அணிவகுப்பு மரியாதை புறக்கணிப்பு உச்சமடையும் மகிந்த – சரத் முரண்பாடு

sarathfinalஇது சிங்களவர்களின் தேசம் எனப் பிரகடனப்படுத்தியவரும், மகிந்த அரசுடன் இணைந்து  அப்பாவி மக்கள் மீது படுகொலைகளைக் கட்டவிழ்த்த தலைமை அதிகாரிகளில் ஒருவருமான சரத் பொன்சேகாவிற்கும் மகிந்த அரசிற்கும் இடையேயான முரண்பாடு உச்சமடைந்துள்ளது.

கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்தும், இராணுவத்திலிருந்தும் ஓய்வுபெறும் ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு முப்படைகளின் மரியாதை அணிவகுப்பு இன்று (16) முற்பகல் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் முப்படைகளின் தளதிபதிகள் பிரசன்னமாகியிருக்கவில்லை. கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியொருவர் ஓய்வுபெற்றுச் செல்லும் அணிவகுப்பு மரியாதையின் போது முப்படைகளின் தளதிபதிகள் அதில் கலந்துகொள்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயமாக இருந்த போதிலும், இன்றைய அணிவகுப்பில் கலந்துகொள்ள வேண்டாம் என முப்படைத் தளபதிகளுக்கும் நேற்றிரவு (15) ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இன்று முற்பகல் 9.30 அளவில் நடைபெற்ற மரியாதை அணிவகுப்பு நிகழ்வில் செய்தி சேகரிப்பதற்காக 9 மணிக்கு வருமாறு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், நிகழ்விடத்திற்கு ஊடகவியலாளர்கள் முற்பகல் 10 மணிக்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3 thoughts on “அணிவகுப்பு மரியாதை புறக்கணிப்பு உச்சமடையும் மகிந்த – சரத் முரண்பாடு”

 1. கொன்றவர்களுக்கே முரண்பாடு! 
  இது எல்லாம் அவர்களின் அதிகார போட்டியே தவிர தமிழன் என்று வரும்போது எல்லாமே ஒன்ற தான் நிற்பவை.எது எப்படி இருப்பினும் இந்த முரண்பாடு எமக்கு சாதகத்தை கொஞ்சம் சரி ஏற்படுத்தும் என்று தான் நான் நினைக்கிறேன்.
  நண்பா உங்கள் அணைத்து கட்டுரைகளும், ஆக்கங்களும் அருமை ! தொடர்ந்து இதே பாதையில் பயணிப்பிர்கள் என்று நினைக்கிறேன்.தொடர்ந்தும் எம் இனம் சார்ந்து கட்டுரைகள், அவலம்,நியாகம், பற்றியும் எழுதுங்கள்.
  எனது வாழ்த்துக்கள் நன்றி தமிழ்

 2. இதனால் நமக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை எங்கள் விடிவுக்காக ஆக வேண்டியதை பார்ப்போம் நன்றி

 3. யார் ஜனாதிபதியானாலும் ஈழத்தமிழனுக்கு எதுவித நன்மையும் இல்லை.
  ஆனால் சரத் பொன்சேகா ஜனாதிபதியாக வரவேண்டும். இந்திய வல்லாதிக்
  கவாதிகளுக்கு சங்கடத்தைக்கொடுக்க வேண்டும். பிராந்திய வல்லரசு பல
  துண்டுகளாகச்சிதறவேண்டும் இதுவே நான் தினம் தினம் ஆண்டவனிடம்
  வேண்டுவது. ஒவ்வொரு ஈழத்தமிழனும் இப்படி வேண்டுதல் செய்யவேண்
  டும்.

  தே.தமிழ்நேசன்.

Comments are closed.