அண்ணா சாமாதியில் கருணாநிதி.

அன்றாடம் தன் பரிவாரங்களுடன் கோபாலபுரத்தில் இருக்கிற தன் இரண்டாவது மனைவியின் வீட்டில் இருந்தோ அல்லது மூன்றாவது மனைவியின் வீடு இருக்கும் ஆழ்வார்பேட்டையில் இருந்தோ கிளம்பி புதிய தலைமைச் செயலகம் செல்வது தமிழக முதல்வர் கருணாநிதியின் வழக்கம். சட்டமன்றத்திற்குச் செல்லும் கருணாநிதி அங்கிருந்து அரிய பல ஆலோசனைகளில் ஈடுபடுவது வழக்கம். மேல் மாடியில் இருந்து வெளியே எட்டிப்பார்த்து சென்னையில் அழகை ரசிப்பது. சட்டமன்றத்தில் வேறு எங்கெல்லாம் தன் படத்தை மாட்டுவது , யாரை எல்லாம் எந்தெந்த வழக்குகளில் உள்ளே போடலாம், கஞ்சா கேஸ் போடுவதா? அல்லது வழிப்பறி வழக்கே போதுமா? என்பது போன்ற அதி முக்கிய ஆலோசனைகளில் தலைமைச்செயலாளர் சிரிபதியுடன் அலோசனை செய்வார். இநிலையில் நேற்று மாலை வழக்கம் போல சட்டமன்ற வளாகத்திற்குச் சென்ற முதல்வர் திரும்பும்போது அண்ணா சமாதிக்குச் செல்லுமாறு டிரைவரிடம் கூறினார். இதையடுத்து முதல்வரின் கார் அண்ணா சமாதிக்குச் சென்றது.
அங்கு நீண்ட நேரம் சமாதியை முதல்வர் சுற்றிப் பார்த்தார். 8 மணி முதல் 9 மணி வரை அங்கேயே அமர்ந்திருந்தார். பழைய நினைவுகளில் முதல்வர் மூழ்கினார். தன்னுடன் இருந்தவர்களிடம் அண்ணா குறித்த நினைவுகளையும் அவர் பகிர்ந்து கொண்டார். பின்னர் கனத்த இதயத்துடன் அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார். திராவிட இயக்கத்தின் சீரழிவு அண்ணாதுரையிடம் இருந்தே துவங்கிறது. அவர்தான் எதுகை மோனையில் பேசி தன் தம்பியின் குடும்ப, சவாதிகார சீரழிவுக்கு தூபம் போட்டவர் என்ற வகையில் அண்ணன் இறுதியாக குடிகொண்ட மெரீனா நினைவகத்தில் தம்பி நினைவலைகளில் ஆழ்ந்திருக்கலாம் என்று தெரிகிற்து. தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவையான கருணாநிதியின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் புதிய விடிவும் ஒழியும் கிடைக்கும் என்றூ சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

13 thoughts on “அண்ணா சாமாதியில் கருணாநிதி.”

 1. ஒரு கணம் இதயத் துடிப்பே நின்றூ விட்டிருந்தது.உள்ளீருந்து ஒரு கோபம் எட்டிப்பார்த்தது.அப்புறமாய் அப்படியா என அடங்கிற்றூ.உங்கள் படம்வேறூ பயமுறூத்தி விட்டது.என்னதான் கோபம் இருந்தாலும் கலைஜர் தமிழ் அறீஜர் அவரோடுதானா விளயாடுவது?

 2. என்ன தமிழறிஞர் மொள்ளமாறி நாய் செத்துத் தொலைய மாட்டேங்குது…….

 3. புலம்பெயர் இலங்கைத் தமிழருடன் சேர்ந்து நடத்திய” மே” 2009 ஆண்டின் “உண்ணாவிரத நாடகத்தைதான்” மேலுள்ள கட்டுரையின் புகைப்படம் விளக்கி நிற்கிறதே!.படுத்தார்,பாராளுமன்றத்தை வென்றார்!…. இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது!.(வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஒரு மில்லியன் வரையான தமிழர்களில் 90 வீதமானவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தும் ஏனைய பாகங்களில் இருந்தும் புலம்பெயர்ந்த யாழ்-சைவ-வேளாளரே. — த.ஜெயபாலன் – தேசம் நெட்).
  26 ஆண்டுகளுக்கு முன்பு,என்னுடைய தந்தைக்கே 47 வயதுதான்,நான் பள்ளிக்கூடம் படிக்கும் சிறுவன்,டாக்டர் கலைஞர் கருணாநிதி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசுகிறார்,”எனக்கு 60 வதுக்கு மேல் ஆகிவிட்டது(அப்போது எம்.ஜி.ஆர். இவரை பதவிக்கு வரவிடாமல் பல ஆண்டுகளாக தண்ணிக் காட்டிக் கொண்டிருக்கிறார்),நான் இன்னும் மூன்றாண்டுகளுக்கு மேல் உயிரோடு இருக்கமாட்டேன் என்று ஒருவர் ஆரூடம் கூறியுள்ளார்,ஆகையால் இதுவே என்னுடைய இறுதி தேர்தலாக உங்களை சந்திப்பதாக இருக்கலாம் என்று நா தழு தழுக்க கூறி கண் கலங்கினார்.என் தந்தையும்,என்ன தலைவர் இப்படி சொல்லிவிட்டாரே என்று கண் கலங்கினார்,எனக்கும் அழுகை அழுகையாக வந்தது,உடனே அந்த தேர்தலில் எங்கள் வீட்டு சேமிப்புப் பணம் காலி.தமிழனின் உள்ளத்தின் ஈரப்பதம்,உணர்ச்சிகளாக உறிஞ்சப்பட்டு,தனிமனிதர்களின் வாகனங்களில் பெட்ரோலாக செலவாகி வற்றியது!.பிரகு என் தந்தைக்கும் வயதாகி,தள்ளாடி இறந்துவிட்டார்,எனக்கும் வயதாகி விட்டது,ஆனால் அந்த நாடகம் இன்னும் தொடருகிறது..தலைவர் மட்டும் கட்டு(மஸ்தான்)மரமாக இன்னும் மிதந்துக் கொண்டே இருக்கிறார்…தேர்தல் வருகிறதல்லவா!!….

  1. சிறு திருத்தம் .மே 2009 அல்ல ஏப்ரல் 27, புலம் பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களை ஏமாற்றுவதற்காகவும் என்று வரவேண்டும்,

   இலங்கையில் போர்நிறுத்தம் கோரி, தமிழக முதல்வர் கருணாநிதி நடத்திய திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தின் எதிரொலியாக இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு உற்சாகமாகப் பேசினார்.

   அவர் பேசிய விவரம் வருமாறு:

   திருக்குவளை எனும் சின்னஞ்சிறு கிராமத்தில், 1924ம் ஆண்டு ஜூன் 3ம் நாள் முத்துவேலர் என்ற இசைத் தமிழ் தந்தைக்கும் – அஞ்சுகம் என்ற அன்னைக்கும் பிறந்து, ‘குவா குவா’ என்று குளிர் தமிழ் மொழியில் ஒலியெழுப்பினேன். அந்தக் காலத்தில் நான் பிறந்த அறையிலேயே திருடர்கள் புகுந்து பொருள்களைக் களவாடிய போது, அவர்களில் யாரோ ஒருவருடைய கையோ, காலோ என் கழுத்தில் அழுத்தப்பட்டிருந்தால், அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, தமிழ் என்ற அந்த தன்னேரில்லா சொல் என்னால் உச்சரிக்கப்பட்டிருக்காது.

   தமிழை உச்சரிப்பதற்கு, உயர்த்துவதற்கு, உலக மொழிகளில், செம்மொழிகளில் ஒன்றாக ஆக்குவதற்கு, நான் உயிரோடு இருக்க வேண்டுமென்று தமிழன்னை கருதினாள் போலும். அதனால் தான் ஊர்ந்து, தவழ்ந்து, வளர்ந்து 13ம் வயதிலேயே தமிழ் எழுதவும், கட்டுரைகள் தீட்டவும், கதைகள் புனையவும், கற்கண்டு தமிழ் எனக்கு உதவிற்று. அந்நாளில் தான் 1938ம் ஆண்டில் ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை மற்றும் தமிழ்ப் புலவர் பெருமக்கள், தமிழ் காக்கும் போரில் குதித்த வரலாறு தோன்றிற்று. அந்த வரலாற்றில் ஒரு துளியாக நான் இருந்தேன்.

   ‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பார்களே, அப்படி இன்று கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நல் இதயங்களின் வாழ்த்துகளைப் பெறுகிற அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். இந்த வளர்ச்சியும், வலிமையும் எதற்காக பயன்பட வேண்டும்? என் தமிழைக் காக்கவும், என் தமிழர் எங்கெல்லாம் அல்லல்படுகின்றனரோ அவர்களைக் காக்கவும், பயன்படாத இந்த உடல் இருந்து என்ன பயன், உயிர் இருந்து தான் என்ன பயன்?

   ‘உடலில் முதுகில் அறுவை சிகிச்சை ஆயிற்றே, இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்காக இப்படி ஓர் உண்ணா நோன்பு போராட்டம் என்றால் உடல் என்னவாகும், உயிர் என்னவாகும்? எங்களுக்கு நீங்கள் வேண்டும்’ என்றெல்லாம் என் தமிழர்கள், என் உடன்பிறப்புகள் முழக்கமிடுகின்றனர்.

   ஆமாம், அவர்களுக்கு நான் வேண்டும்; எனக்கு அவர்கள் வேண்டும். என் தமிழ் வேண்டும். என் தமிழன் காலமெல்லாம் நலமாக வாழ வேண்டும். அவனை அல்லலோ, அவதியோ அண்டவும் கூடாது. அதனால் தான், இலங்கையிலே மடிந்து கொண்டிருக்கிற தமிழர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற சோகத்தோடு வாடினேன்.

   நேற்றிரவெல்லாம் கண் விழித்து, இலங்கையில் போர் நிறுத்தம் என்ற நல்ல செய்தி ஏதாவது வருகிறதா என்று டில்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். நல்ல வார்த்தைகள் தான் கூறினர். ‘நல்லதே நடக்கும்’ என்று தான் உறுதியளித்தனர்.

   ஆனால், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்தி தான் கிடைத்தது. அதிகாலை 5 மணியளவில் என் வீட்டாருக்கும் சொல்லாமல், ‘அறிவாலயம் செல்கிறேன்’ என்று கூறிவிட்டு, அண்ணாதுரை இருக்கும் இடம் எனக்கு அறிவாலயம் தானே என்று இந்த அறிவாலயத்திற்கு வந்து, உண்ணா நோன்பை துவங்கினேன்.

   இதன் விளைவாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி, போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. இனி இலங்கை ராணுவம், இந்த போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் அளிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது”
   இவ்வாறு கருணாநிதி பேசினார்

 4. (நேற்று மாலை வழக்கம் போல சட்டமன்ற வளாகத்திற்குச் சென்ற முதல்வர் திரும்பும்போது அண்ணா சமாதிக்குச் செல்லுமாறு டிரைவரிடம் கூறினார். இதையடுத்து முதல்வரின் கார் அண்ணா சமாதிக்குச் சென்றது.
  அங்கு நீண்ட நேரம் சமாதியை முதல்வர் சுற்றிப் பார்த்தார். 8 மணி முதல் 9 மணி வரை அங்கேயே அமர்ந்திருந்தார். பழைய நினைவுகளில் முதல்வர் மூழ்கினார். தன்னுடன் இருந்தவர்களிடம் அண்ணா குறித்த நினைவுகளையும் அவர் பகிர்ந்து கொண்டார். பின்னர் கனத்த இதயத்துடன் அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார்) .அயர்லாந்து நாட்டு ஆட்டோ பஸ் தி மு க அடுத்த சட்டசபைத்தேர்தலில் தோல்வியைத்தழுவும் என்ற கணிப்பு பலித்துவிடப்போகிறதென்ற பயம் பகுத்தறிவுக்களஞ்சியமான் கருணாநிதியை ஆட்டித்தான் விட்டது .

 5. முரசொலிமாறன் செத்த போது கருணாநிதி அழுதார் கதறிகதறி அழுதார்,அழுதுகொண்ணே இருந்தார்.இரண்டு நாள் கழித்து தான் கவிதை எழுதினார்.ஆனால் ஆண்ணா செத்த போது இவர் முதல் வேலையாய் என்ன செய்தார் தெரியுமா?ஆல் இந்தியா ரேடியோவில் வாசிக்க நீண்ட கவிதை எழுதப் போய்விட்டார்.’பூ விதழின் மென்மையிலும் மென்மையான புனித உள்ளம் அரவணைக்கும் அன்பு உள்ளம்’என்று நாண்ட தேரம் யோசித்து எழுதி முடித்தார்.அண்ணா மேல் இவருக்கு உண்மையிலேயே அன்பிருந்தால் இப்படி அவசர அவசரமாய் இன்ஸ்டான்ட் கவிதை எழுதியிருப்பார்?இதை யெல்லாம் சின்ன வயதில் கேட்டபோது வியந்தோம்.மனப்பாடம் செய்து கழக க்கூட்டங்கள் துவஙெக்முன் சந்தடிச்சாக்கில் கிடைத்த மைக்கில் ஒப்பிப்போம்.அப்போது உலகமே கைக்கு வந்ததாய் மகிழ்வோம்.நம் அப்பாவோ அண்ணனோ இப்படி செத்துக் கிடக்கும் போது பொணத்தை விட்டுவிட்டு கவிதை எழுத வருவோமா?கவிதைதான் வருமாமா?என்றெல்லாம் இப்போது தமிழினத்துக்கு கருணாநிதி செய்த துரோகத்தை பார்த்த பிறகு பல கேள்விகள் எழும்புகிறது.அந்த கவிதையிலும் எத்தனை பொய்கள்.?செத்த பொணத்தின் இதயத்தை இரவலாக கேட்ட கலுணாநிதியின் அற்பபுத்தியை நினைத்தால் ஆத்திரம்தான் வருகிறது.அதிலும்’நான் வரும் வரையில் பத்திரமாய் வைத்திருந்துது உன் காலடியில் சேர்ப்பேனண்ணா?(இரவல் இதயத்தை இத்தனை நாள் வைத்திருந்தால் அது என்னவாகும்.பரலோகத்தில் எம் ஜி ஆரைப்பார்த்ததும் அண்ணா ‘அவன் எப்போ வருவா’னென்று கேட்டதாகவும் அதற்கு எம் ஜி யார் ‘அவர் எல்லோரையும் அனுப்பிவிட்டுதான் வருவார்’ என்று சொன்னதாகவும் ஒரு தகவல்)அதிலும் அண்ணாவின் இதையத்தை வாங்கிய மாதிரி கையில் கொடுக்காமல் அவர் காலடியில் வைக்க அது என்ன பேட்டா செருப்பா?இல்லை பேஷன் ஷூவா..?)கருணாநிதியின் இந்த அலம்பல்கள் அண்ணாவுக்கு தெரிந்திருந்தால் அண்ணா எங்வளவு வேதனைப்படுவார்.
  தான் தன் குடும்பம் தன்னை புகழ்வோர் என்று தன்னைச்சுற்றியே வாழும் கருணாநிதாயை தலைவனாக ஏற்று கடந்த ஆண்டுவரை அக்கட்சியில் உறுப்பினராக இருந்தமைக்காக வெட்கப்படுகிறேன்

 6. “அயர்லாந்து நாட்டு ஆட்டோ பஸ்” என்றால் என்ன என்று மூளையைக் கசக்கிப் பார்த்து உடனே ஒன்றும் பிடிபடவில்லை. ஆட்டோவா, பஸ்ஸா (பேரூந்து), அயர்லாந்திலிருந்து ஏன் வர வேண்டும், என்றெல்லாம் யோசித்துத் தூக்கம் கெட்ட பிறகு தான் ஒரு நண்பர் “அயர்லாந்து நாட்டு ‘சோதிடமணி’ ஒக்ட்டோப்பஸ் (ஆக்டோபஸ்) ஆக இருக்கலாம்” என்று சொன்னார்.

  “பாம்பே ஒரு பெருநகரமானது” என்பதிலும் இது வேடிக்கையானது.

 7. why so many negative comments about karunanithi? He is just a politician, he has to do politics..

  1. The ‘high caste hindu vellala males’ is a myth as well as a mask used by people to control the system in a mean sole=-proprietorship manner(IT WAS CREATED BY EUROPEAN LINGUISTIC METHODALOGIES IN “RUWANDA STYLE” – see TUTSIS – HUTUS genocide). You don’t have to belong to the’high caste hindu vellala males’ group, but – uese their strategies to control the system for your personal benefits.

   In that sense, the ‘high caste hindu vellala males’ are trend-setters (the people who set the style) for total destruction!(BUTCHERY or CANNIBALISM?).
   —RECOGNIZING THIS “CANNIBALISM” IS THE STRATEGY OF KALAINGAR M.KARUNANIDHI!.HE THINKS IT WILL TACKLE HIS POLITICAL ENEMIES and BRING FORTUNE FOR HIM!.

   1. I AM PRESENTLY READING THE THIRD MAN THE BRITISH POLITICIAN EXPRIENCE SIMILARLY TO THAT OF FOMER PRIME MINISTER OF GREAT BRITAIN.WHAT AM LEARNING IS THEIR MOTIVATION AND POSITIVE EMOTION.BUT NOT LIKE OUR WRITERS WHO ALWAYS CRITIZE ONE ANOTHER WHICH I PERSONALLY DISLIKE AND IT IRRITATES ME.

  2. அரசியல்வாதி அரசியல் செயய்லாம், ஆனால் மனிதப் பிணங்களுக்கு மேலாக அல்ல.

 8. ‘இனியொரு’….என்ற இந்த பகிர்வு வலைத் தளத்தில் நண்பர்களின் சினமிகும் கருத்துக்கள் மிகவும் கவனத்துக்குரியன.
  இம்மாதிரியான அனல் தெறிக்கும் வார்த்தைகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடும் என்றா நினைக்கிறீர்கள்? தமிழன் என்றைக்கோ தன் மானம் கெட்டுப் போய் விட்டான். இல்லாவிட்டால்,இத்தனை கட்சிகள்…..இத்தனை தலவர்கள்…..இத்தனை மதஙகள்,இத்தனை சஙகங்கள் என்றுநம்மிடையே இருக்குமா? எதைச் சொன்னாலும் ரசிக்கத்தான் இருக்கிறோமே தவிர சிந்தித்து செயல்படுவதற்கல்ல.- கிருஷ்ணன் பாலா

  1. யாரும் எதையுமே பேசாமலிருப்பதை விட இது நல்லது.
   குப்பைகளை நாம் எவ்வாறோ இனங்காண்கிறோம்.
   வன்மமும் உளறல்களும் இருந்தாலும் பயனுள்ள கருத்துக்களும் பரிமாறப்படுகின்றன.

Comments are closed.