அனைத்து மக்களுக்குமான புதிய-ஜனநாயக கட்சியின் சுயேட்சைக் குழு 06ன் அறைகூவல்!

  

  அன்பார்ந்த தமிழ் மக்களே!

• தமிழ்த் தேசியம் என்னும் போர்வையில் பிற்போக்கான கொள்கைகளை முன்னெடுத்து தமிழ் மக்களை அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் உள்ளாக்கிய அனைத்து தமிழ்த் தலைமைகளையும் நிராகரியுங்கள்.

• இவ்வளவு சோக நிகழ்வுகள் நடந்தேறிய பின்பும் தமது பழைய கொள்கைகளையும் நடைமுறைகளையும் கைவிடாது மீண்டும் பாராளுமன்றப் பதவிகளுக்காக தங்களுக்குள் நான்கு துண்டுகளாகப் பிரிந்து நின்று ஆதிக்க அரசியலின் கீழ் கொள்கையற்ற ஜக்கியத்தை மக்களிடம் கோரி நிற்கும் போலித்தனத்தை நிராகரியுங்கள்.

• 30 வருட யுத்தத்தை முன்னெடுத்த இரண்டு பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கக் கட்சிகளையும் அவற்றின் கீழ் வாக்குகள் கேட்டு நிற்போரையும் நிராகரியுங்கள்

• உழைக்கும் மக்கள் அனைவரும் ஜக்கியப்பட்டு வெகுஐனப் போராட்டப் பாதையில் பயணிக்க மக்;களுக்கான மாற்று அரசியலை முன்னெடுத்து வழி நடக்க முன்வாருங்கள்.

• ஐக்கியப்பட்ட இலங்கையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தமிழ் முஸ்லீம் மக்களின் பாரம்பரிய வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுயாட்சியை வென்றெடுக்க அனைத்து மக்களும் அணிதிரண்டு நிற்போம்.

• தொழிலாளர்கள் ,  விவசாயிகள், மீனவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள், அரசாங்க தனியார்துறை ஊழியர்கள், ஆசிரியர், மாணவர்கள், மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரும் மக்களுக்கான மாற்று அரசியலை முன்னெடுக்க முன்வாருங்கள்.

• தமிழர் சமுகத்தில் ஊறிப்போன பழைமைவாத சாதிய-சமூக ஏற்றத்தாழ்வுகளை நிராகரித்து உழைக்கும் வர்க்க சக்திகளை ஒன்றிணைத்து முன் செல்வோம்.

• உழைப்பாலும் பழைமைவாதப் பண்பாட்டு நடைமுறைகளாலும் இரண்டாம் தரமாக நடாத்தப்பட்டு வரும் பெண்கள் தம்மைப் பிணைத்திருக்கும் பெண்ணடிமை விலங்கறுக்க மாற்று அரசியல் பாதையில் வழி நடக்க முன்வாருங்கள்.

• பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி ஆசிரியர்களே! மாணவர்களே! பழைமைவாத தமிழ்த் தேசியம் என்ற பிற்போக்கு மூடு திரையை கிழித்தெறிந்து விட்டு மாற்று அரசியல் பாதையில் முன்னேறி உலகில் நடைபெறும் முற்போக்கான புரட்சிகரப் போராட்டங்களுடன் ஒன்றினைய முன்வாருங்கள்.

 நமது கட்சியின் உடனடிக் கோரிக்கைகள்.

• யுத்தத்தால் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வைக்கப்பட்டுள்ள மீதியான மக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டு;ம். தமது பாரம்பரிய வாழ்விடங்களில் தாமதியாது மீளக்குடியமர அனுமதிக்கப்பட வேண்டும்.

• புனர்வாழ்வு, புனரமைப்பு, போதிய நஷ்டஈடு இழுத்தடிக்காது வழங்கப்பட வேண்டு;ம்.

• உயர்பாதுகாப்பு பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட மக்கள் தமது வீடுகளுக்கும் விவசாய நிலங்கள் மற்றும் தொழில் ஆதாரங்களுக்கும் மீளச் செல்ல அனுமதிக்கப்படல் வேண்டும்.

• வடக்கு கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் வளங்களைச் சூறையாடிச் செல்ல முன்நிற்கும் அந்நிய மூலதன ஊடுருவல்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

• சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் விசாரனையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

• வாழ்க்கைச் செலவு உயர்வைத் தடுத்து உரிய சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.

• நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் அன்றாட வாழ்வையும் நாசமாக்கி வரும் தாராளமயம் தனியார்மயம் உலகமயமாதலின் நச்சத்தன விளைவுகளையும் அபாயங்களையும் அம்பலப்படுத்தி எதிர்த்து நிற்க வேண்டும்.

• இன மத மொழிப் பகை மூட்டி கொடிய யுத்தத்திற்குப் பின்புலமாக நின்று பேரினவாதத்தையும் குறுந்தேசிய இன வாதத்தையும் தூண்டி மோதவைத்து தமது நலன்களை முன்னெடுத்து வந்த இந்திய, அமெரிக்க மேற்குலக மேலாதிக்க சக்திகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி எதிர்த்து நிற்க வேண்டும்.

• இந்திய பிராந்திய மேலாதிக்கத்தையும் அமெரிக்க ஏகாதிபத்திய உலக மேலாதிக்கத்தையும் கால் பிடித்து நிற்கும் சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக ஆதிக்க அரசியல் தலைமைகளை அனைத்து மக்களும் ஓரணி சேர்ந்து எதிர்த்து நிற்க வேண்டு;ம். குறிப்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் அடிமை விசுவாசம் தெரிவிக்கும் தமிழ்த் தலைமைகளை எதிர்த்து இந்திய மக்களோடும் உலக மக்களோடும் முற்போக்கான திசையில் அணி திரள வேண்டும்.

இவற்றை அங்கீகரித்து மக்களுக்கான மாற்று அரசியலை முன்னெடுத்துப் பலம் சேர்க்க புதிய ஜனநாயக கட்சியின் சுயேட்சைக்குழு 6ன் கேத்தல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

3 thoughts on “அனைத்து மக்களுக்குமான புதிய-ஜனநாயக கட்சியின் சுயேட்சைக் குழு 06ன் அறைகூவல்!”

  1. சுயநிர்ணயம் என்பதே பிரிந்துபோவது தான் அதில் என்ன ஐக்கியம் வேண்டிக்கிடக்கிறது? நீங்கள் யாருக்கோ பயப்படுவது தெரிகிறது.

    1. தயவு செய்து யாருக்கு என்று தான் சொல்லுங்களேன்!

  2. சுயநிர்ணய உரிமை என்பது பிரிவினைக்கான உரிமையே அன்றிப் பிரிவினை அல்ல.

    விவாகரதுக்கான உரிமை விவாகரத்தாகி விடாது.
    விவாகரதுக்கான உரிமை எவ்வாறு ஒற்றூமையான மணவாழ்வை உறுதிப்படுத்துகிறதோ அவ்வாறே சுயநிர்ணய உரிமை தேசிய இனங்களிடையிலான. ஐக்கியத்தை உறுதிப்படுத்துகிறது.

    தயவு செய்து இவ் விடயம் பற்றி லெனின் முதல பலரும் கூறியவற்றைப் படித்துப் பாருங்கள்.

Comments are closed.