அடிமைச் சாசனம்- புலிகளின் எதிர்வினை – ஈழப்ப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 12)

இலங்கை அரசின் இன ஒடுக்குமுறையும் ஜே.ஆர் ஜயவர்த்தன அரசின் சர்வாதிகாரமும், பாசிசமும் ஒழுங்கமைக்கப்பட்ட பேரினவாதமாக விரிவடைகின்றது. புலிகளின் இருப்பைச் சுட்டிக்காட்டியே பேரினவாதம் சிங்களப்பகுதியில் தன்னை மேலும்மேலும் நிறுவிக்கொள்கிறது. தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் மீதான, மொழி, கலாச்சார, பண்பாட்டு அடக்கு முறைகள் அதன் எல்லைகளைத் தாண்டி இராணுவ அடக்குமுறையாக விரிவடைகிறது. மறுபுறத்தில் அரச ஆதரவு தமிழ் அரசியல் வாதிகள் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு முன்வைக்கப்படும் என்கின்றனர். நீதி அமைச்சராகப் பதவிவகித்த கே.டபுள்யூ.கே.தேவநாயகம் தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர், வன்முறையை அல்ல என பத்திரிகையாளர் மாநாட்டில் கூறுகிறார். அரசியல் அமைப்பை மாற்றியமைத்து தமிழர் பிரச்ச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று மேலும் அவர் கூறிய அதே வேளை அம்பாறை, திருகோணமலை போன்ற பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரமடைகின்றன.

பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட இரகசியப் பொலீசாரின் கொலை ஏற்படுத்திய அதிர்வலைகள், புலிகளின் பலம் குறித்த வாதங்களைப் பரவலாகத் தோற்றுவித்திருந்தது. இப் படுகொலை நிகழ்ந்து சரியாக ஒருமாதமும் பத்து நாட்களும் ஆன நிலையில் புலிகள் தடைச் சட்டத்தை ஜெயவர்தன அரசாங்கம் நிறைவேற்றுகிறது. 19.05.1978 அன்று இலங்கைப் பாராளுமன்றம் புலிகளும் அதை ஒத்த அமைப்புக்களையும் தடைசெய்வதாகச் சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றுகின்றது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரசைச் சேர்ந்த தொண்டைமான், தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன வாக்களிக்க, 131 ஆதரவான வாக்குகளுடனும் 25 எதிரான வாக்குகளுடனும் சட்டமூலம் நிறைவேறுகிறது.

இச்சட்டமூலம் இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு முதல் தடைவையாக எல்லை மீறிய அதிகாரத்தை வழங்கியது.

சட்டமூலம் குழு நிலையில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட போது தமிழ் அமைச்சரான தேவநாயகம் அதனை ஒரு வருடத்திற்கு மட்டுமே அமுல்படுத்த வழிகோலும் சட்டமூலம் ஒன்றைப் பிரேரித்தார். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவ்வேளையில் எதிர்க்கட்சித் தலைவராக திரு.அமிர்தலிங்கம் இருந்தார். தடைச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் ஆலோசனைக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரால் முன்மொழியப்படும் ஒருவரும் ஏற்றுக்கொள்ளப்படுவார் என பிரதமமந்திரி ஆர்.பிரேமதாச தெரிவித்தார். அந்த ஆலோசனைக் குழு மூன்று உறுப்பினர்களை மட்டுமே கொண்டதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சபையில் விவாதத்தின் போது கருத்துத் தெரிவித்த அமிர்தலிங்கம், வீரகேசரிப் பத்திரிகையில் வெளியான புலிகளின் கடிதம் உண்மைக்குப் புறம்பானது. அதில் குறிப்பிடப்படுள்ளது போல கனகரத்தினம் கொலைசெய்யப்படவில்லை. இது உண்மையானதல்ல சிருஷ்டிக்கப்பட்ட கடிதம் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு சில புலிகளைக் கைது செய்வதன் மூலம் இனப்பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது என்றார்.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதும் அரசபடைகளின் அதிகாரம் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்தது. தமிழ் இளைஞர்களின் கைதுகளும் தாக்குதல்களும் அதிகரித்தன. எமது இயக்கத்திற்கான ஆதரவும் திடீரென ஒரு பாய்ச்சல் போல அதிகரித்ததை உணரக் கூடியதாக இருந்தது. இவ்வேளைகளில் மத்திய குழுவை அடிக்கடி கூட்டிக்கொள்வோம்.

தேடப்படுவோரின் படங்கள் அடங்கிய சுவரொட்டி தமிழ்ப் பேசும் மக்கள் நடமாடும் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தது. நாகராஜா, உமாமகேஸ்வரன், கண்ணாடி பத்மனாதன், வாமதேவன் ஆகியோரின் படங்கள் முன்னணியில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவர்களைக் காட்டிக்கொடுப்போருக்கு ஒருலட்சம் ரூபா சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது, இவர்களைத் தொடர்ந்து பிரபாகரன், ரவி போன்றோரின் படங்கள் பிரசுரிக்கப்பட்டு இருபத்து ஐயாயிரம் ரூபா சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுதத் வரையில் இவர்கள் எல்லாம் தம்மை விடுதலை செய்யவந்த கதாநாயகர்களாகவே நோக்கப்பட்டனர். இலங்கை முழுவதும் ஒரு புதிய அரசியல் சூழலுக்குள் இழுத்துச் செல்லப்படுவாதான நிலை தென்பட்டது.

வாமதேவன் என்பவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் கார்ச் சாரதியாக வேலைபார்த்தவர் என்பதைத் தவிர போராட்ட நடவடிக்கைகளுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. சில தனிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவர் குற்றவியல் வழக்குகளிலும் பதிவாகியிருந்தார். கண்ணாடி பத்மநாதன் ஏற்கனவே 1973 ஆம் ஆண்டு செட்டியால் கொல்லப்பட்டிருந்தார்.

புலிகள் தடைச் சட்டம் நிறைவேற்ற சில நாட்களிலேயே புதிய சுவரோட்டி ஒன்று இரகசியப் பொலீசாரால் தயாரிக்கப்படுகிறது. அச் சுவரொட்டியில் காசியானந்தன், வண்ணையானந்தன், அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் போன்ற வெளிப்படையான உறுப்பினர்கள் உள்ளிட்ட 38 தமிழ் இளைஞர்கள் தேடப்படுவோராக அறிவிக்கப்பட்டனர்.

வேலுப்பிள்ளை பிரபாகரன்(வல்வெட்டித்துறை) சபாரத்தினம் சபாலிங்கம் (யாழ்ப்பாணம்) ஆறுமுகம் விவேகானந்தன் (யாழ்ப்பாணம்) சபாரத்தினம் இரத்தினகுமார் ( யாழ்ப்பாணம்) துரையப்பா ராஜலிங்கம் (கொக்குவில்), செல்லையா சபாரத்தினம் (யாழ்ப்பாணம்), தம்பிப்பிள்ளை சந்ததியார் (சங்கானை), ஐயா துரைபாலரத்தினம் (அளவெட்டி), வேலாயுதபிள்ளை திசைவீரசிங்கம் (கொடிகாமம்), பொன்னுத்துரை சத்தியசீலன் (சுன்னாகம்), நவரத்தினம் நாராயணதாஸ்(யாழ்ப்பாணம்), வைரமுத்து நீர்த்தகுமார் ( மானிப்பாய்), கனகசபைமுதலி சிவராஜா(நல்லூர்), மாவை சேனாதிராஜா(தெல்லிப்பளை), ஆறுமுகம் கிருபாகரன் (அரியாலை), அலோசியஸ் கனகசுந்தர் (வேம்படி), சுந்தரம் சபாரத்தினம்(திருநெல்வேலி), எஸ்.புஸ்பராஜா(மைலிட்டி), பூபாலரத்தினம் நடேசாந்தன் (மட்டக்களப்பு), தம்பித்துரை ஜீவராசா(சாவகச்சேரி), அமிர்தலிங்கம் காண்டீபன் (லண்டன் குவின்ஸ் ரோட்), காசியானந்தன் (அமிர்தகளி), ஞானம்(யாழ்ப்பாணம்), சுப்பிரமணியம் குருகுலசிங்கம் (திருநெல்வேலி), விஸ்வசோதி இரத்தினம் என்ற இன்பம்(நவாலி), கந்தசாமி சிறீஸ்கந்தராஜா(கரணவாய் தெற்கு), கே.எஸ்.ஆனந்தன் (சுன்னாகம்),செல்லையா பாலசிங்க(கல்வியங்காடு), அமரசிங்கம் நாகராஜா(நீராவியடி), வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்(யாழ்ப்பாணம்), நடேசப்பெருமாள் கனகரத்தினம்(பரந்தன்), செல்வராசா யோகச்சந்திரன் (வல்வெட்டித்துறை), சிவராமலிங்கம் சந்திரகுமார்(திருநெல்வேலி), வண்ணையானந்தன் (யாழ்ப்பாணம்), உமாமகேஸ்வரன் (தெல்லிப்பளை) போன்றோர் தேடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றனர். இவர்களின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளை முன்னரைப் போலவே பொலீசார் பொது இடங்களில் ஒட்டியிருந்தனர்.

இதன் எதிரொலியாக சாவகச்சேரி எம்பி நவரத்தினம், நல்லூர் எம்.பி சிவசிதம்பரம் ஆகியோர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர். ஏற்கனவே தேடப்பட்டு விடுவிக்கப்பட்டோரும், வெளிப்படையான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்வர்களான, காசியானந்தன், வண்ணையானந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் தேடப்படுபவர்களாக அறிவிக்கப்பட்டமை குறித்து ஆட்சேபம் தெரிவிக்க புதிய தேடப்படுவோரின் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கவிருப்பதாக பிரதமர் பிரேமதாச தெரிவிக்கிறார்.

இந்தச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டவர்களில் பிரபாகரனையும், கிருபாகரனையும், உமாமகேஸ்வரனையும்.நாகராஜாவையும்.ரவி யையும் தவிர மற்ற எவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இல்லை. இலங்கை அரச உளவுத்துறையின் பலவீனமும், தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து தகவல் சேகரித்துக்கொள்வதற்கான வழிமுறைகள் இல்லாதிருந்த்மையையும் நாங்கள் கணித்துக்கொள்கிறோம். ஒரு வகையில் எமது நடவடிக்கைகளுக்குத் தமிழ் மக்களின் ஆதரவை இது வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. தேடப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட பலர் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்களாகவும், இளைஞர் பேரவையைச் சார்ந்தவர்களாகவும் இருந்தனர். புலிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பதாக தம்பித்துரை ஜீவராசாவும் தியாகராஜா எம்.பிஐக் கொலைசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு போலிசாரால் தேடப்படும்போது பிரபாகரனுக்கு முற்பட்ட பகுதிகளில் என்னைத் தொடர்புகொண்டவர்.

பெப்ரவரி ஆறாம் திகதி 1978 அன்று இலங்கை நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட ஜே.ஆர்.ஜெயவர்தன, யாப்பியல் சர்வாதிகாரத்தை நிலை நாட்டினார். புலிகள் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நான்கு மாத இடைவெளியில் இலங்கையை ஜனநாயகச் சோசலிசக் குடியரசாக்கும் அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்கான அங்கீகாரம் 31ம் திகதி ஓகஸ்ட் மாதம் 1978 ஆம் ஆண்டு அமைச்சரவையால் வழங்கப்பட்டது. இதே நாளில் சுபவேளையில் இலங்கை நேரப்படி காலை 9:02 இற்கு இச்சட்டவரைவில் சபாநாயகர் கைச்சாத்திட்டார். அரசியல் அமைப்பில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்திய இச்சட்டமூலம் ஒரு புறத்தில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை மேலும் வலிமைபடைத்தவராக மாற்றியது, மறு புறத்த்தில் தமிழ் மொழியை இரண்டாவது மொழியாகச் சட்டரீதியாக மாற்றியமைத்தது.

ஒரு நாட்டில் ஒரு குறித்த மக்கள் பிரிவினரால் பேசப்படுகின்ற மொழியை அந்த நாட்டு அரசே இரண்டாவது மொழியாகப் பிரகடனப்படுத்தி தேசிய இன அடக்குமுறையை சட்டமாக்கிய துயர நிகழ்வு இலங்கையில் நடந்தேறியது.

இந்த அரசியல் அமைப்பிற்குரிய அங்குரார்பண வைபவம் 07ம் திகதி செப்டெம்பர் மாதம் 1978 இல் நடைபெற்றது. இந்த வைபவம் நாடுமுழுவதும் அரசாங்கத்தினால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இலங்கையிலுள்ள ஆலயங்கள் எங்கிலும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை 7 மணிமுதல் 8 மணிவரை கோவில் மணிகள் ஒலிக்க வேண்டும் என்றும் அதனைத் தொடர்ந்து பௌத்த ஆலயங்களிலும். கோவில்களிலும், பள்ளிவாசல்களிலும் பிரார்த்தனைகள் இடம்பெற வேண்டும் என ஜே.ஆர்.அரசு உத்தரவிட்டது. ஜே.ஆர்.ஜெயவர்தனவின் இனவாதத் தீயில் எரிந்து கொண்டிருந்த சிங்கள மக்களின் பௌத்த சிங்கள மேலாதிக்கவாத உணர்விற்கு இது எண்ணைவார்ப்பது போலிருந்தது. 7 ஆம் திகதி எதிர்பார்த்தபடி சிங்களப் பகுதிகள் முழுவதும் விழாக்கோலம் கொண்டிருந்தன. தெருக்களின் சிங்கள மக்கள் இலவச உணவு வழங்கி மகிழ்ந்தனர். இலங்கை சிங்கக் கொடியோடு அனைத்து வாகனங்களும் ஒலியெழுப்பி ஆர்ப்பரித்தன. வடகிழக்கு எங்கும் இனம்புரியாத சோகம் இழையோடியது. சொந்த தேசத்தில் இரண்டாம்தர குடிமகனாகிப்போன துயரம் ஒவ்வொரு தமிழ்ப் பேசும் இலங்கையனதும் முகத்தில் தெரிந்தது.

மூன்றம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் வெளிநாடு பயணமானார். எமது இனத்தின் விடுத்லைக்காக வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யச் செல்வதாக உணர்ச்சிகரமாக விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

தமிழர்கள் கொதித்துப் போயிருந்தார்கள். வஞ்சம் தீர்க்கப்பட்டதான உணர்வு எல்லோர் மனதிலும் மேலோங்கியிருந்தது. இலங்கை முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே தலை காட்டி மறைகின்றன. இவ் வன்முறைகளின் உணர்வு ரீதியான பிரதிபலிப்பாக நாம் எதையாவது செய்தாகவேண்டும் என்பதில் முழு நேரத்தையும் தேசியப் போராட்டத்திற்காக அர்ப்பணித்த எமக்கு முழுமையான உடன்பாடிருந்தது.

இந்த வேளையில், தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைக்காக இராணுவத்தைக் கட்டியமைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் இலங்கை அரசு திகைத்துப் போகும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணியிருந்தோம். அதற்கான தயாரிப்புகளை மேற்கொண்டிருந்தோம். அதுதான் பாகம் ஐந்தில் எனது பதிவில் குறிப்பிட்டிருந்த அவ்ரோ விமானக் குண்டுத் தாக்குதல்.

வழமை போல இதற்கான தயாரிப்பு வேலைகளில் உடனடியாகவே செயற்பட ஆரம்பித்துவிட்டோம். இதற்கான முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குலமும் பேபி சுப்ரமணியமும் பலாலியிலிருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம்செய்து நிலைமைகளை அவதானிப்பது எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஒத்திகை வேலைகளெல்லாம் முடிவடைந்து அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து திரும்பிவந்து எம்மிடம் நிலைமைகளை விபரித்த பின்னர் குண்டுவெடிப்பிற்கான திட்டம் தீட்டப்படுகிறது.

பேபி சுப்பிரமணியம் நேரக் குண்டைத் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார். அவருக்கு இக்குண்டுவெடிப்பை நிறைவேற்றும் முக்கிய பணி வழங்கப்படுகிறது. இதற்கான தொழில் நுட்ப வேலைகளிலும் குண்டைத் தயாரிப்பதிலும் உமாமகேஸ்வரனின் பங்கு குறிப்பிடத்தக்கது. பலஸ்தீனத்தில் பெற்றுக்கொண்ட இராணுவப் பயிற்சிகளின் போது நேரக்குண்டு தயாரிப்பதற்கான முழுமையான அறிவை அவர் பெற்றிருந்தார் இதே வேளை ராகவனும் எம்மோடிருந்தார். பேபி சுப்பிரமணியத்துடன் இணைத்து விமானத்தில் கொழும்ப்பு வரை ராகவனும் பயணம்செய்து விமானத்தில் குண்டுவைத்துவிட்டுத் திரும்புவதாக ஏற்பாடாகிறது.

தகவல் சேகரிப்பு, பயணச் சீட்டு எல்லாம் தயாராகிவிட, திட்டமிட்டபடி அவர்கள் இருவரும் விமானத்தில் கொழும்பு நோக்கிப் பயணம் செய்கின்றனர். விமானநிலையத்தில் பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் குண்டு வெடிக்கும் நேரம் தகவைமைக்கப்படுகிறது.

7 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் இலங்கை ஜனநாயகச் சோசலிசக் குடியரசு அங்குரார்ப்பண வைபவம் கொழும்பு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் வேளையில் அவ்ரோ விமானம் தமிழீழ விடுதலைப் புலிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்படுகிறது. இலங்கையின் தேசிய விமானச் சேவையை நடத்திக்கொண்டிருந்த ஒரே விமானமான அவ்ரோவைக் குண்டுவைத்துத் தகர்த்த நிகழ்வானது ஜே.ஆர்.அரசின் இதயத்தில் இரும்பால் அறைந்தது போலிருந்தது.

மறு நாளே தேடுதல், கைது என்று கொழும்பு நகரமே யுத்தமுனை போலக் காட்சியளித்ததாக பத்திரிகைகள் செய்திவெளியிட்டன. தமிழ் மக்கள் ‘பொடியள்’ சாதித்துவிட்டதாக பெருமிதமடைந்தார்கள். எல்லாவற்றையும் ஓசைபடாமல் நிறைவேற்றிய வெற்றிக்களிப்புடன் ராகவனும் பேபி சுப்பிரமணியமும் பண்ணைக்குத் திரும்பிவிடுகிறார்கள்.

எமது தோள்களில் விடுதலையின் சுமையை உணர ஆரம்பிக்கிறோம். புதியவர்களை இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டியதன் தேவையையும் உணர்ந்து கொள்கிறோம். எம்மிடமிருந்த புத்தூர் வங்கிப்பணம் தனது இறுதியை நெருங்கும் தறுவாயிலிருந்தது. புதிய நடவடிக்கைகளுக்கான பணத்தைத் திரட்டிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்கிறோம். அதற்கான சாத்தியமான அனைத்து வழிகளையும் விசாரணைசெய்கிறோம். இவ்வேளையில் திருநெல்வேலி அரச வங்கிக் கிளையிலிருந்து அங்கிருப்பவரூடாக ஊடாக சில தகவல்கள் எமக்குக் கிடைக்கின்றன.

இன்னும் வரும்..

பாகம் பத்தை  வாசிக்க..

பாகம்  ஒன்பதை வாசிக்க..

பாகம் எட்டை வாசிக்க..

பாகம்  ஏழை வாசிக்க..

பகுதி  ஆறை  வாசிக்க…

பகுதி ஐந்தை  வாசிக்க…

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

62 thoughts on “அடிமைச் சாசனம்- புலிகளின் எதிர்வினை – ஈழப்ப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 12)”

 1. இப்படி எல்லாம் ஒற்றுமையாக….ஆரம்பிக்கப்பட்டபோராட்டம் (?) அடக்கப்பட்டுவிட்டது…
  அடக்குமுறை மட்டும் இன்னும் தொடர்கிறது….. எங்கே தவறு விட்டோம்…எப்படி தவறவிட்டோம்……மீண்டும் எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது….வழி என்ன…ன்ன…..ன்ன….ன….ன……
  வழி என்ன….ன…..ன..ன…..

 2. இப்படி எல்லாம் ஒற்றுமையாக….ஆரம்பிக்கப்பட்டபோராட்டம் (?) அடக்கப்பட்டுவிட்டது…
  அடக்குமுறை மட்டும் இன்னும் தொடர்கிறது….. எங்கே தவறு விட்டோம்…எப்படி தவறவிட்டோம்……மீண்டும் எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது….வழி என்ன…ன்ன…..ன்ன….ன….ன……
  வழி என்ன….ன…..ன..ன…..

  அன்புடையீர், நீங்கள் எழுதியது எனக்கு புரியவில்லை ஆயினும் ஒன்று மட்டும் உணரக்கூடியதகா உள்ளது அது என்னவென்றால், தாங்கள் வெளிநாடு ஒன்றில் இருப்பதும், எப்படி போவது? என “வழி ” தெரியாமல் தவிக்கிறீர்கள் என்பதும். இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை ஏர் லங்கா டிக்கெட் நானுறு பவுன்ச்சிற்குள் தான் வரும். சில travel agents discount price ல் டிக்கெட் தருகிறார்கள். உங்களுக்கு டிக்கேட் வாங்குவதற்கு பண பிரச்சனை ஏதும் இருக்குமாயின், ஆதாரத்துடன் நிருபியுங்கள் நான் இனிஒரு இணைய தள வாசர்கள் மூலம் “கலெக்சன்” செய்து உங்களை “வழி” அனுப்பி வைக்கிறேன்.

 3. தமிழர்கள் ஒற்றுமையாக இருந்ததாக தமிழர்கள் மட்டும் தான் கனவு காண்கி…………

  பிரபாகரனுக்கு பயத்தில் பணம் கொடுத்தார்க…………….. தவிர ஒற்றுமை எப்படி,எங்கே
  கிடைக்கும் தமிழரிடம்?

  1. கொஞ்சம் பொறுங்கள் ஒற்றுமையை நீங்கள் இங்கேயே பார்க்கலாம்

   1. ஒருவர் புகுந்த வழியால் மற்ரவரும் புகுந்துபோவதில் மட்டுமே தமிழர்கள்
    ஒற்றுமை. போனவர் போய் கிணற்ரில் விழுந்தால் மற்ரவரும் விழுவார்.

    இதுவே தமிழரின் விடுதலைப்போரில் நடந்தது. புலியின் பிரச்சாரத்தினை
    நம்பிய புலத்துத்துத் தமிழர் புலியின் பின்னே சென்றார்கள். ஆனால் ஒர்றுமையாக் செல்லவில்லை. சென்றிருந்தால் புலியினை வழி திருப்பியிருக்கலாம்.

    புலத்தில் புலியினை வழிநடத்தியவர்கள்
    தமிழரின்
    ஒற்றுமையிலோ விடுதலையிலோ, உருமைகளிலோ அக்கறை கொண்டவ்ர்களல்ல. சிங்களவ்ர்களிலும் மோசமாக புலத்தில் வாழும் தமிழர்களை ஏமாற்றியவர்களே பெரும்பாலான புலியின் ஆதரவாளர்கள்.

    தமிழரிடம் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வளர்ப்பதற்கே
    ஓர்
    தலைமை தேவை. அதன் பின்பே விடுதலை.

    துரை

    1. இதுவரை இல்லாத தலைமையா இனிவந்து தமிழரை ஒற்றுமைப் படுத்த? இப்படி ஒரு தலைமை இனி வானத்தில் இருந்துதான் விழவேண்டும். சிங்களவரின் இராஜா தான் இனி இலங்கை மக்கள் எல்லோருக்கும் இராஜா என்று சொல்கிறார். இவர் தான் தமிழரின் “மேசியாவோ”? யூதரின் மேசியா தான் உயிர் துறந்து மானிடரை இரட்சித்தார், இவர் மானிடரை அழித்து தன்னையும் தன் சொந்தத்தையும் வாழவைத்தார்.

     1. ஒரு வீட்டில் உள்ளவர்களிடையே கூட ஒரு குடும்பமாக இருந்தும் ஒற்ருமை இல்லாத நிலமைகள் உள்ளது. தமிழர் ஒருநாட்டிலா
      உள்ளார்கள்.? உலகம் முழுவதும் பரந்து
      வாழ்கின்றார்கள். இவர்களிடம் ஒற்றுமையை

      எதிபார்ப்பது ஆழ் கடல் வத்தும் வரை
      காத்திருப்பது போலாகும்.

      இவர்களின்
      கொடுமைகளை புலம் பெயர் நாடுகளில்
      அக்திகள் அந்தஸ்து கொடுத்த் நாடுகளே
      யாருக்குச் சொல்வதென திண்டாடுகின்றனர்.

      இனியொரு நாடா ஈழ்த்தமிழர்களிற்கு தேவை.
      மனிதர்களிற்கு மதிப்ப்புக் கொடுத்துப்பழகட்டும்
      முதலில். துரை

   2. ஓற்றுமை தேவை என்பதில் நாம் மாறுபட முடியாது. பூரண ஒற்றுமையோ எல்லாரும் ஒரே குரலில் பேசுவதோ இயலுமானதுமல்ல, ஆரோக்கியமானதுமல்ல.
    முதலில் முக்கியமான சில அடிப்படைகளில் நாம் உடன்படலாம். பின்பு குறுகிய கால வேலைத் திட்டங்கள் பற்றி உடன்படலாம். நீண்ட காலத் திட்டங்கள் பற்றி விவாதித்துக் குறைந்தபட்ச உடன்பாடு காணலாம்.
    இவை இயலாதனவல்ல.
    தமது முடிந்த முடிவுகளை மற்ற எல்லார் மீதும் திணிக்க முயலாதவர்கள் ஒற்றுமைப் படுவது இயலுமானது.

    நேர்மையாகவும் வெளிப்படையாகவும் சனநாயக முறையிலும் உரையாடல் இயலாததல்ல. 50 வருட கால அதிகாரத்துவச் சிந்தனைச் சூழலிலிருந்து மெல்ல மெல்ல வெளிப்பட்டு வந்துள்ள ஒரு சமூகத்துக்குக் கொஞ்சம் காலமெடுக்கலாம். அதனால் ஒன்றும் குறைந்து விடாது.

 4. ஐயர் அவர்களே!
  பஸ்தியாம்பிள்ளை கொலையும் அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான தங்கள் தகவல் சற்று குழப்பமாகவே இருக்கின்றது!!
  இந்த “பஸ்தியாம்பிள்ளையின்” ஏவலால் கீழ் மட்டத்திலுள்ள பல போலீஸ் உத்தியோகத்தினர் மன ரீதியாகவும்,உடல் ரீதியாகவும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர் சொல்ல்பபோனால் அவன் சொல்வதை செய்யாவிட்டால் பல இன்னல்களை அனுபவித்தனர்அதிகார பலனும்,உடல் பலனாலும் தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற கர்வத்தில் இருந்தான் . பல உத்தியோகத்தினர் அவனது அழுத்தம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள்,சித்திர வதைகளுக்கு பரிசாக தங்கள் உயிரை விடனர்.எஞ்சிய தமிழ் போலிசார் பச்தியாம்பில்லையை ஒழித்துக்கட்ட முடிவும் செய்தனர் இப்படியான நிலையில் தான் புலிகளினால் பஸ்தியாம்பிள்ளை கொல்லப்பட்டான்.

  பஸ்தியாம்பிள்ளையின் கொலைக்கு போதிய தகவல்கள்(பெட்டிசன் போடும் பெரிய மனிதர்களிடமிருந்து) மற்றும் தடயங்கள்( கொலை நடந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டவை)யாவும் கீழ் மட்ட தமிழ் பொலிசாரினால் அழிக்கப்பட்டன,அவர்கள் கைமீறி சென்ற தகவல்களுக்கான விசாரணைகளும் அக்கறை காட்டாது கடைமைக்கு விசாரிக்கபட்டு இடைநிறுத்தப்பட்டது.இவை வெளியுலகுக்கு தெரியாத விடயங்கள்

 5. மிக தீவிரமாக தேடப்படும் நால்வர் பட்டியலிருந்த வாம தேவன் பின் பிளட்டில் இணைந்து கொண்டார். பிளட்டின் மோசமான பின்னடைவிற்கு காரணமானவர்களில் ஒருவர். பம்பாய் “தாதாகளில் ” ஒருவராக பின்னாளில் திரிந்தவர் இப்போ உயிருடன் இருகிறாரா தெரியாது.

 6. தோழர் மாமணி

  பிளாட்டின் முன்னடைவிற்கு காரணமான தளபதிகள்; ஆச்சி ராஜன் ,பரந்தன்ராஜன் ,மாணிக்கதாசன்,கந்தசாமி@சங்கிலி,பாலமோட்டை சிவம் @மென்டிஸ் ,டம்பிங்@முர்த்தி.தற்போது முர்த்தி சென்னையில் பாதிரியாக கடமை செய்கிறார்,சிவம்@மென்டிஸ் ஐரோப்பிய நாடோண்டில் இருக்கிறார்

  1. ஆச்சி ராஜன் அண்மையில் இறந்து விட்டார்

 7. பஸ்தியாம்பிள்ளைக் கொலையில் செல்லக்கிளி அதிரடி நடவடிக்கைகள் எமக்கு உண்மையில் பிரமிப்பாகவே இருந்தது. செட்டி கூட இப்படித்தான். இப்படியான சந்தர்ப்பங்களில் துணிவாகச் செயற்படும் திறமை படைத்தவர். அவரது வாழ்க்கை முழுவதும் குற்றச் செயல்களோடு தொடர்புடையதாக இருந்ததால் தயக்கமின்றி முன்செல்லக் கூடியவர். பலம்மிக்க கட்டுக்கோப்பான இராணுவத்தைக் கட்டியமைப்பதே விடுதலையைப் பெற்றுத்தரும் என நம்பியிருந்த பிரபாகரன், அந்த இராணுவத்தைக் கட்டியமைப்பதில் செட்டி போன்ற துணிச்சல் மிக்கவர்கள். காத்திரமான பங்கு வகிக்க கூடியவர்கள் என நம்பியிருந்தார்.”

  இந்து தத்துவம் வர்ணாசிரம தர்மம் (வர்ணாஷிரம தர்மா) என்ற கோட்பாட்டின்பாடி இனம் பிரித்து அழைக்க பிரிவுகாளாக வகுத்தனர்.

  பிராமணர்-புலவமை வாயந்த சமூகத்தவர்- அர்ச்சகர், புலவர், சட்ட ஆலோசர், அமைச்சர்கள், இராஜதந்திரி இவர்களை உள்ளடக்கியது.
  சத்திரியர்- உயர்வான குறைபண்புடையோர்-அரசர், மரியாதைக்குரியவர், வீரர்கள் மற்றும் ஆளுமையுடையோர்களை உள்ளடக்கியது.
  வைசியர்- வணிகர் மற்றும் தொழில் முனைவோர் சமூகத்தார்-வணிகர், சிறு வியாபாரிகள், தொழிலதிபர் மற்றும் பண்ணையார் இவர்களை உள்ளடக்கியது.
  சூத்திரர்- சேவகப் புரியும் சமூகத்தார்-கடின உழைப்பாளர், கூலித் தொழிலாளர்களை உள்ளடக்கியது.
  வர்ணத்தின்படி குணங்கள்
  வேதாந்த காலத்தில் வர்ணங்கைளை அடிப்படையாகக் கொண்டு குணங்களும் வகுத்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன்படி சாத்வீகம்- அமைதி, இராஜசீகம்- மூர்க்கம் மற்றும் ஆர்வமிக்கவர், கிளர்ச்சி குணம். தாமசீகம்-சிரத்தையற்ற, குறை குணமுள்ளவர்கள், மந்த குணம், சோம்பல் என்ற மூன்று குணங்களாகப் பிரித்துக் கொண்டனர்.

  பிராமணர் – மிகு சாத்வீகம்.
  சத்திரியர்-குறை சாத்வீகம்- அதிக ராஜசீகம், குறை தமாசீகம்.
  வைசியர்-சாத்வீகமற்றவர், குறை ராஜசீகம், அதிக தாமாசீகம்.
  சூத்திரர்-சாத்வீகமற்றவர், ராஜசீகமற்றவர், தாமசீகம் மட்டும்.
  ட்

  1. ‘ஆரிய’ இனக் கோட்பட்டின் அடிப்படையிலான இந்த நால் வர்ணப் பகுப்பு தென்னிந்தியாவிற்கும் இந்தியாவின் பிற சில பகுதிகட்கும் பொருந்தாது.

   வர்ணாசிரமம் தமிழ்நாட்டில் இருந்த சாதி முறை சேர்ந்தே தமிழ்ச் சாதிகள் உருவாயினை. அதில் முக்கியமாக மிகச் சிறுபான்மையான பார்ப்பனரும் ஏகப் பெரும்பான்மையான சூத்திரருமே இருந்தனர். க்ஷத்ரியர் எனும் ஆளும் வர்க்கம் இருக்கவில்லை.
   வைசியர் என்போரும் பின்னர் அடையாளங் காணப்பட்ட வணிகர்களே.
   சூத்திர நிலவுடமையாளர்களான வேளாளர் பார்ப்பனருடன் சேர்ந்து அரச ஆதிக்கம் செலுத்தியதாகவே தெரிகிறது.
   வர்ணாசிரமத்திற்கு வேளியே வரும் பஞ்சமர், பழங்குடிகள் தவிர்ந்த இந்தியரின் சனத்தொகையில் 20%க்குக் குறையாதோர்.
   “வேதாந்த காலம்” என்று ஒன்று இல்லை. வேத காலம் என்பது பார்ர்பனியம் நிலைபெற முன்பு இருந்த ‘ஆரிய சமூக’ வாழ்க்கைக்குரியது.

   தயவு செய்து விளக்கங்கள் என்ற பேரில் சாதிய வர்ணாசிரமச் சிந்த்தனைக்கு நீரூற்றாதீர்கள்.

   1. தேவர்,கவுண்டர், வன்னியர், நாயுடுக்கள், ரெட்டிகள், மராட்டியர் எல்லாம் விவசாயம்தான் செய்கிறார்கள்.தமிழகத்தில் நட்டுவரும் வேளாளர் மற்றூம் பிள்ளமாரும் வேளாளர் நாங்கள் பிள்ளமாரில் வருவோம்.

   2. நான் எங்கே வந்தாலும் நீங்கள் எங்கே வந்தாலும் வர்ணசிரமத்தின் படி — நானோ நீங்களோ தலித்தோ பார்ப்பானோ இல்லாவிட்டால் — நாம் சூத்திரர் தான்.
    கீறிப் பார்த்தால் எல்லாருக்கும் ரத்தம் ஒன்று தான் என்பது தெரியாமல் சாதித் திமிர் கண்ணை மறைக்கிறது.

 8. தம்பிப்பிள்ளை சந்ததியார் is not from chankannai,he is from Chulipuram east.Pls do correct this ,ayer.

  Enrum nanriudan Chulipurathan

 9. ஈழப்போராட்ட வரலாறு எழுதி முடிக்கும் தறுவாயில் புலிகளால் பாரிசில் படுகொலை செய்யப்பட்ட சபாரத்தினம் சபாலிங்கம் வேலணையைச் சேர்ந்தவர்.ஐரோப்பாவில் பிரபல்யமாக வாழ்பவ்ரும்,சமுக சேவையாளரும் எழுத்தாளருமான யாழ் பிராமண சமுகத்தை சேர்ந்த ஒருவரால் புலிகளுக்கு “போட்டுக்கொடுத்தமயால்” சபாலிங்கத்தின் உயிர் புலிகளால் இலகுவாக பறிக்கக் கூடியதாக இருந்தது.சபாலிங்கம் செகரித்த தகவல்கள்,பதிவுகளை பின்னாளில் புஸ்பராஜா தன்னை முன்னிலைப்படுத்தி எழுதியது தான் “ஈழ போராட்டத்தில் என் சாட்சியம்”

  1. அந்த யாழ்ப்பாணப் பிரமுகர் தான் உண்டு தன் வேலையுண்டு வாழ்பவர் அவர் மீது சேறூ எறீயகிறீர்கள் வேலனையான்,ஊர்க்காரன் எண்டதும் ஓடி வந்து உரத்துப் பேசுவது எல்லாம் இங்கு வேண்டாம்.ஆதாரமற்றூ பேசுவது அழகல்ல.

   1. முத்தமிழ் காவலனே! வந்தனம்!

    “உரக்கப் பேசினால் உண்மை பொய்யாகாது” அது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.கிட்லர் வாழும் காலம் வரை பல உண்மைகள் வெளிவரவில்லை ஏன்? சரி வரலாற்றுக்கு போகாமல் சமகாலத்திற்கு வருவோம்.இவ்வளவு காலமும் புதருக்குள் ஒழித்திருந்து நடப்பதை அவதானித்த ஐயர் கூட மே பதினெட்டுக்கு பின்னர் தானே தலையை கொஞ்சம் வெளியே காட்டுகிறார். யாருக்கும் இன்று வரை குளிர் விட்டுப்போகவில்லை! எப்பவும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் தான் வாழ்கின்றனர் !! பட்டவனுக்குத்தான் தெரியும் அதன் வலி. உண்மை ஒரு நாள் வெளி வரும்.அதற்கு பலமாதமாகலாம்,வருடமாகலாம்.கிட்லர் பற்றிய தகவல்கள் கூட புதிது புதிதாக தற்போதும் வருகின்றதல்லவா?

    ஆதாரமற்று பேசுவது அழகல்ல என்று கூறியுள்ளீர்கள். நான் யாரையும் விரல் நீட்டி காட்டவில்லையே. இதே தளத்தில் ஆதாரம் எதுவும் இன்றி பெயர் நட்சத்திரத்துடன் ஒருவரைப்பற்றி நேரடியாகவே வசைபாடி உங்கள் பாசையில் சொல்வதானால் “சேறு எறியும்போது” எங்கிருந்தீர்கள்?

    வாசகர்கள் கவனத்திற்கு: ஐயர் என்ற பெயரில் பல பிரமுகர்கள் உள்ளனர் குழம்பிக்கொள்ள வேண்டாம் உதாரணம்;மணி ஐயர்,கணேஷ்ஐயர்,பத்மநாபா ஐயர்,குமாரசாமி ஐயர்,

    அதே போல ராகவன் என்ற பெயரிலும் பல பிரமுகர் உள்ளனர், பா.ராகவன்,ஆர் கே ராகவன், சி .ராகவன்.டோண்டு ராகவன்

 10. அவரோ விமானக் குண்டை வீணையில் பொருத்திக் கொடுக்க , அங்கு கொண்டு சென்று வைத்தது ஊர்மிளா என்று சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் கூறினார்கள் ஐயா நீங்கள் இதை அறிந்திருக்கவில்லையா ?

  1. இளங்குமரன் ? ஐயர் ஐயம் திரிபட அழகாகச் சொல்லுறார் . றக்கி பார்க்க,குண்டு தயாரிக்க,குண்டை விமானத்தில் செயலிளக்கச்செய்ய,விமானத்தில் துணைக்குச் செல்ல,குண்டு செய்வதை விடுப்பு பார்க்க என எத்தனையோ பேரை நியமித்து வெற்றிகரமா செய்து முடித்தோம் என்று நீங்கள் அவ்ரிட்டயே ” அறிந்திருக்கவிலயா? என்று கேக்கிறியள் என்ன திருநெல்வேலிக்கே அல்வாவா?

 11. பயத்தில் புலிகளுக்குப் பணம்கொடுத்து அவர்களை வளர்த்து விட்டனர் என்கின்ற வாதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. புலிகளையும் ஏனைய போராட்ட இயக்கங்களையும் சிங்களத் தலைமைகளே உருவாக்கின. தற்போது புலிகளின் முழுமையான வீழ்ச்சிக்குப்பிறகும் சிங்களத் தலைமை திருந்த வில்லை.தமிழ் மக்களை விரோதிகளாகவே அனைத்துச்சிங்களத் தலைமைகளும் பார்க்கின்றனர்.இலங்கையில் வாழும் தமிழ் இனத்தைக் கருவறுத்து ஒழிக்கவே சிங்களத்தலைமை விரும்புகின்றது. தற்போது நடந்து முடிந்திருக்கும் பாராளுமன்றத்துக்கான தேர்தல் முடிவுகளும் இதனையே புலப்படத்துகின்றன. சிங்கள மக்கள் விரும்பினாலும்சிங்களத்தலைமைகள் இலங்கை மக்கள் ஒன்றிணைந்து அமைதியாக வாழ்வதை விரும்ப மாட்டார்கள்.அதேபோல் எமது மக்களின் சாபக்கேடாக வந்தமைந்துள்ள வன்முறையின் அதியுச்சக் குழுக்களான ஈபிடிபி பிள்ளையான் கருணா போன்றவர்களும் போலியான தமிழ்த் தலைமைகளை உருவாக்குவதன் மூலம் சிங்களப் பேரினவாதத்திற்கு தமது சுய லாபங்களுக்காக உதவிக் கொண்டுதான் இருப்பார்கள். எனவே இலங்கையில் மீண்டும் தமிழர் போராட்டம் ஒன்று வெடித்தே தீரும். தமிழ்மக்கள் இனியும்சாகப் போகிறார்களே எனக் கண்ணீர் வடிப்பவர்கள் தயவு செய்து இனவாதச் சிங்களத் தலைமைகளையும் போலித் தமிழ்த் தலைமைகளையும்தோற்கடிக்கப் போராடுங்கள்.

  1. அண்ணெ வெண்டவன் திருந்த தேவையில்லை… 🙂 அவனுக்கு இன்னொரு சான்ஸ் இருக்கு

 12. இதெல்லாம் புலுடா கள்ளக்கடத்தல், கள்ளத்தோனி ஆள் கடத்த்லுக்கு அரசு தடையாக இருந்தது தான் இந்த பிரச்சனை.தமிழன் இரண்டாம் குடிமகனாகியிட்டான் என்பது இந்த டொட் டொட் மகனுகளுக்கு ஒரு சாட்டு.இப்ப பாக்கத்தெரியேல்லையே பினாமி பணத்திலை எப்படி ஏப்பம் விடுறாங்கல் என்று.கஸ்டப்ப்டுற சனரத்திற்கு ஒரு சல்லிக்காசாவது கொடுக்கிறானுகளா? இந்த ரூட்டிங் காரனுக?அவங்கள் தண்ணிக்குள்ளாலை கடத்தல் என்ன கடத்தல்? நெருப்பே கொண்டுவருவானுகள்.பாட்டன்,பூட்டன்,அப்பன்,மவன், எல்லாம் ஒன்டாய் சேர்ந்து தானெ கிரிமினல் வேலை செய்யிறவங்களாம்.தலை கீழா நிண்டாலும் நம்மாலை முடியாதப்பா

  1. கள்ளக் கடத்தல் வடக்கில் மக்களின் பரம்பரத் தொழிலல்ல.
   ஆற்றல் மிக்க மாலுமிகளின் வாழ்வாதாரம் பறிக்கப் பட்டநிலையிலேயே சென்ற நூற்றாண்டின் நடுவில் கள்ளக் கடத்தல் ஒரு வாழ்க்கை முறையாயிற்று.
   தவறுகளை நியாயப்படுத்தாமல் மனிதரின் சூழ்நிலைகளையும் நாம் கணிப்பில் எடுப்பது நன்று

   1. இந்த ஞானோதயத்தை,குண்டுசட்டிக்குள் மட்டும் சிந்திக்காமல்,மற்றவர்களுக்கும் “அப்ளை” செய்து பாருங்கள்!.

    1. த்ம்பி ஜேம்ஸ் ஏட்டுச்சுர( ற)க்காய் கறி(ரி)க்குதவாது நீர் அரை(றை) குரை(றை)யா அம்புலிமாமாவைப் படித்திட்டு வேதாளம் மாதிரி மாட்டு இறைச்சிக்கதை இங்கே சொல்ல வேண்டாம். ஸ்கூல் பைடயனே

     1. “super-ego delusion” is not superiority complex,it is some sort of madness.Affecting mostly “island people” like Japan,UK ect…(more citation needed).Iam not applying it to Srilankantamils.But,in the context of “Chinese influence through Srilanka” I apply!.There was “Premadasa Syndrome” during IPKF period!,there was “furious anti-Indian sentiment” was expressed- which was nothing to do with “solving the srilankan ethnic? problem”.Colomboo based Mr.Geethan ponkalan may have said,it was “colonial mentality(servant)”. But what soever,There are lot of LTTE caders in srilankan custody.They could not kill all of them(like mad cows).K.P. is there to monitor expatriate financial network.If Premadasa syndrome works again,if China does’nt deny as far as it not affecting it,then Andhrapredesh cadres are doing the same mistake like V.Prabakaran,..That is to destroy their own middleclass and paving the way for Billionairs to play their corporate games.

   2. மணியம் அண்ணை,
    வேதாளக்கதைகாரன் வேறை எங்கையோ ‘பிடரி’யிலை வாங்கின சூடு பொறுக்காமல் இந்தக் கதைக்குள்ளை வந்து விழுந்திருக்குது.
    வழக்கம் போலை வாயிலை வந்ததை உளம்புது.
    அதின்டை பேய்க் கதைகளுக்குக் காது குடுத்தால் நீங்களுமெல்லோ பேயனாப் போவியள்.

  2. மனியம் அண்ணை
   நல்லா எம்பிட்டுப் போச்சினை எண்டாச் சிலபேர் பண்பாடு பவுதிகம் உளவியல் எண்டெல்லாம் அவித்து விடுவினை. எதுவும் தெரிஞ்செண்டில்லை. மற்றவைக்குப் புலுடா விட்டுத் தாங்கள் தோக்கேல்லை எண்டு காட்டத் தான்.
   அதுவும் ஒரு மாதிரியான சைக்கோப் பிரச்சினை தான். கேட்டுச் சிரிச்சிட்டு இருங்கோ

   இந்திய அரசாங்கத்தின்டை கதை அமெரிக்காவின்டை மாதிரி ஆப்பிழுத்த குரங்கின்டை கதை மாதிரியாப் போச்சு.நேபாளத்திலையும் சனங்கள் நடுவிலை நம்புவாரில்லை.
   இலங்கையிலையும் சிங்களச் சனமும் நம்பாது, தமிழ்ச் சனமும் நம்பாது. என்ன செய்யிறது?
   இனி ராசபக்சவை வைச்சுச் சம்பந்தனை பேய்க் காட்டுவினையோ? சம்பந்தனை வைச்சுச் ராசபக்சவைப் பேய்க் காட்டுவினையோ?
   சனம்நம்பாது
   எல்லாரையும் ஏமாத்தப் பாக்கிறவை பாடு இப்பிடித்தான்.

   1. The Chinese “String of Pearls” strategy around India appears to be have broken. By definition, the “String of Pearls” describes the manifestation of China’s rising geopolitical influence through efforts to increase access to ports and airfields, develop special diplomatic relationships, and modernize military forces that extend from the South China Sea through the Strait of Malacca, across the Indian Ocean, and on to the Arabian Gulf (USAF Lieutenant Colonel Christopher J. Pehrson, “string of Pearls: meeting the challenge of china’s rising Power across the asian littoral” July 2006, Strategic Studies Institute, United States Army War College).
    Around India, the Chinese pearls include Myanmar, Bangladesh, Nepal, Sri Lanka, Maldives, Mauritius, Seychelles and Pakistan.

    Currently there might be no comprehensive policy by the current Indian government to contain it, but, a mix of luck, some policy, some internal and external events seem to have worked in favour of India.
    Sri Lanka: This is another area where China is trying to influence. Hambantota port is being developed by China and China is a supplier of military wares to Sri Lanka. Indian influence in Sri lanka is not expected to be lost.
    There are two more countries that are within the Chinese String of Pearls strategy, i.e, Thailand and Cambodia. Thailand has a proximity with Indian Andaman and Nicobar Island. India needs to work on relations with Thailand. Cambodia is currently of less direct significance to India.
    For china, the fight for dominance over these regions is not yet over as it needs to secure its energy and trade route with Middle East and Africa. India needs a strategy to keep these gains and discourage Chinese dominance within Indian Ocean.

 13. தொடர்ச்சி…. சிலோனுக்கு போனால் அவங்கடை கடற்கரை மண்ணிலை ஒருநாள் முழுவதும் உருண்டு பிரண்டுட்டு வரவேணும். என்னென்றால்…………………………………………………………………………………………… அவங்கள் பிழைக்கத்தெரிந்த்ச்வங்கள். எலிப்படை தான் பொருத்தமான பெயர்.ராஜபக்ச குடும்ப அரசியல் இவங்கள் ……….. நல்ல வேளை தமிழன் தப்பியிட்டான் இல்லாட்டி திரும்ப போராடி இவங்களிட்டையிருந்து……….

  1. அண்ணை
   இப்ப வேதாளம் என்ன சொல்லுதெண்டா இந்தியா இந்து சமுத்திரதுக்குக் குறுக்கை கம்பம் நாட்டி அயலிலை உள்ள எல்ல சின்ன நாடுகளையும் அதிலை தொங்கப் போட்டுத் தோரணங் கட்டவேணும் எண்டு. மாறா ஆரேன் வாய் திறந்தாச் சீனப் பொக்காண்டி வாறான் பிடிச்சுக் குடுத்திடுவன் எண்டு வெருட்டலாமாம்.
   என்னண்ணை ஒண்டும் சொல்ல மாட்டியளோ?
   அதின்டை பேய்க் கதைகளுக்குக் காது குடுத்தால் நீங்களுமெல்லோ பேயனாப் போவியள் எண்டு நினைச்சோ?

 14. ஐயா விடம் ஒரு விசயம் ஆவலாய் கேக்கிறேன் பதில் தரவும்;
  ஒரு தடவை ப்ரா என்ற ரவியும் பிரபாகரனும் காட்டுவழியால் சென்றுகொண்ட்ருக்கையில் ஒரு கரடியைக் கண்டுவிட்டனராம்.கரடியும் இவர்களை கண்டுவிட்டதாம்.உடனே பிரபாகரன் சாரத்தை சண்டிக்கட்டு கட்டு கட்டிக்கொண்டு ஓடத்தொடங்கினாராம் இதற்கு ரவி சொன்னாராம் எடேய் கரடி எங்களை விட வேகமாக ஓடும் ஆகவே ஓடித்தப்ப முடியாது நின்று வெடி வைப்போம் என. இதற்கு பிரபா சொன்னாராம் நாட்டுத்துப்பாகியால் கரடியை சுட முதல் கரடி முந்திவிடும் உன்னை விட வேகமாக ஓடினால் கரடியிடமிருந்து நான் தப்பிக்கலாம்.நீ மெதுவாகவே நடந்து வா நான் இல்லாவிட்டால் இயக்கத்தை வழிநடத்தமுடியாமல் போய்விடும் என்று. இந்த சம்பவம் உண்மையா? இது ரவிக்கா ராகவனுக்கா நடந்தது? இதனாலா இவர்கள் விலகினார்கள்

  1. இல்லை, இரண்டு கரடி வந்ததாம். இருந்ததோ ஒரு துப்பாக்கி ஒரு குண்டு. என்ன செய்வது என்று யோசித்த பிரபாகரன் கையில் இருந்த சின்னக் கத்தியை துவக்குக்கு முன் புடித்துக்கொண்டு சொன்னாராம் இப்ப சுடு என்று. சுட்டபோது தோட்டா இரண்டாகப் பிளந்து இரண்டு கரடியையும் சுட்டுக் கொன்றுபோட்டுதாம்.

   1. எல்லாரும் ஒரே ஜோக் அடிக்கிறேங்க. மற்ற பக்கத்தில புலிகளின் குரல் வானொலி ஸ்ரீலங்காவில எல்லாரும் கேக்க வேணும் எண்டு காசு சேர்க்க தொடன்கீற்றாங்க.

   2. சுரியா

    எதிரியை பிரபா “குறிவைத்து சுட்டதாக வ்ரலாறு இல்லை கூட இருந்தவர்கலயே தலைவர் சந்தேகத்தில் கொன்றிருக்கிறா மனைவியைகூட ஒருகட்டத்தில் நம்பவிலை என இருந்தவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிரேன். அதனை நீருபித்ததற்கு நன்றி

   3. எதுவும் பிரபாகரன் சாகவில்லை விரைவில் திரும்பி வருவார் என்று சொல்லுவதை விடக் கொடுமையான பகிடியா?

 15. அன்பர்களே! மூன்றில் குரு இருக்கும்போதே துரியோதனனுக்கு தலை போனது என்பது புராணம்.
  தலைவர் பிரபாகரனுக்கு மூன்றில் குரு இருக்கும்போதே வணனிப்போர் முமரமாக நடந்ததை அறிவீர். சென்னை, திருவெல்லிக்கேநியிலுள்ள “இந்தியாவின் தலைசிறந்த ஜோதிடரின் ஆலோசனையின் படி சித்திரை பத்தொன்பது வரை தலைமறைவாக இருக்கிறார். வருகிற குருப்பெயர்ச்சியின் பின்னர் (சித்திரை பத்தொன்பது) தலைவருக்கு ராஜ யோகம். தமிழிழம் என்ற கனவு நனவாகும்.

  1. இதென்ன பகிடி! சூரியக்கடவுளுக்கு குருவை மூண்டுக்கு வராமல் இரண்டரையில நிப்பாட்ட ஏலாமல் போச்சுதோ?

 16. அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழினம் முதலில் தன்னிடம் இருந்து விடுதலைபெறவேண்டும். அதுநடக்காதவரை , எமக்கு எத்தனை பிரபாகரன்கள் வந்தாலும், விடுதலையும் கிடைக்காது, விமோசனமும் கிடைக்காது.

  எந்த ஒரு மனிதன் தன்னைநேசிக்கிறானோ..அவனாலேயே மற்றவர்களையும்நேசிக்க முடியும்.மற்றவர்களை நேசிப்பவன் நிச்சயம், தான் பிறந்த மண்ணை , தன் மொழியை , தன் இனத்தை காதலித்தே தீருவான்.

  இங்கு சில பேர் தன்னையும்நேசிக்கவில்லை, தன் இனத்தையும் நேசிக்கவில்லை , தான் பிறந்த மண்ணையும்நேசிக்கவில்லை என்பது தலைவர் திரு.பிரபாகரனையும், போராளிகளையும் வசை பாடுவதிலிருந்தே புரிகிறது.

  இங்கு சில பேருக்கு ‘றயனிதிரணகம’ வைபற்றி எழுதத் தெரியுது, ஆனால் சிங்கள இராணுவத்தால் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொல்லப்பட்ட கிருசாந்தியையோ , கோணேஸ்வரியையோ அல்லது சாராதாம்பாளைப்பற்றியோ எழுத மனசில்லாமல் இருக்குது. இன்னும் சில பேர் கதிர்காமர்,நீலந்திருச்செல்வம் , யோகேஸ்வரன் போன்ற அரச விசுவாசிகளுக்காக அழுகினம், ஆனால் புலிகளே அல்லாத , ஆனால் தமிழ் மக்களுக்காகவே எண்டு பாடுபட்டு உயிர்நீத்த புத்தியீவிகள் பற்றி மவுனமாய் இருக்கினம். கேட்டால் அவெர்களு ம் புலிகள் எண்டினம்.அவெர்களுக்கே புரியுது, தமிழ் மக்களுக்காய் பாடு படுபவர்கள் இறுதியில் புலிகளிடம் தான் போகவேண்டும் எண்டு. ஏனெனில் தமிழ்மக்களுக்காய் பாடு படுபவ்ர்களுக்கு பாதுகாப்பை புலிகளால் மட்டுமே கொடுக்க முடியும்.

  இவை எல்லாம் தெரிந்தும் பின்பு ஏன் புலிகளை இவெர்கள் எல்லாம் வசை பாடுகிறார்கள் எண்டு நினைக்கத் தோன்றும் அல்லவா . வேறொன்றும் இல்லை நண்பர்களே…. அந்தக் காலத்தில் அரசனைப்புகழ்ந்து பாடினால் ” பொற்கிளி” கொடுப்பார்களாம். மகிந்த அரச சபையில் புலிகளை இகழ்ந்து பாடினால், எலும்புக்கு பதிலாய் இறைச்சித்துண்டு கொடுப்பார்களாம்.


  எசமான்” எங்கேயோ…. அங்கே , அவனது காலடியில் தானே அவனது “அடிமைநாய்களும் ” குலைத்துக்கொண்டு படுத்துறங்கும்.

 17. //அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழினம் முதலில் தன்னிடம் இருந்து விடுதலைபெறவேண்டும். அதுநடக்காதவரை , எமக்கு எத்தனை பிரபாகரன்கள் வந்தாலும், விடுதலையும் கிடைக்காது, விமோசனமும் கிடைக்காது//தோட்டா இப்படியொரு தலைவ்ரிற்கில்லாத நல்புத்தி தோட்டாவிற்கு இருப்ப்தையிட்டு நான் இப்புத்தாண்டில்
  தோட்டாவுடன் சேர்ந்து ம்கிழ்கின்றேன். துரை

  1. Soorya —N
   தயவுசெய்து எந்தப் புராணம் என்று சொல்லுங்கள். துரியோதனனையும் பிரபாகரனையும் ஒப்பிடுகிறீர்கள். துரியோதனன் மீண்டதாக ஏதேன் புராணம் உண்டா?
   இப்போது ராஜ யோகத்தைக் காத்துக் கொன்டிருப்போர் தமிழ் மக்களில் 15% வீதமானோரின் ஆணையைக் கூடப் பெறாத கூட்டமைப்புக்காரர் தான். அவர்களுக்கு ராஜ யோகம் என்றால் தமிழ் மக்களுக்கு மரணயோகம் என்று திருவல்லிக்கேணியில் இல்லாத, தலை குழம்பாத, சோதிடரல்லாத ஒருவர் சொல்லுகிறார்.

   1. எதிரணீயில் கிருஸ்ணர் நிற்கிறார் துரியோதனா வேண்டாம் போர் என்றூ விதுரன் சொல்லியும் துரியோதனன் கேட் கவில்லை.சகுனி சொன்னதைக் கேட்டு மாண்டான்.எல்லாம் அந்த சிவனின் திருவிளயாடல்.யார் தடுத்தும் கெடுகிற குலம் கேட் காது.விதி வ்லியது.

 18. ///தமிழ் மக்களுக்காய் பாடு படுபவர்கள் இறுதியில் புலிகளிடம் தான் போகவேண்டும் எண்டு. ஏனெனில் தமிழ்மக்களுக்காய் பாடு படுபவ்ர்களுக்கு பாதுகாப்பை புலிகளால் மட்டுமே கொடுக்க முடியும். /// தோட்டாண்ணை!! புத்தாண்டு செய்தியைத் சொன்னீர்கள் ஓகே!! நன்றி!… அப்புறமென்ன பில்டாப்பு ணே;டிக்கிடக்கு புலிகள்தான் தமிழ் மக்களை காப்பாற்றுவார்கள் என்று?… நாட்டில் இப்போது புலிகள் ஒட்டுமொத்தமாகவே அழிக்கப்பட்டுவிட்டார்கள் எஞ்சியிருந்தோரும். தாங்கள் கூறியிருந்தவாறே மகிந்தவின் எலும்புத்துண்டை கடிக்கப்போட்டினம் அப்புறம் இப்போ யார் புலி யார் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்போறவர்கள்?….. ஓஓஓ!!! நீங்கள் ஒருவேளை புலன் பெயர்ந்து புலம்பெயர் தேசங்களில் கொஞ்சக்கூட்டத்தினர் நாடுகடந்த தமிழீழம் – வட்டுக்கோட்டைத்தீர்மானம் என்றும் கொ த்துரொட்டி வித்துக்கொண்டு திரிகின்றார்களே அவர்களைச் சென்னீர்களோ?… ஐயோ!!! அதுகளைப்பத்தி நீங்கள் சொல்லிட்டாலும்.

  1. நரேன்.. .பூனை ” எலியைப் “பிடிக்கிறதோட நிண்டா பூனைக்குத்தான்நல்லது. அதைவிட்டு ” புலி ” குதிரையைப் பிடிக்குது , எருமையைப் பிடிக்குது ,நான் பிடிச்சா என்ன எண்டு வெளிக்கிட்டா, பூனை நிலைமை என்ன ஆகும் தெரியுமோ.

   ஒரே ஆசிரியரிடம் படிச்ச எல்லா மாணவர்களும் , என்ன ஒரே தொழிலா செய்யினம். அவரவர் தங்கள் அறிவுக்கும், ஆற்றலுக்கும், தகுதிக்கும் ஏற்ற மாதிரித்தான் தானே தொழிலைப் பெறுகினம். தலைவருக்கு முதலும் , தலைவரோடும் , தலைவருக்குப் பிறகும் போராட்டத்தை ஆரம்பிச்சவை, என்ன ஆனார்கள் , எங்கு இறுதியில் போய் அடைக்கலமானார்கள் எண்டும் எங்களுக்கும் தெரியும் . என்னடா , பிரபாகரனை எல்லாரும் சூரியத்தேவன், உலகத்தலைவன் எண்டினம் , என்ன ” ஊராட்சித்” தலைவனாய்க் கூடா ஏற்கினம் இல்லையே எ ண்டு மகிந்தவுடன் சேர்ந்து புலம்பித் திரியும் ராகவனையும் பாத்திருக்கிறோம், பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்று, ஆட்பலத்தில் புலிகளையும் விடக் கூடுதலான உறுப்பினர்களை வைத்திருந்த அமரர்.திரு உமாமகேஸ்வரனுடைய படைநடத்தலையும்நாங்க்ள் தமிழ் மக்கள் பாத்துத் தானே இருந்தோம். எவனாவது ” மூக்கைப் பிடிச்சா….. வாயை ஆ எண்டத் தெரியாதாவர்கள் இருப்பார்கள் , அவர்களிடம் உங்கள் வேதத்தை ஒதுங்கள்:

   1. தோட்டாண்ணை!! மேற்படி தாங்கள் கூறியிருக்கும் பின்வரும் கருத்துக்களோடு /// தலைவருக்கு முதலும் தலைவரோடும் தலைவருக்குப் பிறகும் போராட்டத்தை ஆரம்பிச்சவை என்ன ஆனார்கள் எங்கு இறுதியில் போய் அடைக்கலமானார்கள்/// என்பதெல்லாம் ஒருபக்கத்தே இருக்கட்டும். உங்க தலைவரும் கடைசியில் என்ன ஆனார் ஏன் அடைக்கலம் தேடி வெள்ளைக் கொடியோடு போனார்? என்று கேட்டுப்பாருங்க எல்லாம் சரிவரும். நீங்க எப்பவுமே அடுத்தவர்களைப்பத்தி விமர்சனங்கள் செய்வதற்கு முதல் உங்களை நீங்களே முதலில் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தவேண்டும். அது இல்லாதவரை நீங்கள் தமிழர் உரிமைகளுக்கான போரில் மட்டுமல்ல இந்தக் கருத்துக்களத்திலும் உங்களால் யாரையும் வெல்லமுடியாது.

   2. தோட்டா நீ புலி எதிர்ப்பாளனா அல்லது ஆதரவாளனா? ஏன் உவங்களிட்டை வாய்யைக்கொடுத்து………………………….. உன்ரை காலை விழுந்து கும்பிடுறேன் தயவு செய்து பொல்லைக்கொடுத்து ……………………… அவருடைய ஆத்மாவை சாந்தி அடைய விடு. நன்மை செய்யாவிட்டாலும் பறவாயில்லை தீமை செய்யாமல் இரு. நன்றீ மாறன்

 19. தலைவருடய V.V.T வீட்டை அரசு இடித்து தலைவருக்கு நினைவு தூபி மே பதினெட்டுக்கு முதல் அமைக்க உள்ளது. …………..தலைவர் உயிருடன் இருப்பது தெரியாது

  1. நீங்க பாருங்க தலைவற்றை தூபியை தலைவரே தலைவரே குண்டு வைச்சு தகர்ப்பார். அப்ப நீங்க ஒரு உண்டியல் குலுக்கி தலைவருக்கு ஒரு நீச்சல் தடாகம் கட்டி கொடுங்க என்ன. தடாகம் ஐந்து அடிக்கு மேல் ஆழமாக இருக்க கூடாது ஏன்னா தலைக்குநீச்சல் தெரியாது.

 20. யாழ்ப்பாணம், ஏப். 15-

  விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் பூர்வீக வீடு இலங்கை வல்வெட்டித் துறையில் உள்ளது. விடுதலைப்புலிகள் கடந்த ஆண்டு வீழ்த்தப்பட்ட பிறகு இலங்கையின் மற்றப்பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணத்தை இணைக்கும் ஏ-9 தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.

  விடுதலைப்புலிகள் பற்றிய பயம் இல்லாததால் சிங்களர்கள் வடக்கில் ஈழம் பகுதிக்கு தினமும் சுற்றுலா பயணிகளாக வந்தனர். குறிப்பாக பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீட்டை பார்க்க சிங்களர்களிடம் ஆர்வம் அதிகரித்தது.

  பெரும்பாலான சிங்களர்கள், பிரபாகரன் பிறந்த வீட்டில் இருந்து சிறிது மண் எடுத்துச் செல்வதை காண முடிந்தது. பிரபாகரன் பிறந்த வீட்டை வீரம் விளைந்த மண்ணாக அவர்கள் கருதுகிறார்கள்.

  பிரபாகரனுக்கு சிங்கள மக்களிடமும் செல்வாக்கு ஏற்படுவதைக் கண்டு சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு எரிச்சலும், ஆத்திரமும் ஏற்பட்டது. இதனால் சில தினங்களுக்கு முன்பு பிரபாகரன் வீட்டை அவர்கள் இடித்து நொறுக்கி விட்டனர்.

  வன்னியில் உள்ள மாவீரர்களின் நினைவுச் சின்னங்களை அழித்து விட்ட சிங்களப்படையினர் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் திலீபனின் நினைவு தூணை இடித்துத் தள்ளினார்கள். தற்போது பிரபாகரன் வீட்டை இடித்துள்ளனர்.

  தெற்கில் இருந்து வரும் சிங்களர்கள் கடந்த சில தினங்களாக வல்வெட்டித் துறை செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. பிரபாகரன் வீடு இருந்த பகுதிக்கு யாரையும் விடக்கூடாது என்பதில் யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவத்தினர் தீவிரமாக உள்ளனர்.

  கொழும்பில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 21. இன்னும் சில பேர் கதிர்காமர்,நீலந்திருச்செல்வம் , யோகேஸ்வரன் போன்ற அரச விசுவாசிகளுக்காக அழுகினம், யோகேஸ்வரனும் அரச விசுவாசியா? புலிகளால் கொல்லப்பட்டதால் அவர் அரச விசுவாசியா ?அல்லது அரச விசுவாசி என்பதால் புலிகளால் கொல்லப்பட்டாரா?

  ஆனால் புலிகளே அல்லாத , ஆனால் தமிழ் மக்களுக்காகவே எண்டு பாடுபட்டு உயிர்நீத்த புத்தியீவிகள் பற்றி மவுனமாய் இருக்கினம்.

  புலிகள் அல்லாத அரச மற்றும் மாற்றியக்கங்கள் கொலைசெய்த ஒரு தமிழ் புத்தி ஜீவியை கூறமுடியுமா?

  1. பத்திரிகையாளர்கள் புத்திஜீவிகளா இலையா?

   எல்லா இயக்கங்களும் தங்களுடைய வாய்ப்பு வசதிக்கேற்றபடி கொலை செய்தார்கள்.
   யாருக்கு யார் விளக்கம் கொடுத்தார்கள்?

   நம் போரட்ட வரலாற்றில் ‘நியாயப்படுத்த இயலாத’ கொலை எதுவும் நடந்திருக்கிறதா?

   1. அமிர்தலிங்கத்தை கொல்லபோன போது தவிர்க்க முடியாமல் யோகேஸ்வரனையும் கொன்று விட்டு இன்று அவரையும் அரச வருடிகள் என்றால் இந்த கொலை கும்பலை என்னவென்று சொல்வது. எல்லா சர்வாதிகாரநடவடிக்கைக்கும் துரோகி பட்டம் கொடுத்து தானே அரச படைகளின் காலை நக்கிய கொடுமையை என்னவென்று சொல்ல. இந்த கைம்புள்ளங்க ஆளாளுக்கு புது சரித்திரம் எழுதுவாங்க போல. சரணடைந்தவனை கொன்றதால் போர் குற்றவியலுக்கு பயந்து கொன்றவன் மெளனம் சாதிக்கிறான். நாம் செத்து விட்டார் சாகவில்லை செத்தால் சரணந்த்தாரா? அல்லது போராடி செத்தாரா? என்று குறூப் போட்டு அடி படுகிறோம்.

  2. எந்த அரசியற் படுகொலையும் ஏற்கத்தக்கதல்ல.
   ஓன்றை நியாயப் படுத்துகிற எவரும் தன்னை அறியமலே மற்ற அனைத்தையும் நியாயப் படுத்தி விடுகிறார்.
   அமிர்தலிஙத்தின் விடயத்தில் — “****, **** போன்றோருக்கு இயற்கையான சாவு வரக் கூடாது ” என்ற அவரது பிரகடனம் — தன்னுடைய கொலையயும் நியாயப்படுத்துவதாகி விட்டது.

 22. It is not reasonable to discuss something based on the failure. Failure is due to variety of reasons, from 9/11 to Karunanidhi.

  Go ahead and do (though it is small) whatever advances our cause. ..I am never going to read these again.. This is not constructive…/

  1. What is not constructive — believing fiction without questioning or questioning things in the open?
   It is more important to learn from failures. They teach much more than any success.

   What is “our cause”?
   It is time that the people as a whole decided what their cause is, rather than let individuals who are not affected by such decisions determine for others “their cause”.

 23. .
  It is a sin to be born as a Tamil in Sri Lanka, if it be before LTTE or after LTTE,.. it does not matter… Please go meet members of civil societies, MPS in your area, groups advancing our struggle. Do whatever you can. …Do not duscuss this here…. It is sickening. Good Bye.

  1. சென் முதலில் தமிழர்களிற்கு என்ன விடுதலை வேண்டுமென்பதை தமிழர்கள்
   தம்க்குள்ளே
   பேசித் தீர்மானித்த பின்பே பிற்ருடன் பேச வேண்டும். இந்தியாவில் இயக்கங்கள் தொடங்கிய
   காலத்தில் எல்லா கட்சிகழுடனும் எல்லா அமைப்புகழுடனும் பேசித்தான் வளர்ச்சியடந்தார்கள்.. ஆனால் அவ்ர்கழுக்கிடையே உள்ள கருத்து வேறுபாட்டினை பேசித்தீர்காமல் பிற்ரிடம் உத்வி பெற்ரதாலேயே ஒருவரை ஒருவர் அழிக்கத் தொடங்கினார்கள். புலம் பெயர்நாடுகளில் சரி இலங்கையில் சரி பயங்கரவாதப் புலிகளை விட யாராவ்து தமிழர் பிரச்சினை பற்ரி கதைக்க உருமை இருந்ததா?

   இப்போ
   நாடுகடந்த அரசின் செயற்பாடுகழும் புலிக்ளின் பயங்கரவாதத்தை ஏற்ரு தாமும் பலனடைந்தவர்களே வழிநடத்துகின்றது. இவர்களின் பின் செல்வோர் இன்னுமொரு முள்லிவாய்க்காலிற்கு தமிழரை கொண்டு செல்வார்கள். விடுதலையும்,அரசியலும்
   இரு வேறு துருவஙகள்.. நேற்று வரை விடுதலைப் போராட்டம் இன்று
   நாடுகடந்த அரசுக்கான் தேர்தல் சிரிப்பதா? அழுவதா? தமிழரை தமிழன் ஆழ்வதற்கு உருமை வேண்டும் தமிழர்களிற்கான் விடுதலையல்ல். எங்கும் ஆதிக்கம் எதிலும் ஆதிக்கம்.
   இதனைப் பற்ரி யாராவது பேசினால் துரோகிகள். துரை

Comments are closed.