அதிகாரமற்ற கிழக்கு மாகாணம் : கிழக்கு கல்விஅமைச்சர் ஒப்புதல்

கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் விமலவீர திசநாயக்கா, ‘தனது அனுமதியின்றி ஆசிரியர் இடமற்றங்கள் எவையும் செய்யவேண்டாமென ஆளுநர் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆசிரியர் இடமாற்றச் சபையைக் கூட்டித் தீர்மானம் எடுத்த பின்னர் தனது அனுமதிக்கு சமர்ப்பிக்குமாறு அவர் அறிவுறத்தியுள்ளார்” என திருகோணமலை ஊடகவியலாளர்களை ஊடக இல்லத்தில் சந்தித்த போது கூறியிருக்கிறார். அத்துடன் ’40 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்று மக்கள் பிரதிநிதியான எனக்கு இல்லாத அதிகாரரம் கிழக்கு மாகாண ஆளுநருக்கு எப்படி வந்தது” என்ற கேள்வியையும் இங்கு எழுப்பியிருக்கிறார்.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு மட்டுமல்லாது பண்பாட்டலுவல்கள், காணி, போக்குவரத்து அமைச்சுப் பொறுப்புக்களும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் தனக்குத் தெரியாமலே அம்பாறையில் 25 ஆயரிம் ஏக்கர் காணி பெறப்பட்டுள்ளதகவும் கவலைப்பட்டிருக்கிறார்.
அதிகாரமில்லாத அமைச்சர் பதவியை வைத்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் வருமானத்திற்காக அமைச்சுப் பதவியை பார்க்கவில்லை எனவும் கல்வி அமைச்சர் விமலவீர திசநாயக்கா தெரிவித்திருக்கிறார்.