இந்திய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் – டி.ராஜா

அணுவிபத்து நஷ்டஈடு மசோதாவுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது: அணுவிபத்து நஷ்டஈடு மசோதாவை நிறைவேற்ற இந்திய அரசை, அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்து வருகிறது. நமது அரசை அடிபணிய சொல்ல அமெரிக்காவுக்கு என்ன உரிமை உள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸýம், பாஜகவும் ஒத்த கருத்தை எட்டினால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அணுவிபத்து நஷ்டஈடு மசோதாவுக்கு எதிராக பாஜக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில்டௌநிறுவனத்திடமிருந்து |1500 கோடி நஷ்டஈடு கோருவதை கைவிடுமாறு அமெரிக்க அரசு நிர்ப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை இணையமைச்சர் மைக்கேல் ஃபோர்மெனுக்கும், மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவுக்கும் இடையேயான மெயில் தகவல் பரிமாற்றத்தை தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து விவகாரங்களிலும் அமெரிக்கா தலையிடுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.