அதிகாரியை அனுப்புவாராம் மன்மோகன் கருணாவுக்குக் கடிதம்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடங்க விருப்பதை ஒட்டி கருணாநிதி மெள்ள தன்னுடைய நாடகங்களை அரங்கேற்றத் துவங்கியிருக்கிறார். இலங்கைக்கு குழு அனுப்புவது, தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து விட்டு அறிக்கை விட்டு அதை வைத்தே ஏதோ சாதித்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குவது என்று கருணா தன் நாடகங்களை அரங்கேற்றத் துவங்கியுள்ளார். தேர்தல் நெருங்க நெருங்க இந்த நாடகங்கள் உச்சக்கட்டத்தை அடையும் என்னும் நிலையில் இந்நாடகத்தின் ஒரு அங்கமாக இந்திய பிரதமர் மன்மோகன் கருணாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளாராம். இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுப் பணிகள் ஆகியவை குறித்து அறிய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி இலங்கைக்குச் செல்ல உள்ளார். இது முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: லங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவது குறித்து தாங்கள் எழுதிய கடிதத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்னையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு, பிரச்னையைத் தீர்ப்பதற்காக இந்தியா தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறதுஇலங்கையில் உள்ள நிலவரத்தை அறிந்து கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுகிறார். அவர் அங்குள்ள இந்திய தூதரக மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வருவார் என்று கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார். போர் நடந்த போது போர் நிறுத்தம் கேட்டபோது ராஜபஷ்சே, கோத்தபய் போன்ற பாசிஸ்டுகளின் கருத்தை பிரதிபலித்த கருணாநிதியும் மன்மோகனும் இணைந்து நடத்தும் இந்நாடகத்தில் தமிழ் மக்கள் ஏமாறக் கூடாது.

One thought on “அதிகாரியை அனுப்புவாராம் மன்மோகன் கருணாவுக்குக் கடிதம்.”

  1. முதலில் பறந்தடிக்கும் சம்பந்தன், பிறேமச்சந்திரு ஷிரிவாத்தி ஆகியோரே தரித்திரம்பிடித்த மூதேவி பலதார காமக்கொடூரன் கரிநாய்க்கு விளம்ம்பர நடிகர்களாகியிருக்கினும், கருணாசூனியை கட்டுப்படுத்தினாலும் கூட்டமைப்பை கட்டுக்குள் கொண்டுவரவுடியாது போலிருக்கிறது,

Comments are closed.