் தூண்டி விடுவதன் மூலம் சர்வதேச கவனத்தை திருப்பலாம் என்று வன்னி மக்கள் கொல்லப்படுவதற்கு துணை போயினர்.

  இப்போது எந்த அரசாங்கத்திற்கு எதிராக இத்தலைமைகள் கடந்த 30 வருடமாக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அந்த அரசாங்கம் மனித உரிமைகளை மீறிவிட்டதாக கோசமிடுகின்றனர். ஆனால் அம்மக்களுக்கு வலிந்து தம் தலைமையைத் திணித்து இந்த அழிவை ஏற்படுத்தியதில் தமக்குள்ள பங்கு பற்றி மௌனமாகவே உள்ளனர்.

  கடந்த 30 ஆண்டுகாலம் (சுதந்திரம் அடைந்தது முதல்) எதிரியாக கருதப்பட்ட வந்த அரசிடம் நியாயம் கேட்கும் தமிழ் தலைமைகள் தங்கள் தலைமைத்துவத்தின் வக்கற்ற அரசியலை தொடர்ந்தும் செய்வதற்காக தங்கள் தலைமையை தொடர்ந்தும் தக்க வைக்க இலங்கை அரசு மீது முழுப்பழியையும் போட்டுவிட்டு தாங்கள் தப்பிக்க இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்குப் பின் தாங்கள் பதுங்கிக் கொள்கின்றனர்.

  வெள்ளம் வருமுன் அணைகட்டப்பட வேண்டும். மனித உரிமைகள் மீறப்படமுன் அதனை தடுப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் அர்த்தமற்றது.

  1. எரிக் ஸொல்ஹைம் சொல்வதில் ஒரு முக்கிய உண்மை உண்டு. அதை அவர் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்.
   மேற்கு நாடுகளைப் புலம் பெயர் தமிழர் நம்பியதும் புலிகளை நம்பச் செய்த்ததும் அழிவிற்கு ஒரு மிக முக்கிய காரணம்.
   இதில் எரிக் ஸொல்ஹைமின் பங்கென்ன?

 20. இந்தியா ஏமாத்திட்டு,இலங்கை ஏமாத்திட்டு,உலகநாடுகள் ஏமாத்திட்டு,தமிழ் நாடு,கருணாநிதி,திருமாவளவன்,வைகோ,நெடுமாறன் சீமான் ஏமாத்திட்டாங்க,மாற்று இயக்கங்கள் ஏமாத்திட்டு,மாத்தையா ஏமாத்திட்டார்,கருணா ஏமாத்திட்டார்,கே பி ஏமாத்திட்டார்,காஸ்ரோ,இளந்திரையன் ஏமாத்திட்டினம்,கடவுள் ஏமாத்திட்டார்,ஏன்??எல்லோரும் துரோகிகளாக ஒருவர் மட்டும் எல்லா தலைவர்களையும் புத்திஜீவிகளையும் கொன்றுவிட்டு தியாகியானாரே அவரை கடவுளும் அவரது சாணக்கியமும் கைவிட்டது மட்டுமல்லாமல் அவரது சகாக்களும்(மெய்ப்பாதுகாப்பாளர் ஒருவர் இன்னும் உயிரோடு இருக்கிறாராமே)கைவிட்டது எப்படி??அப்படியானால் எல்லா தமிழனும் துரோகிகளா??பாவம் தமிழன் தலைமை விசுவாசிகளால் மிகவும் ஏமாற்றப்படுகின்றான். இவ்வளவு பேரிடமும் ஏமாந்தும் இப்பொழுதும் வாய் வீரம் பேசி எல்லாவற்றையும் நாசப்படுத்தும் உங்களுக்கு யாரால் உதவமுடியும்.அசினின் போஸ்டருக்கு துப்பும் எச்சில் உங்கள் முகத்தில் பிடிப்பது இன்னுமா விளங்கவில்லை???

  1. வாவ் .. இதனை அப்படியே போஸ்டர் அடித்து விளினாட்டு புளிவால்களின் வீடு முற்றத்தில் போஸ்டர் ஓட்டவேண்டும்.

 21. அசின் பிசினாகி, பிசின் “மெசின் கன்” ஆகிக்கொண்டிருக்கிறதே!!!! எல்லாம் முடிந்து, செத்த குழந்தையை குழிக்குள் இறக்கியாச்சு ,எப்படி செத்தது என்று இனி ஜோஸ்யம் பார்த்து பயனில்லை!! ஆம்! “”குழிப்பிள்ளைக்கு ஜோஸியம் தேவை இல்லை””. இனி ஈழத்தமிழர்களின் வருங்கால வாழ்வு பற்றித்தான் யாவரும் யோசிக்கவும்,பேசவும்,செயல்படவும் வேண்டும் !நாம் அதற்கு முயல்வோம் .

Comments are closed.