அகதிகளை விடுவிக்கக் கோரி மலேஷியாவில் பிரமாண்டப் பேரணி.

போருக்குப் பின்னர் ஆபத்தான உயிர் அச்சுறுத்தலில் இருந்து தப்பி மலேஷியாவில் கரைஒதுங்கினர் 75 ஈழத் தமிழ் அகதிகள். அவர்களை ஏற்றுக் கொள்வதில் மலேஷியா தயக்கம் காட்டியதோடு இலங்கை அரசுடன் உள்ள நெருக்கத்தின் காரணமாகவும் பரஸ்பர புரிதலின் அடிப்படையிலும் அவர்களை இலங்கையிடமே ஒப்படைத்து விடுமோ என்ற அச்சமும் எழுந்தது. இந்நிலையில் ஐநா அவர்களை பொறுப்பெற்றுக் கொண்டது. ஐநா அகதிகளாக ஏற்றுக்கொண்ட பிறகும் மலேசிய அரசாங்கம் அவர்களை விடுதலை செய்யாமல் இருட்டறையிலேயே அடைத்து வைத்துள்ளது.இவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் விடுதலை செய்யப்படவேண்டும். அவர்களுக்கு அகதிகளுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும். இவையெல்லாம் மறுக்கப்படும் பட்சத்தில் மலேசிய பாராளுமன்றம் நோக்கி தமிழர்களை ஒன்றினைத்து மலேசியாவில் மாபெரும் பேரணி நடத்துவோம் என்று மாற்று செயலணி அமைப்பு அறிவித்துள்ளது.